ISRO LVM3 OneWeb Satellites ஏவப்பட்டது! இதெல்லாம் இஸ்ரோவுக்கு அல்வா சாப்பிடற மாதிரி
ISRO LVM3 OneWeb Satellite Launch Report: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக 36 செயற்கைக் கோள்களுடனான எல்விஎம்-3 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த 36 செயற்கைக்கோளும் இங்கிலாந்தைச் சேர்ந்த Network Access Associated Ltd
நிறுவனத்தின் ஒன் வெப் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் கம்யூனிகேஷன் சாட்டிலைட்களாகும். இஸ்ரோ இந்த பணியை கமர்ஷியலுக்காக செய்கிறது.
ஒன் வெப் என்பது தற்போது உள்ள தொலைத்தொடர்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பயனர்கள் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் நேரடியாக சாட்டிலைட் மூலம் தொலைத்தொடர்பை ஏற்படுத்தக்கூடிய திட்டம் தான் இந்த ஒன் வெப் இதற்கு 618 சாட்டிலைட்களை விண்ணில் ஏவ வேண்டும்.

இந்த திட்டத்திற்கான சாட்டிலைட்களை முதலில் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தான் விண்ணில் ஏவி வந்தது, ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு Network Access Associated Ltd நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தமிட்டு இந்த சாட்டிலைட்களை ஏவியுள்ளது.
இதில் முதல் கட்டமாக சில செயற்கைக்கோள்களைக் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 36 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. ஒன்வெப்பிற்காக மொத்தம் 618 செற்கை கோள்கோள்கள் விண்ணில் ஏவப்பட வேண்டும். அதில் 582 ஏற்கனேவ ஏவப்பட்ட நிலையில் தற்போது கடைசி 36 செற்கை கோள் தான் தற்போது விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ இதற்காகத் தனது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை எல்விஎம்-3 ராக்கெட்டாக மாற்றி சுமார் 5805 கிலோ எடை கொண்ட செற்கை கோள்களை ஏற்றி விண்ணில் பாய்ந்தது வானில் சரியாக இந்த செற்கைகோள்கள் லோ எர்த் ஆர்பிட் என அழைக்கப்படும் பகுதிக்குச் சென்று செற்கைகோள்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான கவுண்டவுன் நேற்றே துவங்கியது.
இஸ்ரோவிற்கு இந்த செற்கைகோள் ஏவுதல் எல்லாம் ஒரு கஷ்டமான காரியமே இல்லை. இந்த ராக்கெட் வெறும் பூமியிருந்து 1500 கி.மீ தூரம் வரை தான் செல்லும் இந்தியாவிடம் பூமிலிருந்து 36 ஆயிரம் கி.மீ உயரம் வரைக்கும் செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் எல்லாம் இருக்கிறது. லோ எர்த் ஆர்பிட் பகுதிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டே போதுமானது தான் ஆனால் இந்த ஏவுதலுக்கு எம்விஎம்3 ராக்கெட்டை பயன்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம் ஒன் வெப் செற்கைகோள்களின் எடை தான். மொத்தம் 5805 கிலோ எடையைச் சுமந்து செல்ல வேண்டியது உள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட்டால் 1750 கிலோ வரையிலான எடையை மட்டுமே சுமந்து செல்ல முடியும் என்பதால் இஸ்ரோ இதற்கு எல்விஎம் 3 ராக்கெட்டை பயன்படுத்தி வெற்றிகரமாக செற்கைகோள்களை நிலை நிறுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி எந்த வித பிரச்சனையும் இல்லாமல் காலை 9 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்ததையடுத்து இஸ்ரோ ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாகமடைந்தனர். முன்னர் இந்த ஏவுதல் ஆன்லைன் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. பலர் இதை வீட்டிலிருந்தே கண்டு ரசித்தனர். சிலர் இதைக் காண ஸ்ரீஹரிகோட்டாவிற்கே சுமார் 10 ஆயிரம் பேர் நேரில் சென்றிருந்தனர். அவர்கள் விசிட்டர் கேலரியிலிருந்து பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








