ISRO LVM3 OneWeb Satellite Launch: கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகியாச்சு! உலகநாடுகள் அனைத்தின் பார்வையும் இஸ்ரோ பக்கம்

இங்கிலாந்து தொழில்நுட்ப நிறுவனமான ஒன்வெப்புக்கு சொந்தமான 36 செயற்கைகோள்களைச் சுமந்துக் கொண்டு இஸ்ரோவின் எல்விஎம்3 ராக்கெட்டு நாளை விண்வெளிக்கு புறப்பட இருக்கின்றது. இதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டு உள்ளது. இது நாளை பூமியில் இருந்து விண்ணை நோக்கி புறப்படும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) எல்எம்வி3 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுனை இன்று (மார்ச் 25) தொடங்கி இருக்கின்றது. நாளை அது விண்ணிற்கு புறப்படும். இது அதிக எடையை தாங்கிச் செல்லும் புதிய வகை ராக்கெட் ஆகும். ஒட்டுமொத்தமாக 36 சேட்டிலைட்டுகள் இந்த ராக்கெட் வாயிலாக விண்ணிப்பிற்கு அனுப்பப்பட உள்ளன.

இஸ்ரோ எல்விஎம்3 ஒன்வெப்

அனைத்தும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஒன்வெப் (OneWeb) எனும் நிறுவனத்திற்கு சொந்தமானவை ஆகும். இந்த நிறுவனம் சென்ற ஆண்டில் 72 செயற்கோள்களை விண்ணிற்கு அனுப்புவதற்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்தது. இதற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாயும் இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் 36 செயற்கைகோள்கள் மார்க்-2 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நாளை 36 செயற்கைகோள்கள் விண்ணிப்பிற்கு அனுப்பப்பட உள்ளன. இந்த ராக்கெட்டே நாளைய தினம் விண்ணிற்கு புறப்பட இருக்கின்றது. இதற்கான கவுன்டவுனே தற்போது தொடங்கப்பட்டு இருக்கின்றது.

இஸ்ரோ எல்விஎம்3 ஒன்வெப்

நாளை காலை 9 மணி அளவில் ராக்கெட் விண்ணிற்கு செலுத்தப்பட இருக்கின்றது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. இஸ்ரோ தயாரித்து இருக்கும் எல்விஎம்3 ராக்கெட் 43.5 மீட்டர் நீளம் உயரம் கொண்டது.

மேலும், இதன் எடை 643 டன்கள் ஆகும். இத்தகைய பிரமாண்ட ராக்கெட்டே நாளை இந்தியாவில் இருந்து விண்ணிற்கு புறப்பட இருக்கின்றது. இதில் அனுப்பி வைக்கப்பட இருக்கும் செயற்கைகோள்கள் ஜென்1 ரகம் ஆகும். இவற்றின் எடை 5,805 கிலோ ஆகும். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையை (low earth orbit) வலம் வரும் விதமாக இந்த சேட்டிலைட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இஸ்ரோ எல்விஎம்3 ஒன்வெப்

எல்விஎம்3 ஓர் 3 ஸ்டேஜ் ரக ராக்கெட் ஆகும். அதாவது இது மூன்று விதமான மோட்டார்களால் இயங்கும் ரக ராக்கெட் ஆகும். முதல் நிலை மோட்டார் திரவ மற்றும் திட ரக எரிபொருளில் இயங்கும். இரண்டாவது நிலை மோட்டார் திரவ ரக ஃப்யூவலில் இயங்கும் திறன் கொண்டது. மூன்றாவது நிலை மோட்டார் கிரையோஜெனிக் ரக எஞ்ஜின் ஆகும்.

முன்னதாகக் கூறியதைப் போல் இந்த ராக்கெட் அதிக எடையைத் தாங்கக் கூடியதும்கூட. இதனால், 5 டன் வரை விண்வெளியின் ஜியோ டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் எனும் எல்லை வரை எடுத்துச் செல்ல முடியும். அதேவேளையில், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு இதனால் 10 டன் வரையில் சுமந்து செல்ல முடியும். இத்தகைய சூப்பர் வகை ராக்கெட்டே எல்விஎம்3 ஆகும்.

இஸ்ரோ இந்த திட்டத்திற்கு எல்விஎம்3-எம்3/ஒன்வெப் இந்திய-2 மிஷன் என பெயர் வைத்திருக்கின்றது. பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ராக்கெட் அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது. இலக்கை அடைந்த உடன், வெடித்து தனக்குள் இருக்கும் சேட்டிலைட்டுகளை அந்த ராக்கெட் விண்வெளியில் நிலை நிறுத்தும். இந்த 36 சேட்டிலைட்டுகளும் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங் சேட்டிலைட்டுகளுக்கு போட்டியாக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Saturday, March 25, 2023, 18:23 [IST]
English summary
Isro lvm3 one web 36 satellites launch 26th march
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+