சந்திரனை தொடர்ந்து செவ்வாய், வெள்ளி கிரகங்களை குறி வைத்த இஸ்ரோ! 2024 ல் நடக்கப்போகும் சாதனைகள்!
2023 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில் இந்த ஆண்டு இஸ்ரோவிற்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. சந்திரயான் 3 வெற்றி மற்றும் ஆதித்யா எல் ஒன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என வரிசையாக சாதனைகளை படைத்து. இஸ்ரோ இந்த ஆண்டில் மிக முக்கிய மைல்கள்களை எட்டியுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு இஸ்ரோ செய்ய உள்ள சாதனைகளை பற்றி இங்கே காணலாம்.
நிசார் - 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரோவும் நாசாவும் சேர்ந்து செய்த நிசார் என்ற சேட்டிலைட்டை விண்ணுக்கு செலுத்துகிறது. இந்த மேப் மூலம் நமக்கு பூமியின் எக்கோ சிஸ்டம், கடல் மட்டம் உயர்வு, கடல் நிலத்தடி நீர்மட்டம், இயற்கையாக உள்ள பிரச்சனைகள், பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு உள்ளிட்ட தகவல்கள் எல்லாம் கிடைக்க பெறும்.

இந்த சேட்டிலைட்டில் சிந்தடிக் அப்பாச்சி ரேடார் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேட்டிலைட்டை இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தி லோ எர்த் ஆர்பிட் என்ற பகுதிக்கு எடுத்துச் செல்லும்.அங்கிருந்து பூமியை இந்த சேட்டிலைட் ஆய்வு செய்து தரவுகளை இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கும். இந்த சாட்டிலைட் ஜனவரி மாதமே விண்ணில் பாய உள்ளது இதுகுறித்த மேலும் தகவல்கள் லான்ச் தேதி அறிவிக்கும் போது தெரியவரும்.
இன்சாட் 3 டி எஸ்: இஸ்ரோ வரும் ஜனவரி மாதமே இன்சர்ட் ரேடியஸ் சேட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்புகிறது. சேட்டிலைட் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது இந்த சேட்டிலைட் விண்ணிலிருந்து பூமியை கண்காணிக்க பூமியில் நிகழ்வுள்ள வானிலை குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. இது ஒரு வழக்கமான சேட்டிலைட் தான் இதையெல்லாம் இஸ்ரோ மிக எளிமையாக செய்து விடும்.

இதற்காக இந்த சாட்டிலைட்டில் 6 இமேஜ் சேனல்களும் 19 சவுண்ட் சேனல்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பூமியில் நிகழ உள்ள வானிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை எல்லாம் ரியல் டைமில் இஸ்ரோ மையத்திற்கு அனுப்பும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேட்டிலைட் மூலம் இன்னும் வானிலை தகவல்களை மிகத் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
ககன்யான் 1: பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு மனிதர்களை கூட்டி சென்று அங்கு அவர்கள் மூன்று நாட்கள் ஆய்வு நடத்தி பின்னர் அவர்கள் பூமிக்கு வருவதுதான் இந்த ககன்யான் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்தியா முதன்முதலாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் இதுதான். இதனால் இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் மனிதர்களுக்கு பதிலாக ரோபோவை வைத்து 2ம் கட்ட ஆய்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்படுகிறது. ககன்யான் திட்டத்தை மனிதர்கள் அல்லாமல் ரோபோக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் 2024 அல்லது 2025-ம் ஆண்டு துவக்கத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு செல்ல இஸ்ரோ ஏற்பாடு செய்து விடும்.
மங்கள்யான் 2: இஸ்ரோ ஏற்கனவே மங்கள்யான் திட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது மங்கல்யான் 2 அதாவது மார்ஸ் ஆர்பிட்டார் மிஷின் இரண்டாம் திட்டத்திற்காக தயாராகி வருகிறது. இதன் படி இந்த திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் என தெரிகிறது. இதுவும் இஸ்ரோவிற்கு மிகப்பெரிய சாதனை திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மொத்தம் 4 விதமான பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அது செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகே சென்று செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளை எல்லாம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 100 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் தற்போது ஏவுவதற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. முன்பு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தை விட மங்கல்யான் 0 விண்கலம் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட விண்கலமாக உருவாக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே போலாரிமீட்டர் சேட்டிலைட்: இது விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுகிறது. முக்கியமாக பிளாக் ஹோல் மற்றும் நியூட்ரான் ஸ்டார்களில் இருந்து பூமிக்கு வரும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை வைத்து விண்வெளியை நன்கு புரிந்து கொள்வதற்காக இந்த சேட்டிலைட் அனுப்பப்படுகிறது. இதற்கான ஏவுதல் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

சுக்கிரையான்: இஸ்ரோ வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்த சுக்ரயான் என்ற விண்கலத்தை தயார் செய்து வருகிறது. இந்த விண்கலமும் 2024 ஆம் ஆண்டு விண்ணில் ஏவ அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இது வெள்ளி கிரகத்திற்கு சென்று அங்கு உள்ள சுற்றுவட்ட பாதையில் சுற்றி வெள்ளி கிரகத்தில் உள்ள எரிமலைகள் , அங்கு உள்ள நில அமைப்புகள், அந்த கிரகத்திற்கான தனித்துவமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய தயார் செய்யப்படுகிறது.
இதன் ஏவுதல் குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் தொடர்ந்து வெள்ளி கிரகத்திலும் இஸ்ரோ ஆய்வு செய்ய முனைந்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து இஸ்ரோ வளர்ச்சி பாதையில் செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் 2024 மிகப்பெரிய சாதனைகளை படைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு போல இஸ்ரோவிற்கு 2024 ஆம் ஆண்டும் பல மைல்கல் பதிக்கப்பட்ட ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









