ஆகஸ்ட் 15ல் விண்ணில் பாயப்போகும் எஸ்எஸ்எல்வி! எதுக்காக தெரியுமா?

இஸ்ரோ வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விண்ணில் எஸ்எஸ்எல்வி-டி3 என்ற ராக்கெட்டை செலுத்துகிறது. இதில் இஓஎஸ்-08 என்ற சாட்டிலைட்டை எடுத்துச் செல்கிறது. இது பூமி குறித்த பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட செலுத்தப்பட இருக்கிறது. இந்த சேட்டிலைட் எப்படியாக பூமிக்கு பலன் தரப்போகிறது? இதை ஏன் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் அனுப்புகிறார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோ சிறிய ரக சேட்டிலைட்களை விண்வெளிக்கு செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி என்ற ராக்கெட்டை பயன்படுத்தி வருகிறது. இந்த ராக்கெட்டில் பல்வேறு விதமான மேம்படுத்துதல்களை செய்து அவ்வப்போது ஆய்வு செய்யும். இப்படியாக ஒவ்வொரு சேட்டிலைட்டிற்க்கும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ராக்கெட் விண்ணில் பாயும். இப்படியாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் பல்வேறு விதமான அப்டேட்களை பெற்றுள்ளது.

isro sslv d3

இந்நிலையில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தயார் செய்யப்பட்ட நோக்கத்தை கிட்டத்தட்ட எட்டிவிட்டது. இதன் இறுதி அப்டேட் செய்யப்பட்ட ராக்கெட் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி விண்ணில் பாய்கிறது. இதில் இஓஎஸ் 08 என்ற சேட்டிலைட்டை எடுத்துக் கொண்டு இது விண்ணுக்கு பறக்கிறது.

இதன் பிறகு எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் மேம்படுத்துதல் பணி முடிவடைகிறது. இதன் பிறகு இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இந்தியாவில் உள்ள அத்தனை துறைகளுக்கான சேட்டிலைட் மற்றும் மற்ற நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான சேட்டிலைட்டை விண்ணில் ஏவ இனி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

isro sslv d3

இந்த ராக்கெட்டில் இஓஎஸ்-08 என்ற சேட்டிலைட் பொருத்தப்பட்டுள்ளது. இஓஎஸ் என்றால் எர்த் அப்சர்வேஷன் சேட்டிலைட் ஆகும். இது ஒரு சிறியதாக சேட்டிலைட் தான். இந்த சேட்டிலைட்டில் மொத்தம் மூன்று விதமான பேலோடுகள் உள்ளன. அதன்படி எலெக்ட்ரோ ஆர்ப்டிக்கல் இன்ஃப்ராரெட் குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் ரிப்ளை மற்றும் எஸ்ஐசி யூவி தேசியோமீட்டர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் விண்வெளியில் ஓராண்டு காலம் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

இது 420 வாட் பவரை உருவாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஓஐஆர் என்ற கருவி மிட்-ரேஞ்ச் மற்றும் லாங்-ரேஞ்ச், இன்ஃப்ரா ரெட் இமேஜ்களை கேப்சர் செய்யும் திறன் கொண்டது. இது பகல் நேரம் மற்றும் இரவு நேரங்களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சேட்டிலைட் அடிப்படையிலான சர்வேக்கு உதவும்.

உதாரணமாக பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ விபத்து குறித்த கண்காணிப்பு, எரிமலை செயல்பாடு குறித்த கண்காணிப்பு, பெரிய தொழிற்சாலை அல்லது மின் உற்பத்தி மையத்தில் ஏற்படும் பேரிடர் குறித்த கண்காணிப்பு உள்ளிட்ட செயல்பாட்டிற்கு இது தேவைப்படும். அடுத்ததாக ஜிஎன்எஸ்எஸ் என்ற கருவி இருக்கிறது. இது பல்வேறு விதமான ரிமோட் சென்சிங் பணிகளுக்கு தேவைப்படும்.

இதன் மூலம் கடல் மட்டத்திற்கு மேல் காற்று எந்த திசையில் எவ்வளவு பிரஷரில் வீசுகிறது என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பூமியில் உள்ள மணலில் எவ்வளவு ஈரப்பதம் இருக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். இதுபோக இமய மலைப் பகுதியில் ஏற்படும் வெள்ளம் குறித்த கண்காணிப்பையும் இதன் மூலம் செய்ய முடியும். பூமியில் இருக்கும் ஏரி குளம் குறித்த நீர்நிலைப் பகுதிகள் குறித்த கண்காணிப்பையும் இதன் மூலம் செய்ய முடியும்.

அடுத்ததாக எஸ்ஐசி யூவி தேசியோமீட்டர் பயன்பாட்டை பொருத்தவரை ககன்யான் மிஷனிற்காக அனுப்பப்படுகிறது. இது யூவி குறித்த வியூவை எடுத்துக் கொடுக்கும். காமா ரேடியேசன் அதிகமானால் இது அலாரம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் விண்ணில் செலுத்தப் போகும் சுகன்யான் திட்டத்திற்கு இது பெரிய அளவில் உதவப் போகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ வரும் சுதந்திர தினத்தன்று காலையில் விண்ணில் செலுத்த உள்ள இந்த ராக்கெட் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு இனி கமர்ஷியல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 16:00 [IST]
English summary
The 2024 Royal Enfield Classic 350, launching on August 12, 2024, features a facelift, LED lighting, and advanced features while retaining its iconic design and engine performance.
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+