போரில் இஸ்ரேல் பயன்படுத்தும் ‘ஸ்பெஷலான’ ஹெலிகாப்டர்!! இந்தியா 2020லேயே வாங்கிடுச்சி!
இஸ்ரேல் நாட்டு இராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் மோதலை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மாடர்ன் உள்நாட்டு போராக விளங்கும் இந்த மோதலில் இரு தரப்பினரும் பல்வேறு அதிநவீன ஆயுதங்களையும், தொழிற்நுட்ப யுக்திகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போரில் உட்படுத்தப்பட்டுள்ள ஆட்டோமொபைல் வாகனங்கள் கூட அட்வான்ஸானவைகளாக உள்ளன.
குறிப்பாக, ஹமாஸ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் நாட்டு இராணுவம் பயன்படுத்தி வரும் ஏ.எச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. தொலைக்காட்சிகளில், சமூக வலைத்தளங்களில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தொடர்பாக வெளியாகும் படங்களிலும், வீடியோக்களிலும் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பரவலாக பார்க்க முடிகிறது.

இஸ்ரேலின் ஏ.எச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் 30மிமீ செயின் துப்பாக்கி மற்றும் ஹெல்ஃபையர் ஏவுகணைகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் எந்தவொரு பகுதியையும் அழிக்கும் திறனின் காரணமாகவே அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சமூக வலைத்தளங்களில் சமீப நாட்களில் பிரபலமாகி உள்ளன. இந்தியாவிடமும் ஏ.எச்-64இ ஹெலிகாப்டர்கள் உள்ளன. இந்த ஹெலிகாப்டர்களை "பறக்கும் டேங்குகள்" என இந்திய இராணுவம் அழைக்கிறது.
2020இல் இந்திய வான் படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டன. நாட்டின் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியாக இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மட்டுமின்றி, கனரக இராணுவ பொருட்களையும், ட்ரோப்புகளையும் எடுத்துச் செல்ல 15 சினோக் இராணுவ ஹெலிகாப்டர்களும் இந்திய வான் படையில் உள்ளன.

உலகின் மிகவும் அட்வான்ஸான மல்டி ரோல் போர் ஹெலிகாப்டரான ஏ.எச்-64இ அமெரிக்கன் விமான நிறுவனமான போயிங் -ஆல் உருவாக்கப்படுகிறது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் போயிங் நிறுவனம் தான் உருவாக்குகிறது. 2028ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ஏ.எச்-64இ போர் ஹெலிகாப்டர்களை உருவாக்கும் திட்டங்கள் போயிங் நிறுவனத்திடம் உள்ளன.
இஸ்ரேல் -ஹமாஸ் போரில் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இஸ்ரேல் பயன்படுத்துவதை பார்க்கும்போது நமக்கு ஓர் கேள்வியும் எழுகிறது. அதாவது, ஏன் உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரின் போது உக்ரைனுக்கு அமெரிக்கா இத்தகைய ஆற்றல்மிக்க ஹெலிகாப்டர்களை வழங்கவில்லை? இத்தனைக்கும், இந்த மாதிரியான ஹெலிகாப்டர்களை வாங்க உக்ரைன் போருக்கு முன் முயன்றது.

நெகேவ் பாலைவனத்தில் உள்ள ரமோன் விமான தளத்தில் இரு அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இஸ்ரேல் பராமரித்து வருகிறது. கடந்த ஆண்டில், போயிங்கின் ஏ.எச்-64டி அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தற்காலிகமான கிரவுண்டிங் பிரச்சனைகளை எதிர்கொண்டன. 4-பிளாடட் ஹெலிகாப்டரான இதில் இரு என்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. அத்துடன், பிளேடுகளை மடிக்கும் தனித்துவமான திறனையும் இவை கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரேல்- ஹமாஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இத்தகைய போரில் இஸ்ரேல் பயன்படுத்தும் போர் ஹெலிகாப்டர் நம் இந்தியாவிடமும் இருப்பது ஓர் அருமையான விஷயமாகும். இதில் இருந்து, இந்திய இராணுவம் எந்த அளவிற்கு அப்டேட்டாக உள்ளது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









