சாலையில் சுற்றிய 7 கோடி ரூபாய் கார் அவங்களோடதா! சொகுசு கார்களை வாங்குவதில் அம்மாவுக்கும், பொண்ணுக்கும் போட்டி!

முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) குடும்பத்தினர் சொகுசு கார்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதற்கு முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் (Isha Ambani) விதிவிலக்கு அல்ல. இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மிகவும் விலை உயர்ந்த பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) கார் ஆகும்.

இது எஸ்யூவி (SUV - Sport Utility Vehicle) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பென்ட்லீ பென்டைகா காரின் ஆரம்ப விலையே 5 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.75 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். இஷா அம்பானியின் இந்த விலை உயர்ந்த பென்ட்லீ பென்டைகா கார் சாலையில் வலம் வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளது.

Isha Ambani Buys Bentley Bentayga Luxury SUV

ஆனால் இதுதான் முகேஷ் அம்பானி குடும்பத்தின் முதல் பென்ட்லீ பென்டைகா கார் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அவர்களிடம் இதற்கு முன்னதாகவே 4 பென்ட்லீ பென்டைகா கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு பென்ட்லீ பென்டைகா காரை, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி (Akash Ambani) ஓட்டுவதை கடந்த காலங்களில் நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

இஷா அம்பானி வாங்கியுள்ள பென்ட்லீ பென்டைகா காரில் 4.0 லிட்டர் 8 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 542 பிஹெச்பி பவரையும், 2,000-4,500 ஆர்பிஎம்மில் 770 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Nita Ambani Spotted In Rolls Royce Phantom VIII EWB

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு சொகுசு வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவேதான் கோடீஸ்வரர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக திகழ்கிறது. இஷா அம்பானி புத்தம் புதிய பென்ட்லீ பென்டைகா காரை வாங்கியுள்ள நிலையில், அவரது தாய் நீதா அம்பானி (Nita Ambani), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB) காரை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த கார் சாலைகளில் வலம் வரும்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோவும், சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவர்களிடம் ஒட்டுமொத்தமாக 170க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவர்களது கார் கலெக்ஸன் (Car Collection) தொடர்ந்து பெரிதாகி கொண்டே வருகிறது.

முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டிலியாவில் (Antilia) கார்களை நிறுத்துவதற்கு என மட்டும் 6 தளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) என ஏராளமான விலை உயர்ந்த கார்கள், இந்த இல்லத்தை ஏற்கனவே அலங்கரித்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாம் தவிர ஃபெராரி ரோமா (Ferrari Roma) மற்றும் புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 (Bullet-proof Mercedes Benz S680) போன்ற விலை உயர்ந்த கார்களும், முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் உள்ளன. முகேஷ் அம்பானி குடும்பத்தினர் ஆடம்பர கார்களை எவ்வளவு விரும்புகின்றனர்? என்பதற்கு இவை எல்லாம் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 23:58 [IST]
English summary
Isha ambani buys bentley bentayga luxury suv viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+