பாதுகாப்பு படை புடைசூழ சாதாரண காரில் சாப்பிட வந்தது அவங்களா! நேர்ல பாத்ததும் எல்லாரும் ஒறஞ்சு போய்ட்டாங்க!

அம்பானி (Ambani) குடும்பத்திற்கு அறிமுகமே தேவையில்லை. இந்திய அளவில் மட்டுமல்லாது, ஆசிய மற்றும் உலக அளவிலும் அவர்கள் பெரும் பணக்காரரர்களாக திகழ்கின்றனர். மிகவும் விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பதால், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அம்பானி குடும்பத்தை பற்றிய செய்திகள் பலமுறை வெளிவந்துள்ளன.

அம்பானி குடும்பத்திற்கு பாதுகாப்பிற்காக வரும் அதிகாரிகள் கூட மிகவும் விலை உயர்ந்த கார்களைதான் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட அம்பானி குடும்ப உறுப்பினர்கள் ஒரு சாதாரண காரில் பயணம் செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மையில் நடந்துள்ளதால், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

Isha Ambani-Anand Piramal

முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகள் இஷா அம்பானிக்கும் (Isha Ambani), தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் (Anand Piramal) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவரும் அவ்வப்போது இரவு உணவிற்கு ஒன்றாக வெளியில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த வரிசையில் மும்பை நகரில் நடைபெற்ற ஒரு இரவு உணவு நிகழ்ச்சிக்கு இஷா அம்பானி-ஆனந்த் பிரமால் தம்பதியினர் ஒன்றாக சென்றிருந்தனர். இதற்காக அவர்கள் பயன்படுத்தியது மிகவும் சாதாரணமான டொயோட்டா கேம்ரி (Toyota Camry) கார் ஆகும். சமூக வலை தளங்களில் இந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

Isha Ambani-Anand Piramal Spotted In Toyota Camry

இத்தனைக்கும் அவர்கள் வந்தது டொயோட்டா கேம்ரி காரின் பழைய தலைமுறை மாடல் ஆகும். பாதுகாப்பு படையினர் புடைசூழ மிகவும் சாதாரணமான டொயோட்டா கேம்ரி காரில் முகேஷ் அம்பானியின் மகளும், மருமகனும் வந்தது சமூக வலை தளங்களில் தற்போது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

டொயோட்டா இன்னோவா (Toyota Innova) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஆகிய கார்களை போல், டொயோட்டா கேம்ரி காரும் உலக அளவில் பிரபலமான ஒரு கார்தான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா கேம்ரி காரின் விலை (Price) 46.17 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சற்று விலை உயர்ந்த காராக இருக்கலாம். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) உள்பட பல்வேறு நிறுவனங்களின் சொகுசு கார்களை வீட்டில் நிறுத்தி வைத்திருக்கும் அம்பானி குடும்பத்திற்கு இது நிச்சயமாக மிகவும் சாதாரணமான ஒரு கார்தான் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.

டொயோட்டா கேம்ரி மிகவும் அதிகமான மைலேஜ் தரக்கூடிய கார்களில் ஒன்றாகும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 19.16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இது ஹைப்ரிட் (Hybrid) கார் என்பதால்தான் இவ்வளவு அதிகமான மைலேஜ் கிடைக்கிறது.

டொயோட்டா கேம்ரி காரில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சில சமயங்களில் மிகவும் எளிமையான விஷயங்களை விரும்பக்கூடிய பலர் இங்கே இருக்கின்றனர். இந்த வகையில் இஷா அம்பானி-ஆனந்த் பிரமால் தம்பதியினர் சாதாரண டொயோட்டா கேம்ரி காரில் பயணம் செய்வதை விரும்பியிருக்கலாம். அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பு வழங்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 22, 2023, 17:41 [IST]
English summary
Isha ambani anand piramal spotted in toyota camry viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+