21ம் தேதி விண்ணில் பாய்கிறது ககன்யான்! அடுத்த சாதனைக்கு தயாரான இஸ்ரோ!

பூமியில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை பத்திரமாக மீட்டு மீண்டும் பூமிக்கு கொண்டு வரும். இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கான முதல் சோதனை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை தெளிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது சமீபத்தில் தான் சந்திரயான் 3 திட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. அது நடந்த அடுத்த ஒரு சில நாட்களிலேயே ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை பூமியிலிருந்து சூரியனை ஆய்வு செய்ய விண்ணிற்கு அனுப்பியது. தற்போது ஆதித்யா எல் 1 விண்கலமும் எல் 1 பாதையை நோக்கி தனது பயணத்தை செய்து வருகிறது.

gaganyaan test flight

நிலையில் இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம்தான். இந்த திட்டத்தின் படி பூமியிலிருந்து மூன்று மனிதர்களை தேர்வு செய்து அவர்களை பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரம் விண்வெளிக்கு கொண்டு சென்று அங்கு மூன்று நாட்கள் அவர்களை தங்க வைத்து ஆய்வுகள் நடத்தி பின்பு அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் தலையான நோக்கமாக இருக்கிறது.

இத திட்டத்திற்காக இஸ்ரோ மிக வேகமாக தயாராகி வருகிறது. இந்த திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்பு இரண்டு முறை ஆளில்லா ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி அதை பத்திரமாக பூமிக்கு வீட்டுக்கு கொண்டு வருவது தான். இந்த இரண்டு கட்டங்களாக நடக்கும் சோதனையில் முதல் கட்டத்திற்காக தற்போது இஸ்ரோ தயாராகிவிட்டது. வரும் 21 ஆம் தேதி இதற்கான முதல் கட்ட சோதனை துவங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த சோதனை கட்டத்திற்காக இஸ்ரோ விண்வெளிக்கு ராக்கெட் ஒன்றை வரும் 21ஆம் தேதி அனுப்பப் போகிறது. இந்த ராக்கெட் ககன்யான் விண்கலத்தை பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரம் வரை கொண்டு சென்று பின்பு அங்கிருந்து பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இப்படியாக பூமிக்கு வரும் ககன்யான் விண்கலம் வங்க கடல் பகுதியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக கடலில் விழும் விண்கலத்தை இந்திய கடற்படையினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இந்த சோதனையின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த சோதனையில் விண்வெளியில் ராக்கெட் பயணிக்க துவங்கும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ராக்கெட்டில் உள்ளே உள்ள வீரர்கள் தப்பிப்பதற்காக எஸ்கேப் கேப்சூல் ஒன்றை பொருத்தியுள்ளார்கள். அதையும் இந்த சோதனை கட்டத்தின் போது சோதனை செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

விண்வெளியில் மனிதருக்கு பதிலாக ரோபோவை முதலில் அனுப்பி ஆய்வு செய்யப்படும் என "வாய்வு மித்ரா" என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த சோதனை கட்டத்தில் ரோபோக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. ஆளில்லா மற்றும் ரோபோ இல்லாத ராக்கெட் மட்டும்தான் விண்வெளியில் பாய இருக்கிறது.

இந்த சோதனை வெறும் தொழில்நுட்ப ரீதியான சோதனை மட்டும்தான். அடுத்த கட்ட சோதனையில் தான் ரோபோ இணைக்கப்பட்டு அங்கு அந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும் என்றும் அந்த சோதனை தான் மனிதர்கள் பயணிப்பதற்கான சோதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 ஆதித்யா எல் 1 உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிக்கு பிறகு தற்போது ககன்யான் திட்டத்தையும் வெற்றிப்பாதையும் கொண்டு செல்ல இஸ்ரோ தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் இந்த சோதனையை முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதிலும் இஸ்ரோ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை முயிற்சியில் வெற்றி பெற்றால் இரண்டாம் கட்ட சோதனை 2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அது நடந்தால் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல தயாராகி விடும் என எதிர்பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விண்வெளி ஆய்வில் தற்போது உலகில் பல நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இந்தியா விண்வெளி ஆய்வில் வல்லரசு நாடுகளே சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்த சாதனைகளுக்கெல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தான் காரணமாக இருக்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 19:28 [IST]
English summary
Isro maiden test flight for the gaganyaan mission scheduled for october 21
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+