சீனாவை அலறவிட்ட இஸ்ரோ! 3டி பிரிண்டிங் முறையில் தயாரான ராக்கெட் இன்ஜின்!
இஸ்ரோ திரவம் மூலம் இயங்கும் ராக்கேட் இன்ஜினை 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரித்து அதை வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. இது இஸ்ரோ செய்துள்ள மிகப்பெரிய சாதனையாகும். இதன் மூலம் இஸ்ரோ ஏகப்பட்ட பணத்தை மிச்சம் செய்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரோவுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகமான பயன்பாட்டிற்காக பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. தனது ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல்வேறு விதமான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது 3 டி பிரிண்ட் செய்யப்பட்ட இன்ஜினை வெற்றிகரமாக உருவாக்கி அதை சோதனையும் செய்துள்ளது.

இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி ராக்கெட்டில் முதல் ஸ்டேஜ் மற்றும் 4வது ஸ்டேஜ்களில் பிஎஸ்4 என்ற இன்ஜினை பயன்படுத்தி வருகிறது. இந்த இன்ஜின் இதுவரை டிசைன் செய்யப்பட்ட வடிவமைப்பில் கொண்டு வருவதற்காக 14 விதமான உதிரி பாகங்களாக தனித்தனியாக செய்யப்பட்டு அவை 19 இடங்களில் வெல்டிங் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த இன்ஜினை 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே இருக்கும் அதே இன்ஜின் வடிவமைப்பை தனித்தனி உதிரி பாகங்களாக செய்யாமல் ஒரே உதிரிபாகமாக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 565 கிலோ எடை கொண்ட மெட்டல்கள் பயன்படுத்தி வந்த இடத்தில் இனி 13.9 கிலோ மெட்டலை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இதற்காக விப்ரோ 3டி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்த 3டி பிரிண்ட் செய்யப்பட்ட இன்ஜினை உருவாக்கியுள்ளது. மெட்டல் பவுடர்களை உருவாக்கி அதை 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தின் மூலம் தேவையான உதிரி பாகமாக அந்நிறுவனம் மாற்றி உள்ளது. இந்த 3டி பிரிண்டிங் மூலம் செய்யப்பட்ட இன்ஜின் டிசைன் அடிப்படையில் வெற்றி பெற்ற நிலையில், இதை சோதனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ இன்ஜின் சோதனை மையத்தில் வைத்து முதற்கட்டமாக இந்த இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் வெற்றிகரமாக இந்த இன்ஜின் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக இது எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறது என்பதை பார்ப்பதற்கான சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் இந்த இனஜினை தொடர்ந்து 665 நொடிகள் செயல்பட்டு தேவையான இலக்கை எட்டி பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த இன்ஜினை இனி இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் இஸ்ரோ இந்த இன்ஜினை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் 97% மூலப்பொருட்கள் மிச்சப்படுத்தி வெறும் 13 சதவீத மூல பொருட்களைக் கொண்டே இந்த இன்ஜினை முழுவதுமாக தயாரித்து விட்டது.
இது மட்டுமல்ல இந்த இன்ஜினை தயாரிக்க ஆகும் நேரம் என்பது 60% வரை குறைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின் தற்போது 7.33கிலோநியூட்டர் திரஸ்டை உருவாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின் நைட்ரஜன் டெட்ரா ஆக்சைடு என்ற கெமிக்கலை ஆக்ஸிடைசராக பயன்படுத்தி செயல்படும். அதேநேரம் மோனோமெத்தில் ஹைட்ராசைன் என்ற எரிபொருளை பயன்படுத்தி பிரஷர் இல்லாத இடங்களில் செயல்படும் இன்ஜினாகவும் பயன்படுத்த முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுபோக இந்த இன்ஜின் அடுத்து நான்கு விதமான சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த நான்கு விதமான சோதனைகளிலும் இது வெற்றி பெறும் பட்சத்தில் இதை நேரடியாக ராக்கெட்டில் பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துவிடும் 3டி பிரிண்டிங் தொழிற்நுட்பம் என்பது மிக நவீனமான தொழிற்நுட்பமாக இருக்கிறது. இதில் இஸ்ரோ ராக்கெட் இன்ஜினியர் தயாரித்துள்ளது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான்3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ அடுத்தடுத்து பல்வேறு விதமான சாதனைகளை செய்து வருகிறது. இந்த சாதனையை ஒரு பகுதியாக 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட இன்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. விரைவில் ராக்கெட்டில் பொருத்தி செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது நிச்சயம் இது மிகப்பெரிய சாதனையாக தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








