சந்திரயான் 3 அனுப்பிய நிலவின் புகைப்படம்! இவ்வளவு பக்கத்துல போயிடுச்சா?
சந்திரயான் 3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் நெருங்கிய நிலையில் தற்போது நிலவின் புகைப்படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. இந்த புகைப்படத்தில் பல முக்கியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோவின் கனவு திட்டமாக சந்திரயான் 3 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின்படி பூமியிலிருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டு அது திட்டமிடப்படி நிலவு தரையிறங்கி அங்கு சோதனைகளை செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும். இந்த திட்டமே இந்தியாவின் கனவு திட்டமாக இருக்கிறது.

இதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது முதல் பூமியின் புவியீர்ப்பு விசையில் பூமியை சுற்றி வந்து பின்னர் பூமியிலிருந்து நிலவின் ஈர்ப்பு விசைக்கு ஈர்க்கப்பட்டு தற்போது நிலவை சுற்றி வருகிறது.
மெல்ல மெல்ல அதன் உயரத்தை குறைத்து வரும் 23ஆம் தேதி நிலவின் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்திராயான் 3 விண்கலம் நிலவை சுற்றி வரும் நிலையில் அதில் உள்ள கேமரா மூலம் நிலவை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த புகைப்படத்தை சந்திரயான் 3 விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. அதை இஸ்ரோ தற்போது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 பூமியிலிருந்து கிளம்பும்போது அதன் லேண்டர் இமேஜ் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது லேண்டர் ஹரிசாண்டல் வெலாசிட்டி கேமரா மூலம் நிலவை எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த கேமராக்களை இஸ்ரோவின் துணை அமைப்பான எஸ்ஏசி மற்றும் லியோஸ் ஆகிய அமைப்புகள் சேர்ந்து உருவாக்கியுள்ளது.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப்படத்தில் நிலவில் உள்ள பள்ளத்தாக்குகள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படத்தை சந்திரயான் 3 இந்திய நேரப்படி சரியாக ஆகஸ்ட் 6ஆம் தேதி எடுத்துள்ளது. இதை தான் தற்போது இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தற்போது சந்திரயான் 3 மெல்ல மெல்ல நிலவே நெருங்கிக் கொண்டே இருக்கிறது. அடுத்த ஒரு சில நாட்களில் நிலவுக்கு மிக அருகில் சந்திரயான் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி இந்த சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே நேரம் ரஷ்யாவும் நிலவிற்கு லூனா 25 என்ற விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இந்த விண்கலமும் நிலவில் தரையிறங்கும் லேண்டரை கொண்டுள்ளது. இந்த விண்கலமும் நிலவில் தான் தரையிறங்க போகிறது.
ஆனால் இது நிலவின் மற்றொரு பகுதியில் தரையிறங்குவதால் இதற்கும் சந்திரயா் 3 எந்த விதமான தொடர்பும் கிடையாது.
ஆனால் இஸ்ரோவிற்கு போட்டியாக ரஷ்யா இந்த விண்கலத்தை பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலே அனுப்பி உள்ளதாக விமர்சனங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த லூனா 25 விண்கலம் நிலவில் சென்று தர இயங்குவது என்பது மிகவும் கடினம் தான் எனவும் அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் 23ஆம் தேதி சந்திரயான் 3 நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் லூனா 25 எப்பொழுது தரையிறங்கும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது எது முதலில் தரையிறங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








