வானத்துலேயே வச்சு இவ்ளோ பெரிய சம்பவத்தை பண்ணியிருக்கா இஸ்ரோ.. நாசாவே இந்நேரம் மிரண்டு போயிருக்கும்!

ஸ்பேடெக்ஸ் (SPADEX) திட்டத்தின்கீழ், இந்தியாவின் இஸ்ரோ (ISRO) விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட சோதனை வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விண்வெளியில் வைத்து இரு கலன்களை இணைப்பது மற்றும் பிரிப்பது ஆகிய செயல்களையே வெற்றிகரமாக செய்து பார்த்திருக்கின்றது, இஸ்ரோ. அதாவது, எஸ்டிஎக்ஸ் 01 (SDX 01) மற்றும் எஸ்டிஎக்ஸ் 02 (SDX 02) ஆகிய செயற்கோள்களையே அது இணைப்பது மற்றும் பிரிப்பது ஆகிய செயல்களை விண்வெளியில் வைத்து செய்து பார்த்திருக்கின்றது.

இதன் வாயிலாக, தோல்வியில்லாமல் வான்வெளியில் வைத்து கோள்களை இணைப்பது மற்றும் பிரிப்பது ஆகியவற்றை வெற்றிகரமாக செய்து முடித்த உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறியிருக்கின்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இஸ்ரோ கடந்த மார்ச் 13 ஆம் தேதி அன்றே செய்திருக்கின்றது.

Isro achieves spadex satellites undocking success

ஸ்பேடெக்ஸ் செயற்கோல்கள் வெற்றி கரமாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவற்றை பிரித்து பார்க்கும் முயற்சியில் இஸ்ரோ களமிறங்கியது. மார்ச் 13 ஆம் தேதி 9.20 மணி அளவில் இந்த சோதனை செய்யப்பட்டது. அது வெற்றிகரமாக செய்யப்பட்டது.

குறிப்பாக, முதல் முயற்சியிலேயே இதனை வெற்றிகரமாக இஸ்ரோ செய்திருக்கின்றது. பூமியில் இருந்து சுமார் 460 கிமீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் வைத்தே செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பிரித்து பார்க்கப்பட்டு இருக்கின்றன. அப்போது இரண்டு கோள்களும் 45 டிகிரி சாய்ந்த நிலையில் இருந்ததாக இஸ்ரோ தெரிவித்து இருக்கின்றது.

இந்த பணியின் போது எந்த பாதிப்பும் இரண்டு கோள்களுக்கும் ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, அந்த கோள்கள் இப்போதும் இயங்கும் நிலையில் இருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்து இருக்கின்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் சில செயற்கோள்களில் இந்த சோதனையைச் செய்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டு இருக்கின்றது. எஸ்டிஎக்ஸ் 01 மற்றும் எஸ்டிஎக்ஸ் 02 இரண்டு செயற்கைகோள்களும் சென்ற ஆண்டிலேயே விண்ணிற்கு அனுப்பப்பட்டுவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றை பிஎஸ்எல்வி-சி60 எனும் ராக்கெட் மூலமாகவே இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பி வைத்திருந்தது.

Spadex undocking mission

இரண்டு விண்கலன்களும் தனித் தனியே 220 கிலோ எடையைக் கொண்டவை ஆகும். இதில், எஸ்டிஎக்ஸ் 01 சேஸர் என்றும், எஸ்டிஎக்ஸ் 02 டார்கெட் என்றும் பெயர் குறிப்பிடப்படுகின்றன. இரண்டும் பூமியை அதி வேகத்தில் சுற்றி வரும் திறன் கொண்டவை ஆகும். இவற்றையே வெற்றிகரமாக இணைத்து பின்னர் மீண்டும் பிரித்திருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

விண்வெளியில் இதை செய்வது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. சிறு தவறும் பேரிழப்பிற்கு வழிவகுத்துவிடும். இந்த செயலையே முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்திருக்கின்றனர். இதைச் செய்த விஞ்ஞானிகள் குழுவிற்கு இஸ்ரோ தலைவர் வி நாராயணன் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஏற்கனவே இந்த செயலை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக செய்திருக்கின்றன.

Spadex undocking mission succesful

இவர்களின் வரிசையிலேயே தற்போது இந்தியா நான்காவது ஆளாக இணைந்திருக்கின்றது. இந்த திட்டம் எதிர்காலத்தில் இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதுமட்டுமல்ல இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்களர் தெரிவித்து இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் இஸ்ரோ இதற்கு முன்னதாகவும் பல்வேறு சாதனைகளைப் படைத்து இருக்கின்றது. அதில் மிக முக்கியமானதாக ஸ்பேடெக்ஸ் திட்டம் அமைந்திருக்கின்றது. இதன் வாயிலாக தன்னுடைய எதிர்கால திட்டங்கள் பலவற்றை மிக சுலபமாகவும், குறைந்த செலவிலும் இஸ்ரோ செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2025, 20:23 [IST]
English summary
Isro successfully undocks spadex satellites in pioneering operation on first attempt
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X