புலிக்கு பொறந்தது பூனையாகாது!.. ஈஷா அம்பானியிடம் இத்தன கார்களா! இவ்ளோ விலை உயர்ந்த கார்கள வச்சிருக்காங்களா!
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி மிகப் பெரிய கார் காதலர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவரைப் போலவே அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய சொகுசு கார் விரும்பிகளாக இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக முகேஷ் அம்பானியின் ஈஷா அம்பானியின் கார் காலெக்சன் பற்றிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஈஷா அம்பானி என்ன மாதிரியான சொகுசு மற்றும் அரிய கார்களை வைத்திருக்கின்றார்? மேலும், அந்த கார்களின் விலைகள் என்ன மற்றும் சிறப்புகள் என்ன? என்பது போன்ற சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes Benz S Class): இந்த ஒரே கார் மாடலின் விலை மட்டுமே ரூ. 1.77 கோடி முதல் 1.86 கோடி ரூபாய் வரை ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series): அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு அம்சங்களுக்கு பெயர்போனதாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடலின் ரூ. 1.82 லட்சம் தொடங்கி ரூ. 1.84 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இது அதிக பாதுகாப்பை வழங்கும் கார் மாடல் மட்டுமில்லைங்க. இது ஓர் அதிக திறனை வெளியற்றும் கார் மாடலும்கூய இந்த கார் மாடலில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் மோட்டார் ஆப்ஷனே வழங்கப்படுகின்றன. இரண்டும் அதிக திறனை வெளியேற்றக் கூடியவை ஆகும். 376 பிஎச்பி மற்றும் 281 பிஎச்பி பவரை இவை வெளியேற்றும்.
பென்ட்லீ அர்னேஜ் ஆர் (Bentley Arnage R): இது ஓர் விண்டேஜ் வகை கார் மாடல் ஆகும். கடைசியாக இந்த கார் ரூ. 2.25 கோடிக்கு விற்கப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலில் 6761 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் வி8 டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் ஆகும்.

போர்ஷே கேமேன் எஸ் (Porsche Cayman S): இதன் விலை ரூ. 1.48 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் 3436 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அதிக பவரை இது வெளியேற்றும் என்கிற காரணத்தினாலேயே இந்த கார் மாடலுக்கு சூப்பர் கார் விரும்புகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ரேஞ்ஜ் ரோவர் எவோக் (Range Rover Evoque): ஈஷா அம்பானி வைத்திருக்கும் கார்களிலேயே மிகவும் விலை குறைவான கார் மாடல் என இதை கூறலாம். இதன் விலை ரூ. 67.60 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்திய பணக்காரர்கள் பலரின் பிரியமான கார் மாடல் இது என்பது குறிப்படித்தகுந்தது.

ரோல்ஸ் ராய்ல் கல்லினன் (Rolls Royce Cullinan): ஈஷா அம்பானி வைத்திருப்பதிலேயே அதிக விலைக் கொண்ட கார் மாடல் இதுவாகும். இதன் விலை ரூ. 6.95 கோடி ஆகும். மிக அதிக சொகுசு அம்சங்களையும், அதிக பவல்ஃபுல் மோட்டாரையும் தாங்கி இருக்கும் லக்சூரி காரே இதுவாகும். தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு ஈஷா அம்பானி இந்த காரையே பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கார் மாடலில் 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய திறனை வெளியேற்றும் திறனைக் கொண்டிருப்பதாலும், அதிக சொகுசு அம்சங்களைக் கொண்டிருப்பதாலுமே இந்த காரை தன்னுடைய பிரதான பயன்பாட்டு வாகனமாக ஈஷா அம்பானி பயன்படுத்தி வருகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் கார்களை பயன்படுத்தும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். குறிப்பாக இந்த குடும்பத்தினர் மத்தியில் 200க்கும் அதிகமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் உள்ளிட்டவையும் இந்த குடும்பத்தினரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.


Click it and Unblock the Notifications









