பாகிஸ்தான் எல்லையை ராணுவம் மட்டுமல்ல இஸ்ரோவும் கண்காணிக்கப்போகுது! 18ம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி!
இஸ்ரோ சார்பில் வரும் மே 18ம் தேதி அதிகாலை 6.59 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் விண்வெளியிலிருந்து பூமியை துள்ளியமாக புகைப்படம் எடுக்கும் மிக முக்கியமான சாட்டிலைட்டை சுமந்து செல்கிறது. இதற்காக எந்த ரக ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது? இதற்கான திட்டங்கள் என்ன? இதனால் என்ன பயன்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வரும் 18ம் தேதி அதிகாலையில் தனது பிஎஸ்எல்வி சி-61 என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் இஓஎஸ் 09 என்ற அதிக எடை கொண்ட சாட்டிலைட்டை சுமந்து செல்கிறது. விண்வெளியிலிருந்து பூமியை புகைப்படம் எடுத்து கண்காணிப்பதற்காக இந்த சாட்டிலைட் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ஏவுதல் இஸ்ரோக்கு மிக முக்கியமான ஏவுதலாக இருக்கிறது.

இந்த ஏவுதலுக்காக இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-61 ரக ராக்கெட்டை பயன்படுத்துகிறது. ிந்த ராக்கெட் மொத்தம் 44.4 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கிறது. இதில் 1710 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். இந்த ராக்கெட் மொத்தம் 4 கட்டமாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் காம்போசிட் சாலிட் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ராக்கெட் பூமியில் இருந்து அதிக பிரஷரில் விண்ணை நோக்கி பறக்க பயன்படுத்தப்படுகிறது. பின்னர் எர்த் ஸ்டோரபில் லிக்யூட் எரிபொருள் 2ம் கட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மீண்டும் 3ம் கட்டத்தில் காம்போசிட் சாலிட் எரிபொருளும், 4வது கட்டத்தில் எர்த் ஸ்டோரபிள் லிக்யூட் எரிபொருளும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் பூமியிலிருந்து சுமார் 529 கி.மீ உயரம் வரை பறந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த ராக்கெட் இந்தியா, நேபாளம், அமெரிக்கா, போலாந்து ஆகிய நாடுகளை சார்ந்த சாட்டிலைகளை வெற்றிகரமாக சுமந்து சென்றுள்ளது.

தற்போது உள்ள ஏவுதலில் இந்த ராக்கெட் தற்போது இஓஎஸ் -09 என்ற இந்திய சாட்டிலைட்டை சுமந்து செல்கிறது. இந்த சாட்டிலைட் சன் ஸிங்க்ரோனைஷேஷன் ஆர்பிட் என்ற பகுதியில் நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்த இடத்தில் தான் எப்பொழுதும் சூரிய ஒளி கிடைக்கும் அதே நேரம் பூமியையும் துள்ளியமாக கண்காணிக்க வசதியாக இருக்கும். இதனால் இந்த இடத்திற்கு இந்த சாட்டிலைட் அனுப்பபடுகிறது.
இஓஎஸ்-09 சாட்டிலைட்டை பொருத்தவரை சி பேண்ட் சிந்தடிக் அப்பாச்சர் ரேடார் என்ற கருவியை பயன்படுத்துகிறது. இது பூமியை மிக துள்ளியமாக படம் பிடித்து காட்டும் திறன் கொண்டது பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் பூமியை படம் எடுத்து தரும் திறன் கொண்டதாக இருக்கிறது. எந்த விதமான வானிலை சூழ்நிலைகள் இருந்தாலும் துள்ளிமாக படம் பிடித்து தரும்.
இந்த புகைப்படங்கள் எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு, தேசிய விவசாய பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு, வெள்ளி அபாய எச்சரிக்கைகள், பேரழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாட்டிலைடை்டை அல்ட்ரா ஹை ரெசல்யூசன் இமேஜ் முதல் சிறிய பொருட்களின் நகர்வு வரை பல விஷயங்களை கண்காணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போல பல நாடுகள் விண்ணவெளிக்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்தாலும், இந்தியா தான் குறைந்த செலவில் செய்கிறது. இதனால் இந்திய ராக்கெட்டை பயன்படுத்த பல நாடுகள் முன் வருகிறது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டும் வாய்ப்பாக இருக்கிறது. அதே நேரம் இந்தியா பாக் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் எல்லையை கண்காணிக்க இந்த சாட்டிலைட் உதவும் என எதிர்பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications








