சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி சீனாவில் இருந்து தான் அதிகமாக வருகிறது. தற்போது அந்த தொழிற்நுட்பத்தையும் மிஞ்சும் அளவிற்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ

இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி சீனாவில் இருந்து தான் அதிகமாக வருகிறது. தற்போது அந்த தொழிற்நுட்பத்தையும் மிஞ்சும் அளவிற்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பேட்டரிகளை தயாரித்துள்ளது. இதை வாங்கி பயன்படுத்த 137 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. எலெக்ட்ரிக் தொழிற்நுட்பத்தில் மிக பெரிய சவாலே பேட்டரிகளை தயாரிப்பது தான்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த லித்தியாம் இயான் பேட்டரிகள் தான் தேவைப்படுகிறது. இங்கு நமது தேவையான அளவிற்கு பேட்டரிகள் இல்லை. இதனால் நாம் சீனா, கொரியா போன்ற நாடுகளில் இருந்து தான் பேட்டரிகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மூலம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை தயாரிக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சாத்தியகூறுகள் இருப்தால் இந்த முயற்சியில் அரசு இறங்கியது.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இந்நிலையில் இஸ்ரோ சார்பில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சுமார் 137 நிறுவனங்கள் இஸ்ரோ தயாரிக்கும் பேட்டரியை வாங்கி கொள்ளவதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் : " இன்று நடந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களுடனா சந்திப்பில் சுமார் 137 நிறுவனங்கள் இஸ்ரோ தயாரிக்கும் பேட்டரிகளை வாங்க முன் வந்துள்ளன. இஸ்ரோ தயாரிக்கும் பேட்டரிகளை கையாளும் வசதிகள் அந்நிறுவன்களுக்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கேட்டோம்

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

அவர்கள் அனைவரும் சம்மதிபதுள்ளனர். முதற்கட்டமான இஸ்ரோ தயாரிக்கும் பேட்டரியின் தொழிற்நுட்பம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. அதன் மூலம் தான் அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவுள்ளனர். தற்போது இஸ்ரோ தயாரித்துள்ள இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் கார்கள் தயாரித்து அதற்கான பேட்டரியை பெற விரும்பினால் அதற்கான உரிய சான்றிதழ்களை அவர்கள் சமர்பிக்க வேண்டும்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இது மட்டும் இல்லாமல் இஸ்ரோவிடம் பேட்டரிகளை வாங்கும் நிறுவனங்கள் ரூ 4 லட்சத்தை முன்பணமாக வழங்க வேண்டும். அந்நிறுவனங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஒப்ந்தத்தை நிறத்தி விட்டு செல்லலாம் அவர்களுக்க முன்பணம் திரும்பஅளிக்கப்படும்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இஸ்ரோ நேரடியாக அந்த பேட்டரிகளை தயாரிக்க போவதில்லை. இஸ்ரோ அந்த தொழிற்நுட்பத்தை மட்டும் சிலருக்கு வழங்கி அவர்கள் மூலம் பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இஸ்ரோ தொழிற்நுட்பம் மூலம் பேட்டரி தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரு முறை கட்டணமாக ரூ 1 கோடி என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பேட்டரிகளோ, இந்த பேட்டரி தயாரிக்கும் தொழிற்நுட்பமோ வழங்கப்படமாட்டாது. இந்த தொழிற்நுட்பத்திற்கு காப்புரிமை இஸ்ரோவிடம் தான் உள்ளது.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க 50 ஆம்ப் ஹவர் மற்றும் 100 ஆம்ப் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் தான் தேவைப்படும் அந்த ரக பேட்டரிகளை அதிக அளவில் தயாரிக்க தயாராகவுள்ளோம். இது அரசு மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களை பயன்படுத்தவைக்கும் முயற்சிக்கு ஈடு கொடுப்பதாகும். இதனால் காற்று மாசு வெகுவாக கட்டுப்படும்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய குழுவினர் தற்போது இஸ்ரோ தொழிற்நுட்பத்தில் பேட்டரிகளை தயாரிக்கும் நிறுவனங்களை பட்டியல் எடுத்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு அளவுகளில், பல்வேறு வகையான பேட்டரிகளை தயாரிக்கவுள்ளனர்.

சீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது

இந்த பேட்டரிகள் இஸ்ரோவின் நேரடி பயன்பாட்டிற்கும், ஆட்டோமொபல் துறையினருக்கும் மட்டும் அல்லாமல் மொபைல்கள், லேப்டாப்கள், கேமராக்கள், தகவல் தொழிற்நுட்ப பயன்பாடுகள், தொழிற்சாலை பயன்பாடுகள் என பலவற்றிற்கு பயன்படுத்த முடியும்" என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
137 companies eye ISRO's e-vehicle battery technology. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X