ககன்யான் க்ரூ மாடுலை ஹெலிகாப்டர் மூலம் கடலில் தூக்கி போட முடிவு! என்ன காரணம் தெரியுமா?

இஸ்ரோ ககன்யான் சோதனையை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது அடுத்த கட்ட சோதனைக்காக தயாராகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலக நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமாக மாறி உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளை தற்போது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞான ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தையும் தற்போது இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

isro airdrop and pat test

அது தற்போது எல்1 பாதையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரோ அடுத்த கட்டமாக திட்டத்திற்கான முயற்சியில் இறங்கியது. ககன்யான் திட்டத்திற்காக ஒரு சோதனையையும் கடந்த வாரம் செய்து முடித்தது, இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இஸ்ரோவின் ககன்யான் திட்டம் என்பது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அங்கு மூன்று நாட்கள் ஆய்வு செய்து அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான்.

இஸ்ரோவின் இந்த ககன்யான் திட்டத்திற்காக தற்போது பல்வேறு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முக்கியமாக விண்வெளிக்கு செல்லும் மூன்று வீரர்களை தேர்வு செய்ய பணிகள் நடக்கிறது. அந்த மூன்று வீரர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் படி இந்த மூவரும் ராக்கெட்டில் மனிதர்கள் அமர்ந்து செல்லும் பகுதியில் அமர வைக்கப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்படுவார்கள். சுமார் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்திற்கு இவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

isro airdrop and pat test

அங்கு இவர்கள் மூன்று நாட்கள் சோதனை செய்து பின்பு அவர்கள் பத்திரமாக பூமிக்கு மீண்டு வருவார்கள். இப்படியாக இவர்கள் பயணம் செய்யும்போது ராக்கெட் ஏவப்பட்டவுடன் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவது எப்படி என்ற சோதனை தான் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதன்படி திட்டமிட்டபடி ராக்கெட் பூமியிலிருந்து 17 கிலோமீட்டர் விண்ணில் பிறந்தவுடன் அந்த மிஷன் பாதியில் நிறுத்தப்பட்டு மனிதர்கள் பயணிக்கும் க்ரூ மாடுல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடுல் ஆகியவை பத்திரமாக இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தது அதை இந்திய கடற்படையினர் மீட்டை இஸ்ரோவிடம் ஒப்படைத்தனர்.

isro airdrop and pat test

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இஸ்ரோ இந்த ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்ட சோதனைகளுக்காக தயார் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த கட்டமாக இரண்டு விதமான சோதனைகளை செய்ய இஸ்ரோ தற்போது தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒன்று இப்படியாக க்ரூ மாடுல் பூமியை நோக்கி வரும்போது பாராசூட்டில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அது திறக்காமல் இருந்தால் இந்த க்ரூ மாடுல் நேரடியாக தண்ணீரில் வந்து விழும் அப்படியாக விழும்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த குழு மாடுலை ஹெலிகாப்டர் மூலம் உயரமான இடத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து இந்த க்ரூ மாடுல்களை கடல் பகுதியில் கழட்டி விட முடிவு செய்துள்ளனர்.

isro airdrop and pat test

இதனால் பாராசூட் இல்லாமல் இந்த க்ரூ மாடல் கடலில் விழுந்தாலும் உள்ளே இருக்கும் மனிதர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்பதை உறுதி செய்கின்றனர். அடுத்த கட்டசோதனையாக பேர்ட் அபார்ட் டெஸ்ட் (பேட்) எனப்படும் சோதனையை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சோதனையை இஸ்ரோ ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு செய்திருந்தது. ஆனால் அதன் பிறகு க்ரூ மாடுல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடுலில் ஏகப்பட்ட டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன.

இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சோதனை காலாவதியாகிவிட்டது. இதனால் மீண்டும் புதிய டிசைனிங் செய்யப்பட்ட க்ரூ மாடுல் மற்றும் க்ரூ எஸ்கேப் மாடுகளை கொண்டு பேட் அபௌட் டெஸ்ட் செய்யப்படும் அப்படி என்றால் முழுமையாக ராக்கெட் கட்டமைக்கப்பட்டு ஏவுதலுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஏவுதலுக்கு முன்பே இந்த மிஷன் நிறுத்தப்பட்டால் இந்த ராக்கெட் உள்ளே இருக்கும் மனிதர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இந்த சோதனை ஆகும்.

இஸ்ரோ இந்த சோதனைகளை வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் செய்து விட்டால் ககன்யான் திட்டத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் அதிலிருந்து இந்த திட்டத்திற்காக பயணிக்கும் மனிதர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்பதை இஸ்ரோ உறுதி செய்து விடும்.

அதன் பின்பு மற்ற பரிசோதனைகளை செய்ய உள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட முக்கியமான பரிசோதனையில் ராக்கெட்டில் மனிதனுக்கு பதிலாக ரோபோவை வைத்து முழுமையாக ககன்யான் திட்டத்தை சோதனையை செய்து அது வெற்றிகரமாக நிறைவடைந்தால் மட்டுமே அடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ தற்போது உலக நாடுகள் கவனிக்கும் முக்கியமான விண்வெளி ஆய்வு மையமாக இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்காக தற்போது தீவிரமாக தயாராகி வருவீர்கள் விரைவில் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் அதே போல 2035ம் ஆண்டு இந்தியா விண்வெளி தனக்கான விண்வெளி மையத்தையும், 2040-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Wednesday, October 25, 2023, 11:02 [IST]
English summary
Isro set to conduct air drop test with a helicopter and pat test for gaganyaan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X