பெட்ரோல்,டீசல் விலை தாறுமாறா ஏறப்போகுது! லிட்டர் ரூ120க்கு போகுமா? அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னே எப்போதும் இல்லாத வகையில் தாறுமாறாக ஏறப்போவதற்கான அறிகுறிகள் என்பது உள்ளது. இதற்கு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் என்பது போக்குவரத்திற்கான முதுகெலும்பாக இருக்கிறது. இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல் டீசரையை எரிபொருளாக கொண்டு இயங்கி வருகின்றன. பெட்ரோல் டீசல் மட்டும் இல்லை என்றால் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே ஸ்தம்பித்து போய்விடும் என்ற நிலைமை தான் தற்போது இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விலையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் இது அடுத்த ஒரு சில மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாறுபாட்டிற்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கான அறிகுறி தற்போது சர்வதேச சந்தையில் தென்படத் துவங்கி விட்டது.
சர்வதேச மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெயின் விலை சுமார் மூன்று சதவீதம் வரை அதிகரித்து விட்டது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தான் பெட்ரோல் டீசல் அதிகமாக உற்பத்தியாகி உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 2.55 அமெரிக்க டாலர் விலை உயர்ந்தது. தற்போது ஒரு பேரல் 90.48 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாம் கணக்கிட்டு பார்த்தால் இதுதான் அதிகபட்ச விலையாக இருக்கிறது.
இந்த விலை உயர்வுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் மிக முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய்யை நாடு விட்டு நாடு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்யும் மிக முக்கிய நாளாக இருக்கிறது. இந்தியாவிற்கு தேவையான 85 சதவீதமான கச்சா எண்ணெய் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணமாக கச்சா எண்ணெய்களை நாடு விட்டு நாடு கொண்டு வருவதற்கு பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. ஓர் அளவிற்கு மேல் விலை உயர்வு ஏற்பட்டால் அது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வை ஏற்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
இந்த விலை உயர்வு நேரடியாக ஒவ்வொரு இந்தியர்களின் தலைமையில் தான் விடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் டெல்லி பகுதியில் லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூபாய் 96.26 என்ற விலையிலும், சென்னையில் ரூபாய் 102.62 என்ற விலையிலும், மும்பையில் 106.29 என்ற விலையிலும் அதிகபட்சமாக கொல்கத்தாவில் 111.30 என்ற விலையிலும் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 120-ஐ கூட கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது நடக்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம், ஆனால் அதற்குள் இஸ்ரேல் பாலஸ்தீன போரால் கச்சா எண்ணையை நாடு விட்டு நாடு கொண்டு வருவதற்கு வேறு வழி கிடைத்து விட்டால், இந்த விலை ஏற்றம் என்பது இருக்காது. ஆனால் இதே சூழ்நிலை நீடித்தால் நிச்சயம் விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை மாறிக்கொண்டே இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் தான் இருக்கிறது. இதற்கு அரசு விதிக்கும் வரிகளில் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்கள் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. மேலும் சப்ளை செயின் உள்ளிட்ட செலவுகள் குறித்த அம்சங்களில் செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பெட்ரோல் விலை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் பெட்ரோல் மிக முக்கியமான எரிபொருளாக இருக்கிறது. ஆனால் இந்த எரிபொருள் என்பது பூமிக்கு அடியில் இருந்து இயற்கை வளத்தை எடுத்து அதன் மூலம் தான் பெட்ரோலை நாம் தயாரித்து வருகிறோம். இது எதிர்காலத்திற்கு நல்ல விஷயம் கிடையாது. அதனால் நாம் மெல்ல மெல்ல பெட்ரோல் டீசல் வாகனங்களை தவிர்த்து மாசு ஏற்படுத்தாத வாகனங்களை பயன்படுத்த துவங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
