இஸ்ரோ விஞ்ஞானிக்கு நடுரோட்டில் நேர்ந்த கதி! ஈரக்கொலையை நடுங்க வைத்த வீடியோ! இந்த கொடும வேற எங்கயும் நடக்காது!

சந்திராயன்-3 (Chandrayaan-3) வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. ஆனால் சொந்த நாட்டில் அவர்களை மதிக்க ஒரு சிலர் தயாராக இல்லை. ஆம், இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் அலுவலகம் பெங்களூர் நகரில் அமைந்துள்ளது. அங்கு விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் ஆஷிஷ் லம்பா. இவர் சமீபத்தில் இஸ்ரோ அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

ISRO Scientist’s Car Kicked By Angry Two-wheeler Rider

அப்போது டிவிஎஸ் என்டார்க் (TVS NTorq) ஸ்கூட்டரில் இளைஞர் ஒருவர் தாறுமாறாக வந்துள்ளார். இதனால் விஞ்ஞானி ஆஷிஷ் லம்பா ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இது டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் வந்த இளைஞருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே விஞ்ஞானி ஆஷிஷ் லம்பாவின் காருக்கு முன்பாக அவர் ஸ்கூட்டரை நிறுத்தி கொண்டு வழி விட மறுத்துள்ளார்.

அத்துடன் ஸ்கூட்டரை விட்டு இறங்கி வந்த அவர், விஞ்ஞானி ஆஷிஷ் லம்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரது காரை எட்டியும் உதைத்துள்ளார். விஞ்ஞானி ஆஷிஷ் லம்பாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்போர்டு கேமராவில் இந்த காட்சிகள் எல்லாம் பதிவாகியுள்ளன. அதனை எக்ஸ் எனப்படும் டிவிட்டர் தளத்தில், விஞ்ஞானி ஆஷிஷ் லம்பா வெளியிட்டுள்ளார்.

இதன் பேரில் நடுரோட்டில் விஞ்ஞானியிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞர் மீது பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் மிக கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் சாலைகளில் சமீப காலமாகவே வாகன ஓட்டிகளுக்கு இடையேயான மோதல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது வேதனையான ஒரு விஷயம் ஆகும்.

கடந்த ஒரு சில மாத கால அளவில் மட்டும், பெங்களூர் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையேயான மோதல் தொடர்பாக, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமே பல்வேறு செய்திகளை வெளியிட்டு விட்டது. தற்போது விஞ்ஞானிகள் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் இந்த பிரச்னைக்கு ஆளாவது வருத்தத்திற்குரியது.

பெங்களூர் நகரில் சமீப காலமாக நடைபெற்று வரும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கையில், ரவுடிகள் போன்ற தோற்றத்தில் வலம் வருபவர்கள், வேண்டுமென்றே மற்ற வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபடுவதை போல் தெரிகிறது. இதை தடுக்க பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக தகராறில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அந்த செய்தியை அனைவர் மத்தியிலும் பரப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே, மற்றவர்கள் இந்த தவறை செய்ய பயப்படுவார்கள். இல்லாவிட்டால் பெங்களூர் நகரில் ஒரு கட்டத்தில், ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் டேஷ்போர்டு கேமராக்கள் இருப்பது அவசியம் என நாங்கள் பல்வேறு செய்திகளில் கூறியுள்ளோம். பெங்களூரில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தின் மூலமாக டேஷ்போர்டு கேமராக்களின் முக்கியத்துவம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு கேமரா இல்லாவிட்டால், விஞ்ஞானி ஆஷிஷ் லம்பாவால் ஆதாரங்களை திரட்டியிருக்க முடியாது.

எனவே நீங்களும் உங்கள் கார்களில் உடனடியாக டேஷ்போர்டு கேமராக்களை பொருத்துங்கள். நீங்கள் தவறு செய்யாதபட்சத்தில் வேண்டுமென்றே ஒருவர் உங்களிடம் தகராறு செய்தால், காவல் துறையிடம் அளிப்பதற்கு உங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கும். சாலை விபத்து போன்ற சம்பவங்களின்போது டேஷ்போர்டு கேமராக்கள் பெரிய அளவில் உதவி செய்யும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 13:41 [IST]
English summary
Isro scientists car kicked by angry two wheeler rider viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+