25 வருஷத்துக்கு முன்னாடி விஜய்யை விரட்டி விரட்டி காதலிச்ச நடிகையா இது! ஒன்னே கால் கோடி ரூபா கார்ல போறாங்க!

இந்தியாவில் ஒரு சில நடிகைகள், பல மொழி திரைப்படங்களிலும், நடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் இஷா கோபிகர் (Isha Koppikar). இவர் தமிழ், கன்னடா, தெலுங்கு, மராத்தி மற்றும் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டுள்ளார். எனவே இந்தியா முழுக்க இஷா கோபிகருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சூழலில், இஷா கோபிகரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் இஷா கோபிகர் ஜிம்மில் உடற்பயிற்சிகளை முடித்து விட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. பின்னர் அவர் ஒரு காரில் ஏறி புறப்படுகிறார்.

Isha Koppikar

இந்த வீடியோவில் கார் பகுதியளவு மட்டுமே தெரிகிறது. எனவே இஷா கோபிகர் பயணம் செய்தது? என்ன கார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் நமக்கு தெரியும் பக்கவாட்டு பகுதியின் டிசைன் மற்றும் அலாய் வீல்களில் உள்ள லோகோ ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) போல் உள்ளது.

இஷா கோபிகர் கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை வாங்கியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே அந்த காரில் அவர் ஜிம்மிற்கு வந்து சென்றிருக்கலாம். இஷா கோபிகரிடம் இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரின் 300டி வேரியண்ட் ஆகும்.

Isha Koppikar Spotted In Mercedes-Benz GLE

தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட் 99 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 1.25 கோடி ரூபாய் வரும். இதுதவிர இந்த காரில் மேலும் 2 வேரியண்ட்களும் (Variants) தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில், 450 4மேட்டிக் வேரியண்ட் ஒன்றாகும். தற்போதைய நிலையில் 1.40 கோடி ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையில் இந்த வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றொன்று 450டி 4மேட்டிக் வேரியண்ட் ஆகும். இதன் ஆன்-ரோடு விலை சுமார் 1.50 கோடி ரூபாய் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இந்த 3 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 3 இன்ஜின்கள் உடனும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இஷா கோபிகர் தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 48 வயதாகிறது. தமிழை பொறுத்தவரையில், கடந்த 1998ம் ஆண்டு வெளியான காதல் கவிதை திரைப்படத்தில், பிரஷாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார்.

இதன்பின் 1999ம் ஆண்டில் தமிழில் அவரது நடிப்பில் 3 திரைப்படங்கள் வெளிவந்தன. அவை அரவிந்த் சாமி உடனான என் சுவாச காற்றே, விஜய் உடனான நெஞ்சினிலே ஆகியவை ஆகும். அத்துடன் அதே ஆண்டில் பிராசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் இஷா கோபிகர் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து 2001ம் ஆண்டு வெளியான நரசிம்மா, 2024ம் ஆண்டு வெளியான அயலான் திரைப்படங்களிலும் இஷா கோபிகர் நடித்துள்ளார். இதில், நெஞ்சினிலே திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக விஜய் ரசிகர்களையும் இஷா கோபிகர் கவர்ந்தார். அந்த திரைப்படத்தில் வறுமையின் பிடியில் இருக்கும் விஜய்யை, இஷா கோபிகர் விரட்டி விரட்டி காதலிப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இஷா கோபிகர் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரானது, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 26, 2025, 14:04 [IST]
English summary
Isha koppikar spotted in mercedes benz gle suv viral video full details
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+