யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இஸ்ரோ செய்த சோதனை! உலக நாடுகள் எல்லாம் இனி மிரள போறாங்க!
விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ தனது விகாஸ் இன்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தமிழகத்தில் தான் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த ககன்யான் திட்டம் என்றால் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோவிற்கு சந்திரயான் 3க்கு பிறகு மிகப்பெரிய கனவு திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம் தான். இந்தத் திட்டத்தின் படி இஸ்ரோ பூமியிலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. அங்கு பல்வேறு சோதனைகளை செய்த பின்பு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருகிறது.

இந்தத் திட்டத்திற்கான பணியில் தான் தற்போது இஸ்ரோ தீவிரமாக இருக்கிறது. சந்திரயான் 3 கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த வெற்றி நிகழ்வுகள் எல்லாம் நிகழ உள்ள உள்ளது. இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும். இந்நிலையில் இஸ்ரோ அடுத்த கனவு திட்டத்திற்கு தயாராகி வருகிறது.
அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ககன்யான் என பெயர் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி பூமியிலிருந்து மூன்று மனிதர்களை ராக்கெட்டில் ஏற்றி அவர்களை விண்ணிற்கு அனுப்பி மூன்று நாட்கள் அங்கு ஆய்வு செய்த பின்பு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வர வேண்டும்.
இதற்காக இஸ்ரோ எச்எல்விஎம் 3 என்ற ராக்கெட்டை பயன்படுத்த போகிறது. அதாவது இஸ்ரோவிடம் உள்ள எல்விஎம்3 ராக்கெட்டில் கூடுதலாக மனிதர்கள் பூமிக்கு திரும்பும் சிஸ்டத்தையும் இணைத்து எச்எல்விஎம்3 ராக்கெட்டாக உருவாக்கப் போகிறது. இந்த ராக்கெட்டில் எல்விஎம்3 ராக்கெட்டில் உள்ள பாகம் போக கூடுதலாக சிஇஎஸ் என்ற ஒரு பாகம் இணைக்கப்பட்டு இருக்கும்.
சிஇஎஸ் என்றால் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் என அர்த்தம் ஆகும். இது ராக்கெட் விண்ணில் செல்லும்போதும், அவர்கள் திரும்பி வரும்போதும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பூமிக்கு பத்திரமாக கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனம் ஆகும். இதனால் இந்த திட்டத்தில் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பாடமல் இருக்கும்.
இதுபோக இந்த ராக்கெட்டின் ஆர்பிட்டல் மாடுல் க்ரூ மாடுல், சர்வீஸ் மாடுல் என மொத்தம் இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது. க்ரூ மாடுல் உள்ளே மனிதர்கள் இருக்கக்கூடிய அளவு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதில் பயணிக்கும் மனிதர்களுக்கு பாதுகாப்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருத்தப்படுகிறது இது மனிதர்கள் மீண்டும் பூமிக்கு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும்.
சர்வீஸ் மாடுல் என்பது க்ரூ மாடலுக்கு துணையாக வேலை செய்யும் கருவியாக செயல்படும். இது பிரஷரைஷ் செய்யப்படாத கட்டமைப்பாகும் இதில் தெர்மல் சிஸ்டம் ப்ரொபைல்சன் சிஸ்டம் மற்றும் பவர் சிஸ்டம் டெப்லாய்மென்ட் மெக்கானிசம் ஆகியவை உள்ளடங்கும். இதன் மூலம் தான் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்.
இந்தத் திட்டத்திற்காக விண்ணில் செல்ல உள்ள மனிதர்களை பயிற்சிவிக்க பெங்களூருவில் ஒரு பயிற்சி மையத்தையும் இஸ்ரோ கட்டமைத்துள்ளது. அங்கு அவர்களுக்கு பிசிக்கல் ஃபிட்னஸ் டிரெய்னிங், சிமுலேட்டர் டிரைனிங், பிளைட் சூட் டிரைனிங்,ககன்யான் திட்டம் குறித்த பயிற்சி, மைக்ரோ கிராவிட்டி குறித்த அனுபவம், ஏரோ மெடிக்கல் டிரைனிங், ரெக்கவரி மற்றும் சர்வைவல் டிரைனிங் அவ்வப்போது பறக்கும் பிராக்டிஸ், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த ககன்யான் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் எச்எல்வஎம் 3 ராக்கெட்டில் விகாஸ் இன்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இன்ஜின் இரண்டாம் தலைமுறை விகாஸ் இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை தான் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்யப்பட்டது.
சுமார் 670 வினாடிகள் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த இன்ஜின் தற்போது ககன்யான் திட்டத்திற்காக பயன்படுத்த தயாராகிவிட்டது. 2022 ஆம் ஆண்டு இந்த ககன்யான் திட்டத்திற்காக ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அதற்கு அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் இந்தியா விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது என்பது வெகு சில நாடுகளை செய்த சாதனையாக இருக்கிறது. இந்தியாவும் இந்த நாடுகளின் பட்டியலில் விரைவில் இணைய உள்ளது. இந்த சாதனைகளுக்கான முழு அங்கீகாரமும் இஸ்ரோ விஞ்ஞானிகளையே சாரும்


Click it and Unblock the Notifications








