உச்சகட்ட பாதுகாப்புடன் நடிகரின் வீட்டிற்குள் நுழைந்த 5 கோடி ரூபா கார்! இவங்க ரெண்டு பேரும் பிஸ்னஸ் பார்ட்னரா!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). 16,640 கோடி ரூபாய் மதிப்புள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா (Antilia) வீடு, உலக பிரசித்தி பெற்றது. மும்பை (Mumbai) நகரில் உள்ள அன்டிலியா, உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். இந்த வீட்டின் பார்க்கிங் ஏரியாவை, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII (Rolls Royce Phantom VIII) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்கள் எல்லாம் அலங்கரித்து கொண்டுள்ளன.

இவை எல்லாம் தவிர பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur), அஸ்டன் மார்ட்டின் ரேபிடே (Aston Martin Rapide) மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) என நம்மில் பலரும் கேள்வியேபடாத கார்கள் எல்லாம், முகேஷ் அம்பானி வசம் உள்ளன. உண்மையில் அவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.

Isha Ambani Spotted In Bentley Bentayga

மேற்கண்ட கார்களுடன் சேர்த்து, முகேஷ் அம்பானி குடும்பத்திடம், பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) கார் ஒன்றும் உள்ளது. சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த பென்ட்லீ பென்டைகா காரில், சிறப்பம்சம் ஒன்று இருக்கிறது. நிறம் மாறி கொண்டே இருக்கும் என்பதுதான் அந்த சிறப்பம்சம் ஆகும்.

நிறம் மாறி கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக 'ஸ்பெஷல் பெயிண்ட்' வேலைப்பாடுகள் எதுவும் இந்த காரில் செய்யப்படவில்லை. ஆனால் 'சைகடெலிக் வ்ராப்' (Psychedelic Wrap) மூலமாக இந்த கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 'சைகடெலிக் வ்ராப்' என்பது 'வினய்ல் ஃபிலிம்' (Vinyl Film) ஆகும்.

Ranbir Kapoor-Alia Bhatt-Isha Ambani

இது காருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. அதாவது இந்த காரை பார்க்கும் கோணத்தை பொறுத்து, உங்கள் கண்களுக்கு வெவ்வேறு நிறங்கள் தெரியும். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் ஒரு நிறமும், மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால் வேறொரு நிறமும் தெரியும்.

இது எப்படி வேலை செய்கிறது என்றால், இந்த 'சைகடெலிக் வ்ராப்'- ஆனது, வெளிச்சத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகையான நிறங்களை பிரதிபலிக்கும். இதன் மூலம் காரின் நிறம் மாறி கொண்டே இருப்பதை போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சிறப்பம்சம் வாய்ந்த முகேஷ் அம்பானியின் பென்ட்லீ பென்டைகா காருடைய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் (Ranbir Kapoor) வீட்டிற்கு, முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி (Isha Ambani) வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இஷா அம்பானி எங்கு சென்றாலும், பாதுகாப்பிற்காக அவரது காருக்கு முன்னும், பின்னும் நிறைய கார்கள் அணிவகுத்து வரும்.

இதன்படி ரன்பீர் கபூர் வீட்டிற்கு அவர் வந்தபோதும், அவரது நிறம் மாறும் பென்ட்லீ பென்டைகா காருக்கு பாதுகாப்பிற்காக, மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி 63 (Mercedes AMG G 63), மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV 500) மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) உள்ளிட்ட கார்கள் அணிவகுத்து வந்துள்ளன.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மேற்கண்ட கார்களை எல்லாம் நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களையும் நாம் காணலாம். இந்த வைரல் வீடியோவில், நிறம் மாறும் பென்ட்லீ பென்டைகா காரின் மதிப்பு 4.84 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இஷா அம்பானி எதற்காக ரன்பீர் கபூர் வீட்டிற்கு சென்றார் என்று தெரியவில்லை. இருப்பினும் இஷா அம்பானி மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அனிமல் (Animal) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ரன்பீர் கபூர் பிரபலமாக மாறினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரன்பீர் கபூரின் மனைவியான அலியா பட்டும் (Alia Bhatt), இஷா அம்பானியின் நெருங்கிய தோழிதான். அத்துடன் இவர்கள் இருவரும் பிஸ்னஸ் பார்ட்னர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அலியா பட்டால் தொடங்கப்பட்ட Ed-a-Mamma பிராண்டில் 51 சதவீத பங்குகளை, இஷா அம்பானியின் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் (Reliance Brands Ltd) நிறுவனம், கடந்த 2023ம் ஆண்டு கையகப்படுத்தியது. இது குழந்தைகளுக்கான உடைகளை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 18:19 [IST]
English summary
Isha ambani spotted in colour changing bentley bentayga suv at ranbir kapoor house viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+