நாளை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்! என்ன எடுத்துட்டு போகுது தெரியுமா?

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் நாளை இஸ்ரோ தனது ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்த ஏவுதல் என்பது நடக்கிறது. இந்த நிகழ்வை நேரில் காண்பது எப்படி ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது மேலும் இந்த நிகழ்வில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் நடக்கப்போகிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கியதன் மூலம் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ மாறி உள்ளது. தற்போது இஸ்ரோவின் செயல்பாடுகளை உலக நாடுகள் எல்லாம் உற்றுநோக்கி வருகின்றன.

ISRO INSAT 3ds Launch

இந்நிலையில் இஸ்ரோ நாளை பிப்ரவரி 17ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இது நேரடியாக ஜிடிஓ என்ற பூமியை சுற்றும் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த சாட்டிலைட் இந்தியாவில் உள்ள மெட்டாலஜிக்கல் குறித்த தரவுகளை பெற்றுத் தரும் சேட்டிலைட் ஆக பயன்பட போகிறது.

ஏற்கனவே இன்சாட் 3d மற்றும் இன்சாட் 3d ஆர் ஆகிய சேட்டிலைட்டுகள் எல்லாம் விண்ணில் ஏவப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது மூன்றாவது சாட்டிலைட்டாக இன்சாட் 3ds என்ற சேட்டிலைட்டை விண்ணில் செலுத்துகிறது இது சுமார் 2274 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

இந்த சேட்டிலைட் செயல்பாட்டிற்கு வந்தவுடன் பூமியில் நிகழ உள்ள புயல்கள் பருவநிலை மாற்றங்கள், மழை குறித்த தகவல்கள், இடி மின்னல் குறித்து தகவல்கள், இயற்கை பேரிடர்கள் குறித்து மேலும் துள்ளியமான தரவுகளை நமக்குப் பெற்றுத் தர உதவுகிறது. நிலம், நீர், கடல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய இது நமக்கு உதவுகிறது.

இந்த முழு நிகழ்வையும் இஸ்ரோ ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இதனால் உலகம் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த நிகழ்வை கண்டுகளிக்க முடியும். இதன்படி நாளை சரியாக மாலை 5:30 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக 5 மணி முதலிலேயே நேரடி ஒளிபரப்பு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வை நேரடியாக காண்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விலை புக்கிங் செய்தது. தற்போது அந்த டிக்கெட் எல்லாம் விற்கு தீர்ந்து விட்டன. ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்கள் இந்த நிகழ்வை நேரடியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்று பார்க்க முடியும். மற்றவர்கள் இதை ஆன்லைன் மூலம் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது.

இந்த ஏவுதல் மூலம் 19வது முறையாக இஸ்ரோ ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவுகிறது. பல்வேறு ஏவுதலுக்கு இஸ்ரோ தயாராகி தற்போது ஏவுதலை அசால்டாக கையாண்டு வருகிறது. தற்போது இந்த சேட்டிலைட் ஏவுதல் என்பது இஸ்ரோவிற்கு ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் எல்லாம் இல்லை. மிக சுலபமாக இதை வெற்றிகரமாக செய்து விடும் என்பதில் நாம் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

இஸ்ரோ அனுப்ப உள்ள இந்த விண்கலத்தில் உள்ள இன்சர்ட் 3ds விண்கலத்தில் இமேஜர், சவுண்டர், டேட்டா ரிலே டிரான்ஸ்போர்ட்டர், மற்றும் சேட்டிலைட் எய்டட் சர்ச் மற்றும் ரேஸ்கியூ டிரான்ஸ்போர்ட்டர், மல்டி ஸ்பெக்ட்ரல் இமேஜர். ஆறு வெவ் லென்த்தில் பூமியின் புகைப்படத்தை எடுத்தல் உள்ளிட்ட ஏகப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்நிலையில் விண்வெளி ஆய்வு மையத் ஒரு மைல் கல்லாக சந்தராயன் 3 விண்கலம் அமைந்து. இந்நிலையில் தற்போது இஸ்ரோ விண்ணில் செலுத்தும் ஒவ்வொரு ஏவுதலையும் உலக நாடுகள் கண்காணித்து வருகிறது. அதன்படி இதுவும் கண்காணிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 16, 2024, 7:00 [IST]
English summary
Isro insat 3ds launch feb 17 all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+