இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்! இந்த விஷயத்தை எல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று மெட்டாலஜிக்கல் சேட்டிலைட்டான இன்சாட் 3d எஸ் என்ற சேட்டிலைட்டை விண்ணில் செலுத்துவதற்காக ஜிஎஸ்எல்வி எப் 14 என்ற ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் ஏவுதல் குறித்த விரிவான தகவல்கள் இந்த சேட்டிலைடின் பயன்பாடு மற்றும் இது குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இந்திய விண்வெளி ஆய்வுமயமான இஸ்ரோ தற்போது உலக நாடுகளின் பார்வையில் இருக்கிறது. இஸ்ரோவின் ஒவ்வொரு ஏவுதலையும் உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. இந்நிலையில் இன்று இஸ்ரோ இந்தியாவில் உள்ள மெட்டாலஜிக்கல் துறைக்கான சேட்டிலைட்டான இன்சர்ட் 3டி எஸ் என்ற சேட்டிலைட் விண்ணில் ஏவுகிறது. இதற்காக ஜிஎஸ்எல்வி எஃப்14 என்ற ராக்கெட் பயன்படுத்துகிறது.

isro gslv f14 launch

இந்த ராக்கெட் இந்த சேட்டிலைட்டை ஜிடிஓ எனப்படும் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு சென்று நிலை நிறுத்துகிறது. நேரடியாக பூமியை கண்காணித்து பூமியில் உள்ள பருவநிலை மாற்றம், வானிலை மாற்றங்கள், நிலங்கள், கடல், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து எதிர்காலத்தில் வரக்கூடிய இயற்கை பேரிடர்களை முன்பே கணித்து சொல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.

ஏற்கனவே மெட்டலர்ஜிக்கள் துறைக்கான இன்சர்ட் 3டி மற்றும் இன்சர்ட் 3டி ஆர் ஆகிய இரண்டு சாட்டிலைட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு அது பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது சேட்டிலைட்டக இன்சாட் 3டி எஸ் என்ற சாட்டிலைட் விண்ணில் இன்று செலுத்தப்படுகிறது. இந்த ஏவுதல் குறித்து நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது.

isro gslv f14 launch

இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பும் இந்த சேட்டிலைட் இன்று சரியாக மாலை 5:35 மணியளவில் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் உள்ளே ஏற்கனவே இன்சர்ட் 3டிஎஸ் என்ற சேட்டிலைட் பொருத்தப்பட்டு தற்போது ஏவுதலுக்கான கவுண்டவுன் நடந்து வருகிறது.

விண்ணில் இந்த சேட்டிலைட் நிலை நிறுத்தப்பட்டவுடன் இது செயல்படுத்தப்படும். செயல்படுத்தப்பட்டவுடன் அங்கிருந்து தரவுகளை எடுத்து பூமிக்கு அனுப்பும். இது இதன் மூலம் வானிலை குறித்த துல்லியமான தகவல்கள் மற்றும் பூமியின் மேல் பரப்பு குறித்த ஆய்வுகள் கடல் மற்றும் பெருங்கடல் குறித்த ஆய்வுகள் இயற்கை பேரிடர் எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நமக்கு கிடைக்கும்.

isro gslv f14 launch

இந்த ஏவுதற்காக பயன்படுத்தப்படும் ஜிஎஸ்எல்வி எஃப்-14 என்ற ராக்கெட் இதுவரை 15 முறை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. தற்போது 16வது முறை இது விண்ணில் செலுத்துவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த 15 முறையில் 6 முறை இந்த ராக்கெட் ஏவுதலில் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு கொண்டுதான் இருந்துள்ளது. பாக்கி உள்ள 9 முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவுதலுக்கான செலவை எர்த் சயின்ஸ் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கான அமைச்சகம் செலவு செய்து வருகிறது. இவர்கள் செய்த செலவின் மூலம் தான் இந்த சேட்டிலைட் விண்ணில் ஏவப்படுகிறது. ஒருமுறை ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்த ரூபாய் 500 கோடி வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-ம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் சாஃப்ட் லேண்டிங்கானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அடுத்தடுத்த மிகப்பெரிய சாதனைக்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஏற்கனவே ககன்யான் திட்டம் குறித்த முதல் கட்ட ஆய்வு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட ஆய்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. மேலும் தொடர்ந்து இந்தியா பல்வேறு விண்வெளி ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அதில் உள்ள விஞ்ஞானிகளின் உழைப்பு முக்கியமான காரணமாக இருக்கிறது. தற்போது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த இன்சர்ட் சேட்டிலைட்டை விண்ணில் செலுத்துவது அவர்களுக்கு ஒன்னும் கஷ்டமான காரியம் அல்ல. இதற்கு முன்பு ஏராளமான அனுபவங்கள் இருப்பதால் இதை நிச்சயம் வெற்றிகரமாக முடிப்பார்கள் என நம்பிக்கை கொள்வோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 10:06 [IST]
English summary
Isro gslv f14 launch insat 3ds satellite rollout
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X