நிரந்தர உறக்கத்திற்கு சென்றதா சந்திரயான் 3? உச்சகட்ட பதற்றத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

சந்திரயான் 3 திட்டத்தின் படி நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பலமுறை சிக்னல் அனுப்பியும் பதிலுக்கு எந்த சிக்னலும் வராததால் அது நிரந்தர உறக்கத்திற்கு சென்றதாக தெரிகிறது. இருந்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் அதை தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் அனுப்பியது இதன்படி விண்வெளியில் 40 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம் சரியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் பத்திரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி தரை இறங்கியது.

chandrayaan 3

இது மிகப்பெரிய உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையின் மூலம் இந்தியா நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கிய முதல் நாளாகவும் நிலவில் தர இறங்கிய நான்காவது நாடாகவும் மாறியது. இந்த செயலுக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் எல்லாம் இஸ்ரோவை திரும்பி பார்த்து வருகின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகள் எப்படி இந்த சாதனையை படைத்தார்கள் என ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தனது பணிகளை செய்ய துவங்கியது இந்த இரண்டு கருவிகளும் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை எல்லாம் இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் சூரியன் மறையும் நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆக இரண்டு கருவிகளையும் உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர். அப்பகுதியில் சூரியன் மறைந்து விட்டால் இந்த இரண்டு கருவிகளும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு சென்று விடும். இரண்டு கருவிகளிலும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே செயல்படக்கூடியது என்பதால் இது உறக்க நிலைக்கு சென்று விடும்.

இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சூரிய உதயம் ஆகும் போது இந்த பிரக்யான் ரோவர் மற்றும் லேண்டரை மீண்டும் ரீபூட் செய்ய பூமியிலிருந்து ஆணை பிறப்பிக்கப்படும். இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் அது மீண்டும் எழுந்து தனது பணிகளை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நிலவில் இந்த லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கியுள்ள இடத்திற்கு சூரிய வெளிச்சமும் வந்தது.

இந்நிலையில் பூமியிலிருந்து இந்த லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உயிர்பிக்க இங்கிருந்து கமெண்ட் அனுப்பப்பட்டது. அந்த கமெண்ட் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த பதிலும் லேண்டர் மற்றும் ரோவரிலிருந்து கிடைக்கப்பெறவில்லை. சூரிய ஒளி இல்லாத நேரம் நிலவில் மற்றும் ரோவர் இருக்கும் பகுதி -200 டிகிரிக்கும் அதிகமான குளிர் இருக்கும் என்பதால் அப்பகுதியில் லேண்டர் மற்றும் ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால் அதன் காரணமாக அது செயல் இழந்திருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 20ம் தேதியே அந்த பகுதிக்கு சூரிய வெளிச்சம் வந்தாலும் அதிலிருந்து சோலார் பேனல்கள் மூலம் அதில் உள்ள பேட்டரி சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் சுமார் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை இது சார்ஜ் ஏற்ற எடுத்துக் கொள்ளும்.

இதனால் கடந்த 22 ம் தேதி இதை மீண்டும் எழுப்பி பார்க்க முயற்சிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டு இருந்தது. அதன்படி நேற்று லேண்டர் மற்றும் ரோவரை எழுப்ப கமெண்ட் அனுப்பப்பட்டது. ஆனால் லேண்டர் மற்றும் ரோவரிலிருந்து எந்த சிக்கலும் பதிலுக்கு இதுவரை வரவில்லை.

இஸ்ரோ தொடர்ந்து மீண்டும் லேண்டர் மற்றும் ரோவரை எழுப்பும் முயற்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டு கருவிகளும் உள்ள பேட்டரிகள் சார்ஜர் அதிகநேரம் எடுத்துக் கொள்ளலாம். அதனால் இன்னும் ஒரு நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்யும்போது இது வெற்றிகரமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக குளிரால் இந்த கருவிகள் சேதமாகியிருந்தால் நிரந்தரமாக எழுப்ப முடியாத ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றுவிடும் எனவும் கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தை பத்திரமாக நிலவில் தரையிறக்கியது மூலமே பெரிய உலக சாதனையை படைத்து விட்டார்கள். தற்போது உறக்கத்தில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை தட்டி எழுப்புவது என்பது இஸ்ரோவுக்கு கிடைக்கும் போனஸ் விஷயம்தான். இது மீண்டும் எழுந்து விட்டால் இஸ்ரோவுக்கு கூடுதலான தகவல் கிடைக்கும் ஆனால் இந்த திட்டத்தின் நோக்கம் என்பது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 23, 2023, 14:02 [IST]
English summary
Isro reports chandrayaan 3s lander and rover still in dormant state
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+