ISRO LVM3 Launch வருமானம் இவ்வளவு கோடியா? வாயை பிளந்த உலக நாடுகள்!

இன்று இஸ்ரோ ஒன்வெப் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தனது 2வது ராக்கெட் ஏவுதலை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொத்தம் 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுதலுக்கு இஸ்ரோ ஒன்வெப் இந்தியா-2 மிஷன் எனப் பெயர் வைத்திருந்தது. இந்த ராக்கெட் ஏவுதலில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றிக் காணலாம்

ரஷ்யா-உக்ரைன் போர்: ஒன் வெப் நிறுவனம் தனது ராக்கெட் ஏவுதலுக்காக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்துடன் தான் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இஸ்ரோவுடன் மீதம் உள்ள சாட்டிலைட்களை அனுப்ப ஒப்பந்தம் போட்டது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொண்டது.

isro-lvm3-launch-sriharikotta-03

இஸ்ரோவிற்கு வருமானம்: இந்த ராக்கெட் ஏவுதலை ஒரு கமர்ஷியல் பணியாகவே இஸ்ரோ செய்கிறது. இதற்காக சாட்டிலைட்களை அனுப்பும் நிறுவனத்திடம் பணம் வசூலிக்கிறது. தற்போது ஏவப்பட்ட எல்விஎம்3 ராக்கெட்டை ஒரு முறை ஏவ ரூ௫௦௦ கோடியை வசூலிக்கிறது. ஒன் வெப் நிறுவனத்திற்காக 2 முறை ஏவ வேண்டியது இருப்பதால் ரூ1000 கோடியை ஒன் வெப் நிறுவனத்திடம் கட்டணமாக வசூலித்துள்ளது.

பாரதி என்டர்பிரைசஸ்: என்னதான் ஒன் வெப் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்த நிறுவனத்தில் பெரும் பங்கை இந்தியாவைச் சேர்ந்த பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த
சுனில் பாரதி மிட்டல் தான் இதற்குத் தலைவர். இந்நிறுவனம் தான் இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.

isro-lvm3-launch-sriharikotta-01

பிஎஸ்எல்விக்கு பதில் ஜிஎஸ்எல்வி ஏன்: இஸ்ரோவிடம் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட்டை இந்த சாட்டிலைட்டை நிலைநிறுத்தும் உயரத்திற்குத் தாராளமான பயணிக்கும் இருந்தாலும் இஸ்ரோ இதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை எல்விஎம்3 ஆக மாற்றி அனுப்பியது அதற்குக் காரணம் சாட்டிலைட்களின் எடை தான்.

பிஎஸ்எல்வி 2டன் எடையை தான் தூக்கிச் செல்லும் ஆனால் ஜிஎஸ்எல்வி 8 டன் எடையைத் தூக்கிச் செல்லும். ஒன் வெப் நிறுவனத்தின் இந்த 36 சாட்டிலைட்களின் எடை மொத்தம் 5805 கிலோ ஆகும். அதனால் தான் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை இந்த திட்டத்திற்காகப் பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. தூரம் குறைவாக இருந்தாலும் ஜி
எஸ்எல்வி ராக்கெட்டால் மட்டுமே இந்த எடையைத் தூக்கிச் செல்ல முடியும் என்பதால் இதைத் திட்டமிட்டுள்ளது.

isro-lvm3-launch-sriharikotta-01

சாட்டிலைட் பயன்பாடு: இந்த சாட்டிலைட்களை கொண்டு செல்போன் டவர்கள், சிக்னல் எதுவும் இல்லாமல் நேரடியாக சாட்டிலைட் மூலம் தொடர்பை ஏற்படுத்தும் தொழிற்நுட்பத்திற்காக பயன்படுத்தப்போகிறது. ஒன் வெப் நிறுவனம் இதைத் தொழில், அரசு கட்டமைப்பு, கடற்சார் தொழில்கள், விமான தொலைத் தொடர்பு உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்போகிறது.

செயற்கைக்கோள் நிலை நிறுத்தம்: இன்றைய ராக்கெட் ஏவுதலின் போது மொத்தம் 36 சாட்டிலைட்கள் இவை 4 கட்டங்களாக தனித்தனி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. இதற்குக் காரணம் இந்த சாட்டிலைட்கள் எல்லாம் சிறு விமானங்கள் மூலம் கழட்டிவிடப்பட்டன. ஒரு விமானம் மற்றொரு விமானத்தில் மோதாமல் இருக்க ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு உயரத்தில் கழட்டி விடப்பட்டன. இதன் மூலம் சாட்டிலைட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்பாட்டிற்கு வரும்.

அண்டார்டிகா ஸ்டேஷன் உதவி: இஸ்ரோ இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவினாலும், இந்த ராக்கெட் குறிப்பிட்ட தூரம் வரை தான் இந்தியாவிருந்து கண்காணிக்க முடியும். ஆனால் இந்த பூமியின் தென் துருவமான அண்டார்டிக்காவிலிருந்து இதை எளிதாகக் கண்காணிக்கலாம். இதற்காகவே இஸ்ரோ அண்டார்டிக்காவில் தனக்கென 3 ஆய்வு மையங்களை வைத்துள்ளது. அவற்றை இந்த ஏவுதலுக்குப் பயன்படுத்தியுள்ளது.

16 சாட்டிலைட் விபரம் ஏன் வெளியாகவில்லை: இந்த ராக்கெட் ஏவும் நிகழ்வை நேரலையில் பார்த்த பலருக்கும். ஒருசந்தேகம் இருக்கும் மொத்தம் 16 சாட்டிலைட்கள் ராக்கெட்டை விட்டு பிரிந்து சென்ற பிறகு மற்ற சாட்டிலைட்கள் குறித்து ஏன் அப்டேட்வரவில்லை என தோன்றலாம். இந்த 16 சாட்டிலைட் வரை தான் ரியல் டைமில் டிராக் செய்யக்கூடிய தொழிற்நுட்பம் இருக்கிறது. அதை தாண்டியதும் ரியல் டைமில் அதை டிராக் செய்ய முடியாது. அதனால் மற்ற 16 சாட்டிலைட்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட பின்பு பூமிக்கு இது தகவல்களை அனுப்பும் அதனால் தான் 16 சாட்டிலைட்கள் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, March 26, 2023, 11:23 [IST]
English summary
Isro lvm3 launch price investment facts
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+