இண்டர்நேஷ்னல் டீமில் ரொம்ப நாளா ஆளையே காணோம்... உள்ளூர் போட்டிகளில் விளையாடியே பென்ஸ் கார் வாங்கிய இளம் வீரர்

இஷான் கிஷான் (Ishan Kishan), இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர். 26 வயதான இஷான் கிஷான் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கியுள்ளார். சமீப காலமாக இஷான் கிஷான் சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக தென்படுவதில்லை. அப்படியிருந்த போதிலும், புதியதாக பென்ஸ் காரை இவரால் வாங்க முடிந்துள்ளது. ஷோரூமுக்கு நேரில் சென்று இஷான் கிஷான் காரை டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. என்ன மாதிரியான மெர்சிடிஸ்-பென்ஸ் காரை இந்த கிரிக்கெட் வீரர் வாங்கியுள்ளார் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இஷான் கிஷான் ஆவார். அதன் மூலமாக ஐபிஎல் தொடர்களில் தொடச்சியாக ஏலத்தில் எடுக்கப்பட்டுவரும் இஷான் கிஷான், சில ஆண்டுகள் முன்பு வரையில் சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா உடன் களமிறங்கினார்.

ishan kishan buys mercedes-benz gls

சில போட்டிகளில் மிடில்-ஆர்டரில் கூட இவர் ஆடியுள்ளதை பார்த்திருக்கிறோம். ஆனால் அதன்பின் போட்டி அதிகமாகியதை அடுத்து இஷான் கிஷான் மீது எதிர்பார்ப்புகளும் அதிகமாகின. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் அணியில் இருந்து நீக்கப்பட்டவர், பல மாதங்களாக சர்வதேச போட்டிகளில் ஆடாமல் உள்ளார். விரைவில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ-இல் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இஷானின் பெயர் இல்லை.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவரும் நிலையில், இஷான் கிஷான் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜி.எல்.எஸ் (GLS) காரை வாங்கியுள்ளார். ஷோரூமுக்கு நேரில் சென்று பிராண்ட்-நியூ ஜிஎல்எஸ் காரை இஷான் கிஷான் டெலிவிரி பெறும் படங்களை ஜார்க்காண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட மெர்சிடிஸ் டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிட்டுள்ளது.

ishan kishan buys mercedes-benz gls

கிரிக்கெட் வீரர் இஷான் கிஷான் கிரே நிறத்திலான ஜிஎல்எஸ் காரை வாங்கி உள்ளார். இதனை 'செலினைட் கிரே' என மெர்சிடிஸ் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், போலார் வெள்ளை, அப்சிடியன் கருப்பு, ஹை-டெக் சில்வர், சோடாலைட் நீலம் என்கிற 4 விதமான கலர் ஆப்ஷன்களிலும் ஜிஎல்எஸ் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் உடன் ஜிஎல்எஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த என்ஜின் உடன் இந்த காரை இஷான் கிஷான் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. பெட்ரோல் என்ஜின் உடன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.34 கோடி மற்றும் டீசல் என்ஜின் உடன் ரூ.1.39 கோடி ஆகும்.

ishan kishan buys mercedes-benz gls

பெட்ரோல் வேரியண்ட்டில் 3 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும், டீசல் வேரியண்ட்டில் 3 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்படுகிறது. இந்த இரு என்ஜின்களுடனும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. ஜிஎல்எஸ் ஆனது அனைத்து 4 சக்கரங்களிலும் ஒரே நேரத்தில் இயங்கக்கூடிய லக்சரி எஸ்யூவி கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே எஸ்யூவி கார்களில் சவுகரியமான பயணம் கிடைக்கும். அதுவே மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் சொல்லவே வேண்டாம். இந்த காரை வாங்கியிருப்பதன் மூலம் மிகவும் சவுகரியமான பயணத்தை இஷான் கிஷான் பெறவுள்ளார் என சொல்லலாம். குறிப்பாக, சுமார் 9 ஏர்பேக்குகள் வழங்கப்படுவது இந்த காரின் சிறப்பம்சம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 15:39 [IST]
English summary
Ishan kishan buys mercedes benz gls luxury suv car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X