ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஒரு பைசா கூட கட்டணம் வாங்காமல், ஒரு செயற்கைகோளை இஸ்ரோ இன்று இரவு இலவசமாக விண்ணில் ஏவுகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியமும், பெருமையும் அடையக்கூடும்.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நிகராக, விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

எந்த நாட்டினுடைய உதவியும் இன்றி முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான மங்கள்யான், சந்திராயன்-1 உள்ளிட்ட செயற்கைகோள்களின் வெற்றி, இஸ்ரோ அமைப்பின் திறமைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு மட்டுமே.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதுதவிர கட்டண அடிப்படையில் வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் இந்தியாவில் இருந்து இஸ்ரோ அமைப்பு விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி இதுவரை 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைகோள்கள் இஸ்ரோ மூலம் இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதன்மூலம் இஸ்ரோவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள்களை பெரும்பாலும் பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle-PSLV) ராக்கெட் மூலம்தான் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாபெரும் உலக சாதனை ஒன்றை இஸ்ரோ நிகழ்த்தியது. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதுதான் அந்த சாதனை.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா என உலகின் வேறு எந்த நாடும் இதுவரை ஒரே ராக்கெட்டில் இவ்வளவு அதிகமான செயற்கைகோள்களை ஏவியது கிடையாது. உலகிலேயே முதல் முறையாக இந்தியாவின் இஸ்ரோதான் இப்படி ஒரு அரிய சாதனையை நிகழ்த்தி காட்டி உலக நாடுகளை பிரம்மிக்க வைத்தது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இந்த 104 செயற்கைகோள்களில் மூன்று மட்டுமே இந்தியாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 96 செயற்கைகோள்கள் அமெரிக்காவினுடையது. எஞ்சிய செயற்கைகோள்கள் இஸ்ரேல், பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவை.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இவை அனைத்தையும் கட்டணம் பெற்றுக்கொண்டுதான் இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆனால் ஒரு பைசா கூட கட்டணம் வாங்காமல், ஒரு செயற்கைகோளை முற்றிலும் இலவசமாக தற்போது விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ. இதற்கான காரணங்கள் பெருமிதத்தையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்த கூடியவை.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி-சி44 (PSLV-C44) ராக்கெட் மூலம், இன்று (ஜனவரி 24) இரவு 2 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

மைக்ரோசாட்-ஆர் (Microsat-R) மற்றும் கலாம்சாட்-வி2 (Kalamsat-V2) ஆகியவைதான் அந்த இரண்டு செயற்கைகோள்கள். இதில், மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோள், இஸ்ரோ அமைப்பால் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

சுமார் 740 கிலோ எடை கொண்ட மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோளானது, நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிப்பதற்காக, இஸ்ரோ அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு செயற்கைகோளான கலாம்சாட்-வி2 தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமை பெருமைப்படுத்தும் விதமாகவே இதற்கு கலாம்சாட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளைதான் ஒரு பைசா கூட கட்டணம் வாங்காமல் இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

கலாம்சாட்-வி2 செயற்கைகோளின் சிறப்பம்சங்கள் நம்மை மட்டுமல்லாது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இதன் மொத்த எடை வெறும் 1.26 கிலோ மட்டுமே. அதாவது கலாம்சாட்-வி2 செயற்கைகோளின் எடையானது, ஒரு மர இருக்கையை காட்டிலும் குறைவானது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதன்மூலமாக உலகின் மிக இலகுவான சாட்டிலைட் (World's Lightest Satellite) என்ற பெருமையை கலாம்சாட்-வி2 பெறுவதாக இஸ்ரோ அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு செயற்கைகோளை தமிழக மாணவர்கள் வடிவமைத்திருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (Space Kidz India) அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் மாணவர்கள்தான், கலாம்சாட்-வி2 செயற்கைகோளை தயாரித்துள்ளனர். தொலைதொடர்பு செயற்கைகோளான இது, 12 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

மைக்ரோசாட்-ஆர், கலாம்சாட்-வி2 ஆகிய இரண்டு செயற்கைகோள்களும், பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட் மூலம், இன்று இரவு சரியாக 11.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இதற்கான கவுண்ட்-டவுன் நேற்று இரவே தொடங்கி விட்டது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இவ்விரு செயற்கைகோள்களையும் சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட் 44.4 மீட்டர் நீளம் கொண்டது. இதன் மொத்த எடை 260 டன்கள் ஆகும். இந்தியாவின் மிக வெற்றிகரமான ராக்கெட்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இதுவரை பல்வேறு செயற்கைகோள்கள் 45 முறை ஏவப்பட்டுள்ளன. இதில், 42 முறை இஸ்ரோவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. 3 முறை மட்டுமே எதிர்பாராத விதமாக தோல்வியடைய நேரிட்டுள்ளது. இன்று இரவு நடைபெறவிருப்பது 46வது லான்ச் ஆகும்.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

முன்னதாக 64 கிராம் மட்டுமே எடை கொண்ட கலாம்சாட் செயற்கைகோளின் முந்தைய வெர்ஷன், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா (National Aeronautics and Space Administration-NASA) மூலம், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

கலாம்சாட் செயற்கைகோளின் மெல்லிய எடை காரணமாக இதற்கு ''குலோப் ஜாமுன்'' என செல்ல பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இது புவி சுற்று வட்டப்பாதையை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இஸ்ரோ தற்போது எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெற உளமார வாழ்த்துவோம். வாழ்த்துக்கள் இஸ்ரோ...

Image Courtesy: ISRO

More from DriveSpark

Article Published On: Thursday, January 24, 2019, 17:20 [IST]
English summary
ISRO To Launch World's Lightest Satellite Kalamsat-V2 Made By Tamil Nadu Students, Microsat-R. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+