டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

டெலிவரிக்காக பலர் காத்திருக்கும் நிலையில், ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் காரை இஷான் கிஷன் பரிசாக வென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் வென்று இந்தியா பதிலடி கொடுத்தது. எனவே தொடரை கைப்பற்ற போகும் அணியை தீர்மானிக்கும் 5வது டி20 போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

ஆனால் கனமழை காரணமாக 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் இஷான் கிஷன் (Ishan Kishan)பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

மொத்தம் 5 இன்னிங்ஸ்களில் அவர் 206 ரன்களை குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 150.36 ஆகும். தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக இஷான் கிஷன் புத்தம் புதிய ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) காரை பரிசாக வென்றுள்ளார். இஷான் கிஷனுக்கு பரிசாக வழங்கப்பட்டிருப்பது, ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும்.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

ஃபயரி ரெட் (Fiery Red) கலரில் இந்த கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய மாடலை காட்டிலும் இந்த புதிய மாடலின் டிசைன் நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

ஹூண்டாய் வெனியூ காரில் தற்போது, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் H2C கனெக்டிவிட்டி (அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அஸிஸ்டண்ட் சப்போர்ட்) உள்பட ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் 3 இன்ஜின் தேர்வுகளுடன் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனை செய்யப்படுகிறது.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

இதில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4, பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. மற்றொன்று 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மூன்றாவது இன்ஜின் தேர்வானது, 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4, டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 7.53 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டிற்கு பிறகான விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

சவாலான விலை, சூப்பரான வசதிகள், அட்டகாசமான டிசைன் உள்பட பல்வேறு காரணங்களால், புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. முன்பதிவு செய்துள்ள பலர் டெலிவரிக்காக காத்து கொண்டுள்ளனர். டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்ற கார்கள், ஹூண்டாய் வெனியூ காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் 2022 மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் இந்த புதிய மாடலை முன்பதிவு செய்து வருகின்றனர். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் 2022 மாடல் விற்பனைக்கு வந்த பிறகு, இந்த செக்மெண்ட்டில் போட்டி இன்னும் கடுமையாக அதிகரிக்கலாம்.

டெலிவரிக்காக பலர் காத்திருக்காங்க... இஷான் கிஷன் அசால்டா தூக்கீட்டாரு... இந்த சூப்பரான காரின் விலை இவ்ளோதானா?

அத்துடன் இந்த செக்மெண்ட்டில் வெகு விரைவில் நிறைய சிஎன்ஜி மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன்படி டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் கார்களின் புதிய சிஎன்ஜி மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ishan kishan wins hyundai venue facelift
Story first published: Wednesday, June 22, 2022, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X