ககன்யான் சோதனைக்காக நாளை விண்ணில் பாயும் புதிய ராக்கெட்! நேரலையில் காண்பது எப்படி?
இஸ்ரோ தனது ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை கட்டத்தை நாளை கடக்க உள்ளது. இதில் என்னவெல்லாம் சோதனை செய்யப்பட உள்ளன? இதை பொதுமக்களாகிய நாம் எப்படி காண முடியும்? என்ற விவரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலகில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமாக மாறி உள்ளது. இந்நிறுவனம் அடுத்தடுத்து செய்யப் போகும் ஆய்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு வெற்றிகரமாக ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

தற்போது இந்தியாவிற்கு இஸ்ரோ மூலம் இருக்கும் அடுத்த மிகப்பெரிய கனவு திட்டம் ககன்யான் திட்டம் தான். இந்த திட்டத்தின் படி இந்தியாவில் இருந்து மூன்று விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று அங்கு ஆய்வுகளை நடத்தி மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்து விட்டு பின்னர் பத்திரமாக அவர்களை பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
இதற்காக விண்வெளி வீரர்கள் பயணிக்கும் க்ரூ மாடல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடல் என இரண்டு விஷயங்களை உருவாக்கியுள்ளது. அதாவது ராக்கெட்டில் க்ரூ மாடல் உள்ளே மூன்று விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். அவர்களுடன் தான் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு பயணிக்க துவங்கும்.

இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் க்ரு எஸ்கேப் மாடல் வழியாக தப்பி பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிடலாம். இதுதான் இந்த இரண்டு மாடலும் செய்யும் வேலையாக இருக்கிறது. இந்த இரண்டு மாடல்களையும் டெஸ்ட் செய்வதற்காக முதற்கட்ட சோதனையாக TV D1 என்ற சோதனை முயற்சியை நாளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.
இதன்படி நாளை காலை 7:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் வைத்து இந்த சோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனையின் போது சிங்கிள் ஸ்டேஜ் லிக்யூட் புரோபல்ஷன் இன்ஜினை கொண்டு ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.

இந்த ராக்கெட் சரியாக பூமியிலிருந்து 17 கிலோமீட்டர் தூரம் வரை மேலே செல்லும்.பின்னர் அங்கு இந்த மிஷன் பாதியில் நிறுத்த பூமியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும். உடனடியாக இந்த ராக்கெட்டில் உள்ள க்ரூ மாடுல் மற்றும் க்ரு எஸ்கேப் மாடல் ஆகியன தனியாகப் பிரிந்து பத்திரமாக இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்துவிடும்.
பின்னர் அதை இந்திய கடற்படையினர் மீட்டு பத்திரமாக இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். இந்த சோதனையை தான் நாளை செய்யப் போகிறது. அதாவது ககன்யான் திட்டத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதில் பயணிப்பவர்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்ற சிஸ்டம் சரியாக வேலை செய்கிறதா என்பதை தான் நாளை இஸ்ரோ சோதிக்க போகிறது.

நாளை காலை 7:30 மணிக்கு இந்த சோதனை துவங்க உள்ளது. காலை 9 மணிக்குள் இந்த சோதனையை நிறைவேற்றி விடும். இதற்குள் இஸ்ரோ ராக்கெட்டை பூமியிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் உயரத்திற்கு அனுப்பி அங்கு இந்த மிஷினை பாதியில் நிறுத்தி க்ரூ மாடுல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடுல் ஆகியவற்றை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோ இந்த சோதனை முயற்சியை முழுவதுமாக லைவ் டெலிகாஸ்ட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இஸ்ரோவின் அதிகாரபூர்வ இணையதளம், ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் இந்த காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். இதுபோக டிடி நேஷனல் தொலைக்காட்சியிலும் இந்த சோதனை முயற்சி முழுவதும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உலகம் முழுவதும் இருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக பார்க்க முடியும். இஸ்ரோ இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் இந்த காட்சிகள் தமிழக செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் உலக மக்கள் முழுவதும் இஸ்ரோவின் இந்த சோதனையை முயற்சியை நேரலையில் காண முடியும்.
இஸ்ரோ இந்த சோதனை முயற்சிக்காக சிங்கிள் ஸ்டேஜ் கொண்ட லிக்யூட் புரொபஷனல் இன்ஜின் ராக்கெட்டை தான் பயன்படுத்துகிறது. ஆனால் உண்மையான மிஷனில் எல்விஎம்3 ராக்கெட்டை பயன்படுத்தும். இந்த எல்விஎம் 3 ராக்கெட் ஏகப்பட்ட முறை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளதால் அதை சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வுமயமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோவை பலர் உற்றுநோக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த ககன்யான் சோதனை முயற்சியையும் வெற்றிகரமாக செய்துவிட்டால், 2025 ஆம் ஆண்டு இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி விடும்.


Click it and Unblock the Notifications
