5 நொடிக்கு முன்னர் நிறுத்தப்பட்ட ராக்கெட் ஏவுதல்! ககன்யான் சோதனையில் நடந்த திடீர் குழப்பம்!
ககன்யான் சோதனையில் இஸ்ரோ தடுமாற்றத்தை கண்டுள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கு 5 நொடிக்கு முன் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என இந்த பகுதியில் விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ககன்யான் என்ற கனவு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இந்த ககன்யான் திட்டம் என்பது பூமியிலிருந்து மூன்று விண்வெளி வீரர்களை தேர்வு செய்து அவர்களை ராக்கெட் மூலம் சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பி அங்கு மூன்று நாட்கள் அவர்களை தங்க வைத்து ஆய்வு செய்து பின்னர் அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது தான். இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இந்தத் திட்டத்திற்காக எல்விஎம்-3 ராக்கெட்டில் சில முக்கிய மாற்றங்களை செய்து அதில் மனிதர்கள் பயணிக்கும் படியாக வடிவமைத்துள்ளது. இதில் மனிதர்கள் அமர்ந்து செல்லும் க்ரூ மாடுல் மற்றும் ஏதாவது பிரச்சனை என்றால் இடையிலேயே இந்த மிஷன் நிறுத்தப்பட்டு ராக்கெட் உள்ளே இருக்கும் மனிதர்கள் பத்திரமாக மீட்டும் பூமிக்கு திரும்பும் க்ரு எஸ்கேப் மாடுல் ஆகிய இரண்டு விதமான புதிய அம்சங்கள் இந்த ராக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதை சோதனை செய்யும் விதமாக இஸ்ரோ இன்று தனது க்ரு மாடுல் மற்றும் க்ரு எஸ்கேப் மாடுல் ஆகியவற்றை சோதனை செய்தது. இதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சாலிட் புரொபஷனல் சிஸ்டம் என்ற ஒரே ஸ்டேஜ் ராக்கெட் மூலம் இந்த க்ரூ மாடுல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடுல் ஆகிய பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்த தயாராக இருந்தது.

இந்நிலையில் காலை 8 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரமாக இது 8:45 மணிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் திட்டமிடப்பட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் பாயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாக ராக்கெட் பறக்கும் 6 நொடிக்கு முன் இக்னீஷியன் ஆன் செய்யப்பட்டதும் ராக்கெட் கிளம்பிவில்லை.
ராக்கெட் ஹோல்டு பொசிஷனிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரோவின் சேர்மன் சோம்நாத் இன்று திட்டமிட்டபடி ராக்கெட்டை ஏவ முடியவில்லை என்றும், என்ன பிரச்சனை காரணமாக ராக்கெட் விண்ணில் ஏவப்படவில்லை என நாங்கள் ஆய்வு செய்து பின்னர் அறிவிப்போம் என்றும் அடுத்த கட்ட ஏவுதல் குறித்த தகவல்கள் பின்னர் வரும் எனவும் அறிவித்தார்.

மேலும் ராக்கெட், க்ரூ மாடுல், எஸ்கேப் க்ரூ மாடுல் எல்லாம் பத்திரமாக இருப்பதாகவும் அவர் அறிவித்தார். ஏற்கனவே 2 முறை வானிலை காரணமாக நேரம் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இதை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை முயற்சியில் இஸ்ரோ தனது க்ரூ மாடுல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடுல் ஆகியவற்றை சோதனை செய்ய முடிவு செய்திருந்தது. அதன்படி ககன்யான் மிஷன் சமயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ராக்கெட்டில் உள்ள மனிதர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்களை எப்படி பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது என்பதை தான் இதில் சோதனை செய்ய முடிவு செய்திருந்தது.
இதற்காக இந்த ராக்கெட் பூமியிலிருந்து 17 கி.மீ வரை பயணித்து அங்கிருந்து இந்த ராக்கெட்டில் உளள மனிதர்கள் பயணிக்கும் பகுதி மட்டும் பிரிந்து வந்து பத்திரமாக பூமியை நோக்கி வந்து ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விழும்படி திட்டமிட்டிருந்தது. ராக்கெட் ஏவப்பட்டு 9 நிமிடங்களில் இது எல்லாம் நடந்து முடியும் படி திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இறுதி நேரத்தில் ராக்கெட் இக்னீஷியன் செய்யப்பட்டும ராக்கெட் கிளம்பாமல் ஹோல்டு பொஷிசனிற்கு சென்றது. இதனால் இந்த சோதனை ஒத்தி வைக்கப்பட்டது. மற்றொரு நாள் இது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ககன்யான் சோதனை என்பது இந்தியாவின் கனவு திட்டமாக இருக்கிறது. இதில் இஸ்ரோ என்னதான் சிறப்பாக திட்டமிட்டிருந்தாலும் மோசமான வானிலை காரணமாக இது முதலில் இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என தெரியவில்லை. இருந்தாலும் இன்னொரு நாள் இந்த சோதனை வெற்றிகரமாக நடக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை


Click it and Unblock the Notifications
