அம்பானியின் மாப்பிள்ளையா இது... திருமணத்துக்கு என்ன இப்படி வந்துள்ளார்!! ஆடம்பரம் இல்லாத தோற்றம்
மொத்த இந்தியாவும் தற்சமயம் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பது அம்பானி வீட்டு திருமணத்தை தான் என்றால் அது மிகையில்லை. இந்த திருமணத்திற்கு வருகை தரும் கோடீஸ்வரர்களையும், சினிமா பிரபலங்களையும் சுற்றி, சுற்றி போட்டோ எடுத்தே மும்பை ஊடகங்கள் எல்லாம் சோர்வடைந்துள்ளன. ஆனால், திருமணம் இன்று (ஜூலை 12) தான் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மொத்த மும்பையும் விழாக் கோலம் பூண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட்டின் திருமணத்தை முன்னிட்டு மும்பையில் நிறைய அலுவலக பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு வருகை தரும் செல்வந்தர்களின் கார்களை நிறுத்தி வைப்பதற்காகவே பெரிய அளவில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் மாதத்தில் குஜராத்தில் அம்பானி குடும்பத்தின் சொந்த ஊரில் நடைபெற்றன. பல நாட்கள் கணக்கில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிகளிலும் நிறைய பிரபலங்கள் கலந்துக் கொண்டன.

குறிப்பாக, அந்த நிகழ்ச்சிகளுக்கு நெருங்கிய உறவினர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் முக்கியத்துவம் அளித்தனர். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, முகேஷ் அம்பானியின் மாப்பிள்ளை ஆனந்த் பிராமல் தனது விலையுயர்ந்த டொயோட்டா காரில் வருகை தந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும், படங்களும் ஆனந்த் அம்பானியின் திருமண நாளான இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அண்டில்லா என அழைக்கப்படும் அம்பானி குடும்பத்தினரின் வீட்டில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக ஆனந்த் பிராமல் பயன்படுத்தி இருந்தது, டொயோட்டா காம்ரி செடான் காரை ஆகும். அம்பானி குடும்பத்தினர் பெரும்பாலும் தங்களது கார்களில் பின் இருக்கைகளில் அமரவே விருப்பப்படுவர். ஆனால், ஆனந்த் பிராமல் தனது டொயோட்டா காம்ரி காரின் முன் இருக்கையில் இருந்து வெளியே வரும் காட்சிகளை அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் காண முடிகிறது.

அந்த சமயத்தில் காரை ஆனந்த் பிராமல் ஓட்டவில்லை. இவர் கார்களில் பெரும்பாலும் முன் இருக்கையில் அமரவே விரும்புவதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மாப்பிள்ளை ஆனந்த் பிராமல் டொயோட்டா காம்ரி காரில் பொது இடத்தில் காட்சி தருவது இது ஒன்றும் முதல்முறையல்ல. சில வருடங்களுக்கு முன், உணவகம் ஒன்றிற்கு சாப்பிடுவதற்காக இந்த தம்பதியினர் தங்களது கருப்பு நிற டொயோட்டா காம்ரி காரில் வந்தனர்.
ஆனால் தற்போது, ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ஆனந்த் பிராமல் வந்திருப்பது வெள்ளை நிறத்திலான டொயோட்டா காம்ரி காரில் ஆகும். கார்களின் நிறத்தை மாற்றுவது அம்பானி குடும்பத்தில் அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்றே. அந்த சமயத்தில், மனைவி உடன் உணவகத்திற்கு பழைய தலைமுறை டொயோட்டா காம்ரி காரில் ஆனந்த் பிராமல் வந்திருந்தார். அப்போது இவர்களது காருக்கு பாதுகாப்புக்காக முன்னாலும், பின்னாலும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, எம்ஜி க்ளோஸ்டர், லேண்ட் ரோவர் டிஸ்கவரி கார்கள் சென்றன.
இன்னும் சொல்ல போனால், அந்த கான்வேயில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் கூட இருந்தது. ஆனால், அத்தகைய அல்ட்ரா லக்சரி காருக்கு பதிலாக டொயோட்டா காம்ரி காரில் இஷா- ஆனந்த் பிராமல் தம்பதி உணவகத்திற்கு வந்தது அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகியது. லேண்ட் ரோவர் டிஸ்கவரி, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களுடன் ஒப்பிடுகையில் டொயோட்டா காம்ரி அந்த அளவிற்கு விலைமிக்க கார் கிடையாது.
ஆனால், டொயோட்டாவில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களுள் விலையுயர்ந்தது என்று பார்த்தால், காம்ரியை சொல்லலாம். உலகளவில் டொயோட்டா காம்ரி காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இந்தியாவில்தான் யாரும் இந்த காரை பெரியதாக கண்டுக் கொள்வதில்லை. இந்தியாவில் தற்சமயம் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.46.17 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ரூ.50 லட்சத்திலான கார்கள் எல்லாம் அம்பானி குடும்பத்தினருக்கு பெரிய பொருட்டே கிடையாது. ஏனெனில், அவர்கள் தங்களது பாதுகாப்பு வாகனங்களையே கோடி ரூபாய்களில் வாங்கக் கூடியவர்கள். ஆனால், ஆனந்த் பிராமல் தொடர்ந்து டொயோட்டா காம்ரி காரை மட்டும் அதிகளவில் பயன்படுத்துகிறார் என்றால், இந்த காருடன் அவருக்கு ஏதோவொரு நெருங்கிய பிணைப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








