நாசாவையே மிஞ்சும் சோதனைக்கு தயாராகும் இஸ்ரோ! இது மட்டும் நடந்த இஸ்ரோ தான் டாப்!

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது மறு பயன்பாடு செய்யக்கூடிய வகையிலான ராக்கெட்டுகளை வடிவமைத்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் தற்போது உள்ள ராக்கெட் அல்லாமல் ஒரே ராக்கெட் மீண்டும் மீண்டும் விண்வெளிக்கு அனுப்பக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இதனால் விண்வெளிக்கு ஒரு முறை ராக்கெட் பறந்த உடன் மீண்டும் பத்திரமாக லேண்ட் செய்வது குறித்த சோதனைகள் நடந்து வருகிறது. இதில் மூன்றாம் கட்ட சோதனைக்காக தற்போது இஸ்ரோ தயாராகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோ உலகில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் மிக முக்கியமான ஆய்வு மையமாக மாறி உள்ளது. இஸ்ரோவில் பல்வேறு விதமான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தற்போது இஸ்ரோ ஒரு முறை ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தினால் அடுத்த முறை ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு புதிதாக ராக்கெட்டை வடிவமைத்து அதை தான் விண்ணில் செலுத்தி வருகிறது.

isro rlv pushpak

வருங்காலங்களில் இஸ்ரோ அடிக்கடி விண்ணில் ராக்கெட்டை செலுத்த திட்டமிட்டு உள்ளதால் ஒருமுறை செலுத்திய ராக்கெட் வீணாக்காமல் மீண்டும் அதை பத்திரமாக பூமியில் தரையிறக்கம் செய்ய வைத்து அந்த ராக்கெட் மீண்டும் அடுத்த முறை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது. இதற்கான ராக்கெட் வடிவமைப்பில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படியாக விண்ணில் அனுப்பப்பட்ட ராக்கெட்டான ஆர்எல்வி (RLV) புஷ்பக்கை மீண்டும் பத்திரமாக லேண்ட் செய்வது குறித்து சோதனைகள் நடத்தி வருகிறது.

ஏற்கனவே இரண்டு முறை இந்த எல்இஎக்ஸ் (LEX) எனப்படும் சோதனை நடத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பறக்கும் ராக்கெட் பத்திரமாக பூமியில் தரை இறங்கியது. தற்போது மூன்றாவது கட்டமாகவும் இறுதி கட்டமாகவும் இந்த சோதனையை நடத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்த வாரம் இந்த சோதனை கர்நாடக மாநிலத்தில் வைத்து நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட சோதனையின் போது வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ராக்கெட் ஹெலிகாப்டர் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் பூமியை நோக்கி வீசப்பட்டது. அந்த ராக்கெட் பத்திரமாக வந்து தரையிறங்குகிறதா என அனைத்து தகவல்களும் பெறப்பட்டன. இதில் ராக்கெட் விண்ணில் பறந்து வரும் போது எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக தன்னைத்தானே சரி செய்து கொண்டு தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இதன் இரண்டாம் கட்ட சோதனையின் போது வேண்டுமென்றே ராக்கெட்டை 150 மீட்டர் தொலைவிற்கு அதன் பாதையில் இருந்து விலகி ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டது. அது தன்னைத்தானே சரி செய்து கொண்டு 150 மீட்டர் இடைவெளியை ராக்கெட்டை திட்டமிட்டு சரி செய்து பத்திரமாக திட்டமிட்டபடி லேண்ட் ஆகியது. இந்நிலையில் இதன் மூன்றாம் கட்ட சோதனைக்கு தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூன்றாம் கட்ட சோதனையில் அதன் பாதையில் இருந்து சுமார் 500 மீட்டர் அளவிற்கு விலகி வேறு இடத்தில் ராக்கெட் வீசப்படும். இந்த 500 மீட்டர் தூரத்தையும் ராக்கெட் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறதா என சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் லேண்டிங்கில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதை இஸ்ரோ உறுதி செய்கிறது.

இதற்காக கடல் மட்டத்திலிருந்து சுமார் 4.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு ராக்கெட் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து பூமியை நோக்கி வீசப்படுகிறது. இந்த சோதனைக்காக தற்போது இஸ்ரோ தயார் செய்து வருகிறது. வானிலை காரணமாக இது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் எப்படியும் இந்த சோதனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துவிட்டால் அடுத்த கட்ட சோதனையாக விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் ராக்கெட் பத்திரமாக திரும்ப வருகிறதா என சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இது வெற்றியடைந்த உடன் நேரடியாக அடுத்த கட்ட சோதனைக்கு இஸ்ரோ நகரும்.

பூமியிலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக இஸ்ரோ ககன்யான் திட்டத்தை திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்த லேண்டிங் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்கள் போல இல்லாமல் இதன் பின்னால் பெரிய பாராசூட் ஒன்று ஓப்பனாகி ராக்கெட்டின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்தும் வகையில் இதன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விண்வெளி ஆய்விலும் ராக்கெட் வடிவமைப்பிலும் அடுத்தடுத்த கட்டங்களை வெற்றிகரமாக சென்றடைகின்றன. தற்போது மீண்டும் மீண்டும் பயன்படும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டால் உலகிலேயே இப்படியான ராக்கெட்டை உருவாக்கிய வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 15, 2024, 7:00 [IST]
English summary
Isro rlv pushpak third landing test conduct next week
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+