காற்றையே எரிபொருளாக மாற்றி விண்ணில் பாயும் ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி! இஸ்ரோ புதிய சாதனை!

காற்றையே எரிபொருளாக மாற்றி அதிக வேகத்தில் பயணம் செய்யும் புதிய ராக்கெட் இன்ஜின் தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை சோதனை செய்வதற்காக நேற்று ரோகினி 560 என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இது இந்த தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் இன்ஜினை பொருத்திய ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் விண்ணில் பாய்ந்து இஸ்ரோவிற்கு புதிய சாதனை மைல் கல்லை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராக்கெட் இன்ஜின்கள் எல்லாம் எரிபொருளுடன் உடன் சேர்ந்து ஆக்ஸிடைசர் என்ற பொருளும் தனியாக இருக்கும். அதிக பிரஷரில் ஆக்ஸிடைசர் எரிபொருளுடன் கலந்து இன்ஜின் உள் செல்லும்போதுதான் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டு அதிக உந்து சக்தியில் அதிக எடை கொண்ட ராக்கெட் விண்ணை நோக்கி எளிதாக பாய முடியும். இதன் காரணமாக தனியாக ஆக்ஸிடைசர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய தொழிற்நுட்பத்தில் இயங்கும் ராக்கெட் இன்ஜினை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

isro air breathing propulsion system test

இந்த ராக்கெட் இன்ஜினிற்கு தனியாக ஆக்ஸிடைசர் தேவையில்லை. இது காற்றில் உள்ள ஆக்ஸிஜனையே தனியாக பிரித்து எடுத்து அதை மெக்கானிக்கலாகவோ அல்லது இயற்கையாகவோ கம்பிரஷ் செய்து சூப்பர் சோனிக் வெலாசிட்டிக்கு கொண்டு வந்து பின்னர் அதை ராக்கெட் எரிபொருளுடன் கலந்து இன்ஜினிற்கு எரிவதற்காக அனுப்பும். இதனால் அதிக பிரஷருடன் வெடிப்பு ஏற்பட்டு அதிக உந்து சக்தி ராக்கெட்டிற்கு கிடைக்கும்.

இந்த இன்ஜினை சோதனை செய்ய முடிவு செய்த இஸ்ரோ இதை ரோகிணி 560 ராக்கெட்டில் இரு பக்கமும் பொருத்தி சோதனை செய்துள்ளது. 2 ஸ்டேஜ்களாக இந்த இன்ஜின் வேலை செய்யும். நவீன தொழிற்நுட்பங்களை பொருத்தி இன்ஜின் எப்படி வேலை செய்கிறது என்ற ஒவ்வொரு விஷயங்களையும் டெஸ்ட் செய்தது. இந்த ஒரு சோதனை ஏவுதலில் 100க்கும் அதிகமான தரவுகள் சேகரிக்கப்பட்டன.

இந்த சோதனையில் எல்லாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. ராக்கெட்டின் செயல்பாடும் இஸ்ரோவிற்கு திருப்திகரமாக அமைந்திருந்தது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து இந்த இன்ஜினின் அடுத்தகட்ட மேம்பாட்டிற்கு திட்டமிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட் இன்ஜின் இதுவரை முழு கமர்ஷியல் ராக்கெட்டில் பயன்படுத்தும் இன்ஜினாக வடிவமைக்கப்படவில்லை.

இந்த ராக்கெட் இன்ஜின் வெளியில் உள்ள காற்றை உள்ளே இழுத்து பயன்படுத்துவதால் இது ஏர் பிரீத்திங் ராக்கெட் என அழைக்கப்படுகிறது. இந்த இன்ஜின் வெற்றிகரகமாக முழு வடிவம் பெற்றால் இது கமர்ஷியல் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இனி இஸ்ரோ வெளிநாட்டு நாட்டு நிறுவனங்களின் செயற்கைகோள்களை அதிகம் விண்ணில் செலுத்த திட்டமிட்டு வருவதால் அதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது உள்ள ராக்கேட் இன்ஜினில் தனியாக ஆக்ஸிடைசர் பொருத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. இந்த பொருட்செலவை குறைப்பதற்காகவே இந்த தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ராக்கெட் இன்ஜின்கள் தயாரிப்பு செலவும், அதே நேரம் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதற்கான எரிபொருள் செலவும் மிகக் குறைவாக ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைவான ஏவுதல் செலவு சாத்தியமாக்கவே இந்த இன்ஜினை தயாரித்து வருகிறது.

எந்த அளவுக்கு குறைவான விலையில் ராக்கெட்டை ஏவ முடியுமோ அந்த அளவுக்கு குறைவான விலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான தொழிற்நுட்பங்களை தற்போது இஸ்ரோ ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் கூட இஸ்ரோவின் உதவியை நாடி செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப திட்டமிடும் என எதிர்பார்க்கலாம்.

இதற்காக தான் தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் பகுதியில் புதிதாக ராக்கிட ஏவுதல் மையத்தை தற்போது இஸ்ரோ அமைத்து வருகிறது. இந்த மையம் ரெடியான பிறகு இங்கிருந்து கமர்ஷியல் ரக செயற்கை கோள்கள் எல்லாம் விண்ணில் பாயும் என எதிர்பார்க்கலாம். இந்த ராக்கெட் ஏவுகளம் ரெடியான பிறகு அடிக்கடி விண்ணில் ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகளை இஸ்ரோ செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ மட்டும் குறைந்த விலையில் ராக்கேட் ஏவுதல் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால், உலக நாடுகளை விட இஸ்ரோ தான் குறைவான விலையில் ராக்கெட்டை ஏவுதலை செய்யும். இதனால் மற்ற நாடுகள் இந்தியாவின் உதவியை நாடி விண்வெளியில் செயற்கைகோளை அனுப்ப திட்டமிடும். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி தரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 11:08 [IST]
English summary
Isro air breathing propulsion system test
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+