நெல்லை மாவட்டத்தில் ரகசியமாக நடந்த இஸ்ரோ சோதனை! உலக நாடுகள் எல்லாம் இப்ப வாயடைச்சு போக போறாங்க!

இஸ்ரோ நிறுவனம் தனது ககன்யான் திட்டத்திற்காக பயன்படுத்த போகும் கிரையோஜினிக் இன்ஜினை தற்போது மனிதர்கள் அமர்ந்து செல்லும் வாகனத்தை உந்து சக்தியில் செலுத்தும் இன்ஜினாக தரம் உயர்த்தி அதை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதன் மூலம் ககன்யான் திட்டத்தில் மிக முக்கியமான மைல் கல் இன்று இஸ்ரோவால் எட்டப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்தாண்டு இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறக்கியது. இது உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த நாடுகளும் செய்யாத அளவிற்கு இந்த சாதனையை இஸ்ரோ செய்துள்ளது. இதனால் இஸ்ரோவின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டமாக இந்த திட்டம் தான் இருக்கிறது.

isro gaganyaan mission

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் படி பூமியிலிருந்து மூன்று மனிதர்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு அவர்கள் நிலை நிறுத்தப்பட்டு, மூன்று நாட்கள் அவர்கள் ஆய்வு செய்து அங்கிருந்து அவர்கள் பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்புவது தான் இந்த திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்திற்கான சோதனைகள் எல்லாம் நடந்து வருகின்றன.

இது இஸ்ரோ மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அளிப்பும் திட்டமாகும். இதனால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய பல்வேறு வகையான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. இதன்படி இந்த திட்டத்திற்காக முதல் சோதனை ஏவுதல் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தது. அந்த சோதனையின் போது ஏவுதலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அதை நிறுத்துவதற்கான அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன.

இது வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இஸ்ரோ இந்த ககன்யான் திட்டத்தின் போது மனிதர்கள் அமர்ந்து செல்ல பயன்படுத்தப்படும் விண்கலத்தை எடுத்துச் செல்லும் இன்ஜினாக கிரையோஜீனிக்குஇன்ஜினை பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின் தான் ககன்யான் திட்டத்தின் போது ஏவப்பட உள்ள எல்விஎம் 3 ராக்கெட் மேல் தட்டில் உள்ள இன்ஜினாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இதுவரை மனிதர்கள் அமர்ந்து செல்லும் அளவிற்கு உள்ள விண்கலத்தை இந்த இன்ஜினால் எடுத்துச் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை என்பதால் இதை பூமியில் வைத்தே சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்த இன்ஜின் சோதனை செய்யப்பட்டது.

இந்த கிரையோஜினிக் இன்ஜின் மனிதர்கள் அமர்ந்து செல்லும் விண்கலத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது தான் என்பதை ஆய்வு செய்வதற்காக மொத்தம் 4 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நான்கு இன்ஜின்களும் 39 முறை ஃபயரிங் செய்யப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டது. இந்த 39 முறைகளும் மொத்தமாக சேர்ந்து சுமார் 8,810 நொடிகள் இந்த இன்ஜின் ஃபயர்ங்கில் இருந்தது.

இஸ்ரோவை பொறுத்தவரை மனிதர்களை எடுத்துச் செல்லும் இந்த இன்ஜின் வெறும் 6350 நொடிகள் ஃபயரிங்கில் இருந்தாலே போதுமானது தான். ஆனால் இந்த இன்ஜின் 8,810 நொடிகள் செயல்பாட்டில் இருந்ததால் இது மனிதர்களை சுமந்து செல்ல தயாராக இருக்கும் இன்ஜினாக இஸ்ரோவால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை என்பது ககன்யான் திட்டத்திற்கான மிக முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்கு மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப தயாராகி விட்டது என்றே சொல்லிவிடலாம். அடுத்த கட்டமாக இந்த இன்ஜினை நேரடியாக மனிதர்கள் அல்லாத சோதனைக்கு எடுத்துச் செல்லப்படும். அடுத்த ஒரு சில மாதங்களில் சுகன்யான் திட்டத்திற்கான இரண்டாம் கட்ட சோதனை என்பது நடக்க உள்ளது.

அதன்படி இஸ்ரோ முழுமையாக இந்த ககன்யான் திட்டத்தை மனிதர்கள் அல்லாமல் ரோபோக்கள் மூலம் இயக்கி சோதனை செய்ய உள்ளது. இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அடுத்த ஒரு சில மாதங்களில் மனிதர்கள் கடன் ஏன் திட்டம் மூலம் விண்ணிற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் மூன்று நாட்கள் ஆய்வு செய்து மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ ககன்யான் திட்டம் மூலம் மிகப்பெரிய சாதனையை செய்ய உள்ளது. உலகில் வெகு சில நாடுகளே இந்த சாதனையை செய்துள்ளன. இந்த பட்டியலில் தற்போது இஸ்ரோவும் இணையப் போகிறது இதற்கான அனைத்து முயற்சிகளும் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை சுகன்யான் திட்டம் எல்லாம் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 17:39 [IST]
English summary
Isro gaganyaan ce20 cryogenic engine human rated
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+