நாசா கூட பண்ண தயங்கிய விஷயத்தை இஸ்ரோ அசால்டா பண்ண போறாங்க! உலக நாடுகள் இஸ்ரோவை வியந்து பார்க்க போகுது!
இஸ்ரோ தன்னிடம் உள்ள எல்விஎம் 3 ராக்கெட்டை விட அதிக திறன் கொண்ட ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த ராக்கெட் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ராக்கெட் என்ன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது இதில் பயன்படுத்தப்படும் இன்ஜின் என்ன விரிவான விபரங்களை காணலாம்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலகின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக இருக்கிறது. இஸ்ரோ சொந்தமாக ராக்கெடடை தயாரித்து அதை விண்வெளிக்கு அண் ஆய்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலம் கூட இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்டில் தான் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோவின் தற்போது அதிநவீன திறன் கொண்ட ராக்கெட் 3 ராக்கெட் இருக்கிறது. இதுதான் அதிக எடை கொண்ட விண்கலம் மற்றும் சாட்டிலைட்களை பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு கொண்டு சென்று விடும். இந்நிலையில் இந்த எல்விஎம் 3 ராக்கெட்டை விட அதிக திறன் கொண்ட அதே நேரத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான குறைந்த எரிபொருள் செலவில் பயணிக்கக் கூடிய ராக்கெட்டை தயாரிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதற்காக இஸ்ரோ சில தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகளை செய்தாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இஸ்ரோ தயாரிக்கப் போகும் ஒரு தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் "ஸ்கிராம் ஜெட்" இன்ஜின் கொண்ட ராக்கெட் ஆக தான் இருக்கும் என இஸ்ரோவின் சேர்மன் சோம்நாத் சமீபத்தில் பேசியுள்ளார்.

அது என்ன ஸ்கிராம் ஜெட் இன்ஜின்? இந்த ஸ்கிராம் ஜெட் என்பது ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜினின் அடுத்த வெர்ஷன் ஆகும். இது தற்போது ஆட்டோமொபைல் வாகனங்கள் இயங்குவது போல காற்றை அடிப்படையாகக் கொண்டு எரிந்து இயங்கும் ரகமான இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜினிற்காக காற்றை எடுத்து வர இந்த ராக்கெட்டின் ஆங்காங்கே ஃபனல் போன்ற வடிவமைப்பு வழங்கப்படும் இதன் வழியாக அதிவேகமாக காற்று உள்ளே புகுந்து அந்த ஃபனலின் மறுபக்கம் சிறிய வாய் வழியாக கம்ப்ரஸ் செய்யப்பட்டு அதிக அழுத்தத்தில் காற்று இஞ்சினிற்குள் செலுத்தப்படும்.

அந்தக் காற்றை அடிப்படையாக வைத்து இன்ஜின் செயல்படும்.ராம்ஜெட் இன்ஜினுக்கும் இந்த ஸ்கிராப்ஜெக்ட் இன்ஜினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ராம்ஜெட் இன்ஜினில் மிக மெதுவாக தான் காற்றை இன்ஜினிற்குள் நிற்கும் செலுத்தும் ஆனால் ஸ்கிராம் ஜெட் இன்ஜின் அதிவேகமாக காற்று இன்ஜினிற்குள் செலுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டது.
இந்தியாவின் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையில் இதே ராம்ஜெட் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரம் பிரம்மோஸ் ஏவுகணையின் சூப்பர் சோனிக் வேரியண்டில் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த ஸ்கிராம் ஜெட் இன்ஜினை ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்படவில்லை. இதற்கான முயற்சியில் தற்போது இஸ்ரோ இறங்கியுள்ளது.

தற்போது ஸ்கிராம் ஜெட் என்ஜின் சூப்பர்சோனிக் வேகமான 1.2 முதல் 5 மெக் வேகம் வரை செல்லும். ஆனால் ஸ்கிராம் ஜெட் இன்ஜின் ராக்கெட்டில் பொருத்தப்பட்டால் அது சூப்பர்சோனிக் வேகமான ஐந்து மெக்கிற்க்கும் அதிகமான வேகத்தில் செல்ல வேண்டும். ஒரு மெக் வேகம் என்றால் சுமார் மணிக்கு 1225 கிலோமீட்டர் வேகமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ இந்த ஏர் பிரீத் இன்ஜினை சவுண்டிங் ராக்கெட்டில் வெற்றிகரமாக டெஸ்ட் செய்தது. தற்போது அதிலேயே பெரிய இன்ஜினை உருவாக்கி வருகிறது. இதை விரைவில் சோதனை செய்யவுள்ளது. இந்த ராக்கெட் தான் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ராக்கெட் துறையில் மீத்தேன் இன்ஜின் தான் மிக முக்கியமான விஷயமாக பேசப்படுகிறது. ஹைட்ரஜன் அளவிற்கு மீத்தேன் மிகச்சிறந்த எரிபொருள் இல்லை என்றாலும் மீத்தேனை சேமிக்க தேவையான டெம்பரேச்சர் மிக குறைவாக இருக்கிறது. 161 டிகிரி செல்சியசில் அதை சேமித்தால் போதும் ஆனால் ஹைட்ரஜனை 283 டிகிரி செல்சியஸில் சேமிக்க வேண்டும்.
அதே நேரம் மீத்தேன் அவ்வளவு எளிதாக லீக் ஆகாது ஹைட்ரஜனை விட மீத்தேன் மாலிக்யூள்கள் பெரிதாக இருக்கிறது. மீத்தேனின் விலையும் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் ராக்கெட் அனுப்பும் நிறுவனங்கள் எல்லாம் தற்போது லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேன் எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர். ஆனால் இதுவரை லிக்யூட் மீத்தேன் ராக்கெட்டுகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. அதை உருவாக்க சில முக்கியமான சவால்கள் இருக்கிறது.

இந்த ரக இன்ஜினை தயாரிப்பதில் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது. ஒன்று ஆக்ஸிஜன் இல்லாமல் எரிய வைப்பது மற்றொன்று சூட் டெபாசிட் அதாவது இன்ஜின் எறியும் போது அதிலிருந்து வெளியாகும் கழிவுகள் டெபாசிட் ஆவது. மீத்தேன் எரியும் போது அதிலிருந்து கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை கழிவாக வெளியாகிறது அதற்கு கார்பன் அப்பகுதியில் உள்ள டியூப்களில் படிந்து விடுகிறது. இது கம்பஷினில் இன்ஸ்டெபிலிட்டியை உருவாக்குகிறது.
இதனால் தற்போது ஆய்வாளர்கள் சூட் படியாத செராமிக் மெட்டல்களைக் கொண்டு இன்ஜினை வடிவமைக்கவும் அல்லது எரிபொருளுடன் கூடுதலாக சில விஷயங்களை கலப்பது மூலம் தவிர்க்க முடியுமா என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ அர்ஜின், ராக்கெட் லேப் ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளது. அவர்களும் மீத்தேன் ராக்கெட்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சீனாவை சேர்ந்த லேண்ட்ஸ்கேப் என்ற நிறுவனம் சூகியூ 2 என்ற ராக்கெட்டை இந்த மீத்தேன் ராக்கெட்டாக கடந்த 11ம் தேதி வெற்றிகரமாக வடிவமைத்து உள்ளது. இந்தியாவும் மீத்தேன் ராக்கெட்டுக்கான ஆய்வில் தீவிரமாக இறங்கி உள்ளது. மீத்தேன் எரிவாயுவை ராக்கெட்டில் பயன்படுத்தினால் அதன் எடை குறைவாக இருக்கும் மண்ணெண்ணையை விட மீத்தேன் ஐந்து மடங்கு எடை குறைவானது இதனால் சிறப்பான திரஸ்ட்டை ராக்கெட்டில் உருவாக்க முடியும்.
இந்தியா தற்போது ஹைப்பர்சோனிக் ஏர் பிரீத்திங் வெஹிக்கிள் அசெம்பிளி என்ற புதிய ரக ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இது 500 கிலோ அளவிலான எடை கொண்ட பேலோடுகளை லோ எர்த் ஆர்பிட் எனப்படும் பகுதியில் வரை விட்டுவிட்டு பின்னர் ஏர் ஸ்டிரிப்களில் தரை இறங்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோவின் ஹைப்பர்சோனிக் ராக்கெட்டின் புரோட்டோ டைப் விரைவில் சோதனைக்காக தயாராக உள்ளது. இஸ்ரோ இந்த தொழில்நுட்பம் போக வெர்ட்டிக்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங், எலெக்ட்ரிக் புரோபல்ஷன், நியூகிளியர் புரோபல்ஷன் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்பங்களில் ஆய்வு செய்து வருகிறது. இதை எப்படி செயல்பாட்டிற்கு கொண்டு வரலாகம் என தீவிரமாக யோசித்து வருகிறது. விரைவில் இதுவும் சாத்தியமாகும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications









