ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவும் நிகழ்வை காண டிக்கெட் எடுப்பது எப்படி?

சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்த போகிறது. இந்த நிகழ்வை நேரில் பார்க்க இஸ்ரோ பொது மக்களை அழைத்துள்ளது இதற்கான முன்பதவு டிக்கெட்டை எப்படி புக்கிங் செய்வது என காணலாம் வாருங்கள்.

இஸ்ரோவை உலக நாடுகள் எல்லாம் வியந்து பாராட்டி வருகின்றனர் இந்நிலையில் இஸ்ரோ அடுத்தடுத்த தனது திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ள நிலையில் இஸ்ரோ அடுத்ததாக விண்ணில் ஒரு விண்கலத்தை அனுப்ப தயாராகிவிட்டது. அதன்படி ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை சூரியனுக்கு ஆய்வு செய்வதற்காக விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

aditya l1 launch booking

இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் ஒன்றான எல் 1 என்ற சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியனை பல்வேறு விதமான ஆய்வுகள் செய்து அது குறித்த தகவல்களை பூமிக்கு இஸ்ரோவிற்கு அனுப்பப் போகிறது.

இதற்கான ஏவுதல் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி இந்திய நேரப்படி சரியாக காலை 11:50 மணிக்கு விண்ணில் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் பாய்கிறது. இந்த நிகழ்வை நேரடியாக பார்க்க இஸ்ரோ மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து மக்கள் இந்த நிகழ்வை நேரடியாக கண்டு ரசிக்கலாம்.

aditya l1 launch booking

இதற்கான டிக்கெட் விலை எதுவுமில்லை இலவசம் தான் என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த லான்ச் கேலரியில் இருக்க முடியும் என்பதால் இதற்கு முன்பதிவு கட்டாயம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp இந்த லிங்கில் சென்று நாளை அதாவது 29ஆம் தேதி சரியாக மதியம் 12மணி முதல் புக்கிங் செய்து கொள்ளலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே புக்கிங் செய்ய அனுமதி உள்ளது.

மேலும் இவ்வாறு புக்கிங் செய்தவர்கள் லான்ச் அன்று நேரடியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்று அங்கு இருந்து ராக்கெட் ஏவுதலை நேரடியாக கண்டு களிக்கலாம் இது மட்டுமல்ல இப்படியாக புக்கிங் செய்து செல்பவர்கள் தங்களது அரசு வழங்கிய அடையாள அட்டை ஒன்றை கொண்டு சென்றால் மட்டுமே அவர்கள் லாஞ்ச் வியூ கேலரி உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

aditya l1 launch booking

இப்படியாக டிக்கெட் எடுத்து இந்த நிகழ்வை நேரில் கண்டு களிக்க போகும் மக்களுக்கு இது மட்டுமல்லாமல் மற்ற மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. இஸ்ரோ இந்தப் பகுதியில் தான் தனது ராக்கெட் கார்டனை வைத்திருக்கிறது. அதாவது இஸ்ரோவின் சவுண்டிங் ராக்கெட் முதல் எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி என அனைத்து ராக்கெட்டுகளையும் இங்கு காண முடியும்.

அடுத்ததாக ராக்கெட் ஏவுதலை நேரடியாக கண்டு களிக்க முடியும் இது போக ஸ்பேஸ் மியூசியம் ஒன்றையும் இப்பகுதியில் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது ஸ்பேஸ் மியூசியம் மற்றும் லான்ச் வியூ கேலரி மட்டுமே பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளது. ராக்கெட் கார்டன் இன்னும் திறக்கப்படவில்லை.

இதற்காக முன்பதிவு செய்யும்போது உங்களது செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடியை கைவேசம் வைத்துக் கொள்ளுங்கள். முன்பதிவின்போது இந்த இரண்டு தகவல்களும் கேட்கப்படும். இதை வழங்கினால் மட்டுமே முன் பதிவு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடக்கும் சுமார் 5000 பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான். சாதாரண மக்களுக்கு ராக்கெட் சயின்ஸ் என்பது அறிவியலில் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் இந்த மாதிரியான ராக்கெட் ஏவுதல் வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் கண்டு களித்து விட வேண்டும் நீங்கள் இந்த டிக்கெட்டை புக் செய்ய தயாரா?

Article Published On: Monday, August 28, 2023, 19:29 [IST]
English summary
Isro announces launch details of aditya l1 on sept 2 know how to book the visiting pass
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X