உலக நாடுகளே ஷாக் ஆகிட்டாங்க! சூப்பரான ராக்கெட் இன்ஜினை சோதனை செய்த இஸ்ரோ!

மனிதர்களை பூமியில் இருந்து விண்வெளிக்கு அழைத்து செல்லும் முதல் திட்டமாக ககன்யான் என்ற திட்டத்திற்கான ஏற்பாடுகளை தற்போது இஸ்ரோ செய்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தில் பயன்படுத்துவதற்கான புதிய இன்ஜின் ஒன்றை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் அதிக எடை கொண்ட பொருட்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்ட செமி கிரையோஜினிக் இன்ஜின் தயாராகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது .கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்கியதன் பிறகு உலக நாடுகளே இஸ்ரோவை வியந்து பார்த்து வருகின்றன .பல விஞ்ஞானிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி வருகிறார்கள். தொடர்ந்து இஸ்ரோ பல்வேறு விதமான திட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

isro tests semi-cryogenic engine

இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம் தான். இந்த திட்டத்தின் படி மனிதர்களை பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்வெளி பத்திரமாக கூட்டி சென்று அவர்களை அங்கு ஆய்வு நடத்த வைத்து, பின்பு அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. இதற்கான அனைத்து பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.

இந்த ககன்யான் திட்டத்திற்காக எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த போகிறது. இந்த ராக்கெட்டை செயல்படுத்துவதற்காக ஏற்கனவே இருக்கும் இன்ஜினில் சில மாற்றங்களை செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக எடை கொண்ட பொருட்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதால் இந்த மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளது.

isro tests semi-cryogenic engine

அதன்படி இந்த ராக்கெட்டின் 2ம் ஸ்டேஜ் இல் உள்ள செமி கிரையோஜினிக் இன்ஜினை மாற்றி அதிக திரஸ்டை உருவாக்கும் வகையில் இதை கட்டமைக்க முடிவு செய்துள்ளார்கள். அதன்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இன்ஜின் 2 மெகா நியூட்டன் அதாவது 2000 கிலோ நியூட்டர் திரஸ்டை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியாக இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள புரொபல்சன் சோதனை மையத்தில் இந்த இன்ஜின் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது இந்த இன்ஜின் இக்னீசியன் சோதனை மட்டுமே செய்யப்பட்டது.

isro tests semi-cryogenic engine

அதாவது இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு அது ஒழுங்காக வேலை செய்கிறதா நாம் எதிர்பார்க்கும் திரஸ்டை தருகிறதா என்பதை மட்டுமே சோதனை செய்தார்கள். இன்றைய சோதனையில் இந்த இன்ஜின் வெற்றி பெற்றுள்ளது. எதிர்பார்த்தபடி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இன்ஜின் ஸ்டார்டாகி உள்ளது. மேலும் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு 2000 கிலோ நியூட்டன் பவரையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த இன்ஜினுக்கு எரிபொருளாக திரவமாக்கப்பட்ட ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்னை ஆகியவை கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்த சோதனையின் போது இது எவ்வளவு எரிபொருளில் எவ்வளவு நேரம் இயங்குகிறது அதிக நேரம் இயங்குவதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா உள்ளிட்ட சோதனைகள் எல்லாம் அடுத்தடுத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனையில் எல்லாம் இந்த இன்ஜின் வெற்றி பெறும் பட்சத்தில் இது ககன்யான் திட்டத்திற்காக விண்ணில் ஏவப்பட உள்ள ராக்கெட்டில் இந்த இன்ஜின் பொருத்தப்படும் என இஸ்ரோவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் தனித்துவமே இது அதிகமான திரஸ்டை உருவாக்குவது தான். இதன் மூலம் அதிக எடை கொண்ட பொருட்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல முடியும்.

தற்போது உள்ள இன்ஜினை பயன்படுத்தி அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் போது குறிப்பிட்ட அளவு திரஸ்ட் காரணமாக அதிக தூரம் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதை தடுப்பதற்காக திரஸ்ட் அதிகப்படுத்தி எடையையும் அதிகப்படுத்தினால் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பாராத தூரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்பதால் இந்த அப்டேட்டை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோவின் இந்த அப்டேட் இஸ்ரோவின் செமி கிரையோஜினிக் இன்ஜின் கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிக எடை கொண்ட பொருட்களை விண்வெளிக்கு இஸ்ரோவால் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். இந்த இன்ஜின் ககன்யான் திட்டம் மட்டுமல்லாமல் வருங்காலங்களில் வரப்போகும் திட்டங்களுக்கும் பயன்பட ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 11:56 [IST]
English summary
Isro tests semi cryo engine milestone 2mn thrust achieved
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X