நாசாவே ஒரு நிமிஷம் ஆடிப்போச்சு! இந்த வாரம் இஸ்ரோ இந்த சோதனையை தான் செய்ய போறாங்க!
இஸ்ரோ புஷ்பக் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள எல்இஎக்ஸ் என்ற லேண்டிங் கருவியை இரண்டாவது முறையாக இந்த வாரம் மீண்டும் லேண்ட் செய்து சோதிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. புஷ்பக் என்றால் என்ன இதை ஏன் லேண்டிங் செய்து சோதனை செய்கிறார்கள்? எதற்காக பயன்படுகிறது? என்ற விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
இந்தியா வரும் 2035-ம் ஆண்டு விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான பணிகளை தற்போது துவங்கி உள்ளது. இதற்கான அனைத்து தொழில்நுட்பங்களையும் தயார் செய்து வருகிறது. முக்கியமாக மீண்டும் மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை தற்போது தயார் செய்து வருகிறது. இந்த ராக்கெட்டுக்கு இஸ்ரோ தற்போது புஷ்பக் என பெயர் வைத்துள்ளது.

இதன் மூலம் விண்வெளியில் ஆய்வு மையம் நிறுவப்பட்டவுடன் இந்தியாவில் இருந்து மிகக் குறைவான விலையிலேயே விண்வெளிக்கு சென்று வருவதற்காக இது தயார் செய்யப்பட்டு வருகிறது. இப்படியாக விண்வெளிக்கு சென்று மீண்டும் பத்திரமாக திரும்புவதற்காக அந்த ராக்கெட் பத்திரமாக பூமியில் தரை இறங்கும் தொழில்நுட்பம் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
பூமியில் பத்திரமாக தரையிறங்கும் இந்த கருவிக்கு எல்இஎக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஏற்கனவே ஒருமுறை சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் மீண்டும் இரண்டாம் கட்ட சோதனை என்பது நடைபெறும் என தற்போது இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்த ராக்கெட் தற்போது சின்னோக் என்ற ஹெலிகாப்டர் மூலம் வானிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கீழே வீசப்படும். பின்னர் இந்த ராக்கெட் ஆக்டிவேட் செய்யப்பட்டு தானாக இது தரை இறங்கும் பணியில் ஈடுபடும். பத்திரமாக திட்டமிட்டபடி தரை இயங்கினால் இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அர்த்தம். ஏற்கனவே இந்த சோதனை முதல் கட்டத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது.
முதல் கட்ட சோதனையில் லேண்டிங் மட்டுமே சரியாக திட்டமிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. லேண்டிங் வெற்றிகரமாக நடந்த நிலையில் இந்த இரண்டாம் கட்ட சோதனையில் இந்த ராக்கெட் வேறு வேறு திசையில் திருப்பி லேண்ட் செய்ய முயற்சித்தாலும், தன்னைத்தானே சரியான பொசிஷனிற்க்கு மாற்றிக்கொண்டு பின்னர் லேண்ட் செய்யும் பணியில் இறங்குவது குறித்து சோதனை நடக்கவுள்ளது.
இந்த சோதனை இந்த வாரத்திற்குள் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள இஸ்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச் தளத்தில் வைத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ தயாரித்துள்ள இந்த எல்இஎக்ஸ் ராக்கெட்டை பொருத்தவரை நாசா நிறுவனம் பயன்படுத்தியது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாசா இதே போல விண்வெளிக்கு சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் சுமார் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. இதே போன்ற வடிவமைப்பில் தற்போது இஸ்ரோவும் எனது ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இது பூமியில் இருந்து கிளம்பும்போது ராக்கெட் போல நேராக மேலே செல்லும் ஆனால் மீண்டும் பூமிக்கு வரும்போது விமானங்கள் போல ரன்வேயில் தரையிறங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் பூமியில் தரையிறங்கும் போது சுமார் 350 கிலோமீட்டர் வேகத்தில் தரையிறங்கும் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இது தரை இறங்கியதும் இதற்கு பின்னால் உள்ள பாராசூட்டில் பிறந்ததே இதன் வேகத்தை குறைத்து பத்திரமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் இது பூமியில் இருக்கும் படி பாதுகாக்கும். இதற்கான சோதனை தான் இந்த வாரம் நடைபெற உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. கடந்தாண்டு சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது முதல், ஆதித்யா எல்1 உள்ளிட்ட ஏகப்பட்ட சாதனைகள் தற்போது இஸ்ரோவால் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சோதனையும் இஸ்ரோவிற்கு மிகப்பெரிய சாதனையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








