தமிழகத்தில் இஸ்ரோ செய்த புதிய சாதனை! மூக்கு மேலே விரலை வைத்த உலக நாடுகள்! பெரிய மேட்டர ஈஸியா பண்ணிட்டாங்க
இஸ்ரோ தனது செமிகிரையோஜினிக் இன்ஜினை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது இந்த இன்ஜின் வருங்காலங்களில் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மகேந்திர கிரி பகுதியில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சோதனை மையம் இருக்கிறது. அங்கு தான் இஸ்ரோ நிறுவனம் தனது இன்ஜின்களை சோதனை செய்யும். தற்போது அங்கு இஸ்ரோ நிறுவனம் செமி கிரையோஜினிக் இன்டகிரேட்டட் இன்ஜினை டெஸ்ட் செய்துள்ளது.

இந்த இன்ஜின் 2000 கிலோ நியூட்டன் த்ரஸ்ட் திறனில் இயங்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்னையுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் இந்த இன்ஜினை வருங்காலங்களில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரையோஜினிக் இன்ஜின் என்பது இஸ்ரோ பயன்படுத்தும் ராக்கெட்களில் கடைசிக் கட்டத்தில் இருக்கும் இன்ஜின் இந்த இன்ஜின் விண்வெளியில் நீண்ட நேரம் இயங்கி ராக்கெட்டை மிக உயரமான இடத்திற்குக் கொண்டு செல்ல உதவுகிறது. கிரையோஜினிக் இன்ஜின் திரவ வடிவில் உள்ள ஆக்ஸிஜனை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. ஆனால் இதை வைத்து தேவையான தூரம் பயணிக்க முடியவில்லை.

இந்த சிக்கலைச் சமாளிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் யோசித்தனர். குறைவான எரிபொருளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால் எரிபொருளின் அடர்த்தியைக் குறைக்க முடிவு செய்தனர். இதற்கு லிக்யூட் ஆக்ஸிஜன் உடன் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யையும் பயன்படுத்த முடிவு செய்தனர். இப்படியாகச் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் லிக்யூட் ஆக்ஸிஜனில் இயங்கும் இன்ஜினை செமி கிரையோஜினிக் இன்ஜினாக வடிவமைத்துள்ளனர்.
இந்த இன்ஜினிற்கு பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணென்னை, லிக்யூட் ஆக்ஜினை விட எடை குறைவு, இதனால் குறைவான இடத்தில் அதிகமான எரிபொருளைச் சேமிக்க முடியும். இதனால் வழக்கத்தை விட அதிக நேரம் இந்த இன்ஜின் இயங்கும். மேலும் இதைச் சாதாரண வெப்ப நிலையிலேயே சேமித்து வைக்க முடியும்.

மண்ணெண்னையுடன் லிக்யூட் ஆக்ஸிஜன் கலப்பதால் சாதாரண கிரையேஜினிக் இன்ஜினை விடச் செமி கிரையோஜினிக் இன்ஜின் அதிகமான உந்து சக்தியை வெளிப்படுத்துகிறது. இதனால் நீண்ட தூரம் ராக்கெட்டால் பயணிக்க முடியும். இந்த இன்ஜினை பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
இந்த இன்ஜினை இஸ்ரோ நிறுவனம் தனது பிஎஸ்எல்வி, ஜிஎல்எல்வி மார்க் 2 மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஆகிய ராக்கெட்களில் பயன்படுத்தவுள்ளது. எதிர்காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்த இன்ஜின் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கலாம் மற்ற நாடுகளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சிம்ம சொப்பனமாக மாறும் காலம் தொலைவில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விண்வெளி ஆய்வில் இஸ்ரோ மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ளது. இந்த செமி கிரையோஜினிக் இன்ஜின் இதை மேலும் ஒரு படி நிச்சயம் நகர்த்திச் செல்லும். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி தற்போது கமர்ஷியல் பயன்பாட்டிற்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது. இனிமேல் இஸ்ரோ தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications
