நாசாவையே ஓரம்கட்டிய இஸ்ரோவின் புதிய டெக்னாலஜி! சைலெண்டா சம்பவம் பண்ணிட்டாங்க!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டிற்கான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்படி பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் இனி பத்திரமாக மீண்டும் பூமியிலேயே தரை இறங்குவதற்கான தொழிற்நுட்பத்தை தயார் செய்துள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாயை சேமிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வெகு சில நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரோவும் தற்போது சாத்தியமாக்கி உள்ளது. இது குறித்த விரிவான தொழிற்நுட்ப விவரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல்வேறு விதமான சாதனைகளை செய்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு சந்திரயான் 3 விண்வெளியில் தரையிறங்கியது முதல் அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ அடுத்த மிக முக்கிய தொழில்நுட்பமாக மறு பயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

isro reusable launch vehicle

தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் படி ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தி விட்டால் ,அடுத்த ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கு வேறு ஒரு ராக்கெட்டை தான் தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோ ஒரு முறை தயார் செய்த ராக்கெட்டை மீண்டும் மீண்டும் விண்ணில் செலுத்துவதற்கான தொழிற்நுட்பத்தை தற்போது வடிவமைத்து வருகிறது. இதற்காக ஏற்கனவே விண்வெளிக்கு சென்ற ராக்கெட் மீண்டும் பத்திரமாக பூமிக்கு தரையிறங்க வேண்டும்.

இதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்து இஸ்ரோ ஏற்கனவே இரண்டு முறை சோதனை செய்த நிலையில், நேற்று மூன்றாவது முறையாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் வெற்றிகரமாக மூன்றாவது முறை இந்த தொழிற்நுட்பம் சோதனை செய்யப்பட்டது.

isro reusable launch vehicle

இஸ்ரோ மறு பயன்பாட்டிற்காக பயன்படும் வகையிலான ராக்கெட்டை வடிவமைத்துள்ள நிலையில் இந்த ராக்கெட்டிற்கு புஷ்பக் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புஷ்பக் என்பதுதான் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முதன்முறை சரியாக திட்டமிட்டபடியான லேண்டிங் சரியாக நடக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.

இரண்டாம் கட்ட சோதனையில் திட்டமிட்ட ஆண்டுகளிலிருந்து சுமார் 150 மீட்டர் விலகி லேண்டிங் முயற்சி ஏற்பட்டால் சரியாக லேண்ட் ஆகிறதா என சோதனை செய்யப்பட்டது. தற்போது3ம் கட்ட சோதனையில் 500 மீட்டர் வரை பாதையில் இருந்து விலகி வீசப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

isro reusable launch vehicle

இதுதான் இறுதி கட்ட சோதனையாகவும் மூன்று கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இனி வெளி மண்டலத்தில் இருந்து பூமிக்குள் இந்த ராக்கெட் நுழைவதற்கான சோதனை தான் நடத்தப்படும். இப்படியான பல்வேறு கட்டமான சோதனைகளுக்குப் பிறகு இந்த ராக்கெட் முழுமையாக தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடந்த மூன்றாம் கட்ட சோதனையின் போது புஷ்பக் சுமார் 320 கிலோமீட்டர் வேகத்தில் பூமியில் தரை இறங்கியது. இந்த ராக்கெட் சுமார் பூமியிலிருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து வீசப்பட்டது. அதன் பிறகு அதன் வேகத்தை கட்டுப்படுத்தி பாதையையும் சரியாக மாற்றி பத்திரமாக லேண்ட் செய்தது.

இந்தியாவில் உள்ள கமர்சியல் விமானங்கள் லேண்ட் செய்யும் போது 260 கிலோ மீட்டர் வேகத்தில் லேண்ட் செய்யும், பைட்டர் விமானங்கள் 280 கிலோ மீட்டர் வேகத்தில் செய்யும் அதைவிட அதிக வேகத்தில் இந்த புஷ்பக் ராக்கெட் லேண்ட் செய்து சாதனை படைத்துள்ளது.

மிக அதிக வேகத்தில் ஆண்டு செய்வதால் இதன் வேகத்தை கட்டுப்படுத்த பெரிய ரன்வே தேவைப்படும் என என்ற நிலைமை எல்லாம் இல்லை இதற்குப் பின்னால் ஒரு பாராசூட் பொருத்தப்பட்டுள்ளது இந்த பாராசூட் சரியாக புஷ்பகலேண்ட் ஆனவுடன் ஓபன் ஆகிவிடும் இதன் மூலம் வெகு சில நொடிகளிலேயே 100 கிலோமீட்டர் வேகம் தானாக குறைந்து விடும்.

இந்த புஷ்பக் ராக்கெட்டில் முன்பக்கம் இருக்கும் வீல் ஸ்டேரிங் போல திரும்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது இந்த சோதனையின் போது மிக வேகமாக தரையிறங்கினாலும் இது திரும்புகிறதா என சோதனை செய்யப்பட்டது வெற்றிகரமாக திரும்பாமல் இருந்தது வேகமாக திரையரங்கம் போது முன்பக்க வீல் திரும்பினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்மார்க் கருத்து: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்த புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளது அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை விரிவுபடுத்தி மிகப்பெரிய கண்டுபிடிப்பாக புஷ்பக் ராக்கெட்டை வடிவமைத்து விண்வெளி ஆய்வுத் துறையில் பல கோடி ரூபாய் செலவை மிச்சப்படுத்த ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. நாசா உள்ளிட்ட வெகு சில விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே இப்படியான தொழில்நுட்பம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 13:47 [IST]
English summary
Isro reusable launch vehicle pushpak landing experiment
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X