அக்.21ஆம் தேதி இஸ்ரோ செய்ய போகும் காரியம்!! விண்வெளி வீரர்கள் மத்தியில் இந்த பேச்சு தான் ஓடுது!

இஸ்ரோ (ISRO) அதன் புதிய காகன்யான் மிஷனுக்கான சோதனையை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணையை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. விண்வெளிக்கு 3 வீரர்களை அனுப்பும் திட்டமான காகன்யான் குறித்த இந்த அறிவிப்பை டுவிட்டரில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) அதன் காகன்யான் மிஷனில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மிஷனுக்கான சோதனை வருகிற அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிக்கு உள்ளாக ஸ்ரீஹரிகோட்டாவில் டிவி-டி1 என்ற சோதனை விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், காகன்யான் திட்டத்தில் பூமியின் கீழ் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப்பட உள்ள விண்வெளி வீரர்களின் படங்களையும் இஸ்ரோ இந்த டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் விண்வெளிக்கு செல்லும் குழுவினரின் செயல்திறன் சோதனை செய்யப்பட உள்ளது.

இதன்மூலமாக, அவசர காலத்தில் தப்பிக்கும் நுட்பம் எவ்வாறு விண்வெளி வீரர்களிடம் உள்ளது என்பதையும் இஸ்ரோ அறிய உள்ளது. இந்த சோதனையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் இந்த 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் புவியின் கீழ் சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பப்படுவர். இந்த பயணத்திற்கு, கடும் குளிர், திரவம் மற்றும் திடம் என 3 விதமான நிலைகளை கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

isro gaganyaan mission test flight

ராக்கெட்டிற்குள் பயணத்தின் போது நிலவும் சூழலை செயற்கையாக கொண்ட சோதனை விமானம் வருகிற அக்.21இல் மேற்கொள்ளப்பட உள்ள சோதனையில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சோதனையின் மூலம் விண்வெளி வீரர்களை பகுப்பாய்வு செய்வது மட்டுமின்றி, அவர்களுக்கு தேவையான கருவிகளை சோதனை செய்யவும் முடியும் என இஸ்ரோ நம்புகிறது.

குறிப்பாக, விண்வெளி வீரர்களுக்கான எஸ்கேப் சிஸ்டத்தை சோதனை செய்ய இஸ்ரோ ஆர்வமாக உள்ளது. அத்துடன், பயணத்திற்கு பயன்படுத்தப்படும் எல்.வி.எம்-3 ராக்கெட்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின், அதனையும் இஸ்ரோ மேற்கொள்ள துவங்கும். விண்வெளியில் 3 நாட்களுக்கு 400கிமீ தொலைவிற்கு வீரர்கள் தங்களது ஆய்வுகளை மேற்கொள்வர்.

isro gaganyaan mission test flight

ஆய்வுகளை முடித்த பின் அவர்கள் பூமிக்கு திரும்புவர். இந்த லேண்டிங்கை இந்திய பெருங்கடலின் மீது இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. காகன்யான் திட்டத்திற்கான பெயரில் உள்ள விண்வெளி வீரர்கள் தற்சமயம் பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலவு, சூரியன் என அடுத்தடுத்த நிலைகளை வேகமாக எட்டிவரும் இஸ்ரோ, இதற்கு மத்தியில் காகன்யான் போன்ற தனது வழக்கமான விண்வெளி பயணங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காகன்யான் மிஷனுக்காக தற்சமயம் பயிற்சி எடுத்துவரும் விண்வெளி வீரர்களுக்கான சோதனை வருகிற அக்.21ஆம் தேதி இருக்க போகிறது.

Article Published On: Tuesday, October 17, 2023, 17:39 [IST]
English summary
Isro gaganyaan mission test flight scheduled all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+