இணையத்தில் வைரலாகும் ஆதித்யா எல்1-இன் செல்ஃபி படம்.. நிலா-பூமி குரூப் ஃபோட்டோவையும் எடுத்த ஆதித்யா எல்1...
இஸ்ரோவால் சமீபத்தில் விண்ணிற்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் தன்னுடைய இலக்கை நோக்கிய வெற்றி பயணத்தை மேற்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அது எடுத்த முதல் புகைப்படங்களையே இஸ்ரோ தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation), சமீபத்தில் சூரியனை ஆய்வு செய்யும் விதமாக ஆதித்யா எல்1 விண்கலத்தை பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் வாயிலாக விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் தன்னுடைய இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டு இருக்கின்றது.

இன்னும் சில மாதங்களில் அது அதன் இலக்கை அடைய இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இஸ்ரோ (ISRO), ஆதித்யா எல்1 (Aditya-L1) விண்கலம் எடுத்த பிரத்யேக படங்கள் (Pictures) சிலவற்றை வெளியிட்டு இருக்கின்றது. பூமி மற்றும் நிலவின் படங்களையே அது வெளியிட்டு உள்ளது.
இதுதவிர, இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா எல்1 எடுத்துக் கொண்ட செல்ஃபி படத்தையும் அது வெளியிட்டு இருக்கின்றது. இந்த படங்களே தற்போது எக்ஸ் போன்ற சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பூமி, நிலா இரண்டின் குழு புகைப்படத்தையே அது வெளியிட்டு இருக்கின்றது.

ஆதித்யா எல்1 விண்கலம் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எல்1 சுற்றுப்பாதையில் இருந்தபடி சூரியனை ஆராய இருக்கின்றது. இந்த இடத்தை இஸ்ரோ தேர்வு செய்வதற்கு ஓர் காரணம் இருக்கின்றது. எல்1 பகுதியிலேயே சூரியன் மற்றும் புவி ஆகியவற்றின் ஈர்ப்பு விசை நடுநிலையாக இருக்கும்.
இதுவே எல்1 புள்ளியை இஸ்ரோ தேர்வு செய்ய மிக முக்கிய காரணமாகும். இந்த புள்ளி பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் இருக்கின்றது. இந்த புள்ளியை அடைய ஆதித்யா எல்1 விண்கலத்திற்கு சுமார் 4 மாதங்கள் வரை ஆகும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இந்த 15 லட்சம் கிமீ என்பது பூமி மற்றும் சூரியனுக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த தூரத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே ஆகும். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிமீ தூரம் தொலைவிலேயே சூரியன் இருக்கின்றது. சூரியனை ஆராயும் விதமாக பல்வேறு பேலோடுகள் ஆதித்யா எல்1 விண்கலத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
விஇஎல்சி- IIA, ஸூட் ஐசியுஏஏ, சோலக்ஸ்-யுஆர்எஸ்சி, மேக்னட்டோ மீட்டர் - லியோஸ், ஆஸ்பெக்ஸ்-பிஆர்எல், எச்இஎல்1ஓஎஸ் மற்றும் பிளாஸ்மா அனலைசர் என ஐந்து விதமான பேலோடு கருவிகளே அதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பிரத்யேக பேலோடுகளே சூரியனின் இயக்கவியல், வெப்பமாக்கல் மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மா வெளியேற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இருக்கின்றன.
இவற்றை கண்கானிப்பது மற்றும் ஆய்வு செய்வதன் வாயிலாக, சூரியனில் நடைபெறும் அணுக் கரு இணைவைப் பற்றி நம்மால் இன்னும் தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். குறிப்பாக, சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் பூமியில் நிகழும் காலை நிலை மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை அறிந்துக் கொள்ள முடியும்.
ஆதித்யா எல்1 விண்கலம் சுமார் 5 ஆண்டுகள் வரை இந்த பணியில் ஈடுபட இருக்கின்றது. இது சூரியனின் முக்கிய அடுக்குகளான ஃபோடோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் கொரோனா ஆகிய அடுக்குகளை ஆராய இருக்கின்றது. இந்த அடுக்குகளை ஆராய எல்1 இலக்கே போதுமானது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்திய சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்தே ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பி இருக்கின்றது. இந்தியாவின் இந்த செயல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்த நிகர் சுல்தான் ஆவார். இவர் அரசு பள்ளியில் பயின்றவர் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.


Click it and Unblock the Notifications