முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ள முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழா ஏற்பாடுகள், தடபுடலாக நடைபெற்று வருகின்றன. திருமணத்திற்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளும், அதற்கு ஆகும் மொத்த செலவும் உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினரே, பல லட்சங்களை செலவழித்து திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் காலம் இது. அப்படி இருக்கையில், உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் மட்டும் எளிமையாக இருந்து விடுமா என்ன?

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், ஆனந்த் பிரமோல் என்பவரும் காதலித்து வருகின்றனர். ஆனந்த் பிரமோலும் அவ்வளவு லேசுப்பட்ட ஆள் கிடையாது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பிரமோல் என்ற பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் அஜய் பிரமோலின் மகன்தான் ஆனந்த் பிரமோல். இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமோல் ஆகியோர் தங்கள் காதலை சமீபத்தில் வீட்டிற்கு தெரியப்படுத்தினர்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

அவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டதையடுத்து, திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், இத்தாலியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

கடந்த மே மாதம் அரங்கேறிய இந்த திருமண நிச்சயதார்த்தை பார்த்து நாடே பிரம்மித்து போனது. 50 வகை சாப்பாடு, 3 நாள் கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்தி விட்டனர். இந்த சூழலில், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் திருமணம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது.

MOST READ: விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க புதிய திட்டம்.. ஜவுளிக்கடை அண்ணாச்சியாக மாறிய போலீசார்

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இவர்களின் திருமண அழைப்பிதழ் தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் சுமார் 1 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அழைப்பிதழை நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வைத்து அம்பானி குடும்பத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

திருமணம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அதற்கு முன்னதாக பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், வரும் டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும் விருந்தினர்களை உபசரிக்க இரு வீட்டாரும் தயாராகி வருகின்றனர்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

எனவே டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உதய்பூர் குலுங்க போவது உறுதி. நாட்டில் உள்ள அனைவரது கண்களும் தற்போது உதய்பூர் மீதுதான் உள்ளது. என்றாலும் உதய்பூர் விமான நிலையம் இதனை எப்படி சமாளிக்க போகிறது? என்பதுதான் தற்போதைய கேள்வி.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

ஆம், அடுத்த சில நாட்களில், உதய்பூர் மகாராணா பிரதாப் ஏர்போர்ட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகப்படியான விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. சாதாரணமான நாள் ஒன்றில், உதய்பூர் விமான நிலையத்தில் மொத்தம் 19 கமர்ஷியல் விமானங்கள் லேண்ட் ஆகும்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

அதே எண்ணிக்கையிலான விமானங்கள் டேக் ஆஃப் ஆகும். ஆனால் அடுத்த 10 நாட்களில், உதய்பூர் விமான நிலையத்தில், மொத்தம் 200 விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. இவை அனைத்தும் 'சார்ட்டட் பிளைட்ஸ்' எனப்படும் சிறப்பு பயன் விமானங்கள் ஆகும்.

MOST READ: அம்மா ஸ்கூட்டர் திட்டத்தால் இப்படி ஒரு பிரச்னையில் சிக்கி கொண்ட பெண்கள்...

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இதற்கு அம்பானி வீட்டு விசேஷம்தான் மிக முக்கியமான காரணம். ஏனெனில் பல்வேறு பிரபலங்கள் உதய்பூர் வருகை தரவுள்ளனர். அவர்கள் வீட்டு விசேஷம் நடைபெறவுள்ள டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மட்டும் தலா 30-50 விமானங்கள் லேண்ட், டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

உதய்பூரில் மிகவும் அதிகப்படியான விமானங்கள் வந்து செல்வதற்கு ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலும் மிக முக்கியமான ஓர் காரணம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இதில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக வரும் டிசம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பிரசாரத்திற்கு உதய்பூர் வந்து செல்கின்றனர். அதிகப்படியான விமானங்கள் வருவதற்கு இதுவும் ஓரு காரணம்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

என்றாலும் அம்பானி வீட்டு விசேஷத்திற்காகதான் அதிகப்படியான விமானங்கள் வருவதாக கூறப்படுகிறது. விமானங்கள் தவிர, உதய்பூரில் உள்ள அனைத்து 5 நட்சத்திர விடுதிகளையும், அம்பானி குடும்பத்தினர் ஏற்கனவே 'புக்' செய்து விட்டனர்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

விருந்தினர்கள் தங்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும், பல்வேறு பிரபலமான நபர்கள் வருகை தருகின்றனர். எனவேதான் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.

MOST READ: மூலை முடுக்கெல்லாம் அதிவேக இணைய வசதி... இஸ்ரோவின் புதிய அஸ்திரம்!

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

அத்துடன் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வரவும், மீண்டும் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவும் சுமார் 1,000 லக்ஸரி கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வரும் விருந்தினர்களுக்காக, ஜாகுவார், போர்ஷே, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களைதான் அம்பானி குடும்பத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

முன்னதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோரின் திருமணம் கடந்த டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

பிரியங்கா சோப்ராவின் சங்கீத் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில், அம்பானி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதன்பின் மும்பை சென்ற அவர்கள் தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

அத்துடன் மும்பையில் நடைபெறவுள்ள தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் கவனிக்க தொடங்கினர். ஆம், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் ஆகியோரின் திருமணம், மும்பையில்தான் நடைபெறுகிறது.

MOST READ: 80 லட்ச ரூபாய் காரை சின்னாபின்னமாக்கியது இதற்குதான்! தொழிலதிபரின் மனித நேயத்திற்கு குவியும் பாராட்டு

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

உதய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் ஆகியோர் நேராக மும்பை வருகின்றனர். அங்கு வரும் டிசம்பர் 12ம் தேதி அவர்களின் திருமணம் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இத்தாலியில் நடைபெற்ற நிச்சயதார்த்தம், உதய்பூர் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடிகளை தாண்டும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன! ஆனால் செலவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

மகளின் திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்தவுள்ள முகேஷ் அம்பானி ஒரு தீவிரமான கார் பிரியர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கார்களை முகேஷ் அம்பானி வைத்துள்ளார்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

உலகின் மிகவும் ஆடம்பரமான வீடு என்ற பெருமையை மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு பெறுகிறது. மிகவும் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில்தான் அன்டிலியா வீடு இந்த பெருமையை பெற்றது.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இந்த வீட்டின் முதல் 6 தளங்கள் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள். இங்கு ஒரே நேரத்தில் 168 கார்களை நிறுத்தி வைக்க முடியுமாம். இதுதவிர அன்டிலியா வீட்டின் 7வது தளத்தில், கார்கள் பராமரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

MOST READ: கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இங்கு அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாற்றி கொண்டே இருக்கின்றனர். மேபக் 62, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆகிய கார்களை முகேஷ் அம்பானி அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

இதில், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட பல கார்களில், புல்லட் ப்ஃரூப் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களை எத்தகைய குண்டும் துளைக்காது. முகேஷ் அம்பானி அதிகமாக பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் அன்டிலியா வீட்டில் ஒரே தளத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

கார்கள் தவிர விமானங்கள் மீதும் முகேஷ் அம்பானி அதிக ஆர்வம் கொண்டவர். ஏர்பஸ் 319, ஃபால்கன் 900இஎக்ஸ் மற்றும் போயிங் பிசினஸ் ஜெட்2 உள்ளிட்ட விமானங்களை முகேஷ் அம்பானி வைத்துள்ளார். இதில், முகேஷ் அம்பானியின் விருப்பத்திற்கு ஏற்ப தனித்துவமான பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

முகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் மேல் தளத்தில் 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக தனி கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.

Image Source: Airbus

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Isha Ambani Wedding: 200 Chartered Flights Scheduled To Land And Take Off From Udaipur Airport. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X