உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

உலக நாடுகளை அதிர வைக்கும் வகையிலான புதிய திட்டம் ஒன்றை இந்தியாவின் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO- Indian Space Research Organisation), கடந்த 1969ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. இடைப்பட்ட இந்த 49 ஆண்டுகளில், உலக நாடுகள் வியக்கும் வண்ணம் பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது இஸ்ரோ.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆர்யபட்டாவை இஸ்ரோதான் உருவாக்கியது. இருந்தபோதும் ரஷ்யாவின் உதவியுடன்தான் ஆர்யபட்டா செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யாவின் காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட் மூலம், கடந்த 1975ம் ஆண்டு ஆர்யபட்டா விண்ணில் பாய்ந்தது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

ஆனால் தற்போது பிஎஸ்எல்வி (PSLV), ஜிஎஸ்எல்வி (GSLV) என ராக்கெட் தொழில்நுட்பத்தில், இஸ்ரோ புகுந்து விளையாடுகிறது. இஸ்ரோவின் ராக்கெட்கள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த, உலகின் பல்வேறு நாடுகளும் வரிசை கட்டி நிற்கின்றன.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு, புதிய உலக சாதனை ஒன்றை படைத்தது இஸ்ரோ. பிஎஸ்எல்வி-சி37 என்ற ஒரே ராக்கெட் மூலம், 104 செயற்கைகோள்களை விண்ணில் ஏவி, உலக நாடுகள் அனைத்தையும் இஸ்ரோ அதிர வைத்தது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இதில், அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் செயற்கைகோள்களும் அடக்கம். இந்த 104 செயற்கைகோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இதற்கு முன்பாக உலகின் வேறு எந்த நாடும், ஒரே ராக்கெட்டில் இவ்வளவு செயற்கைகோள்களை ஏவியது கிடையாது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

வெளிநாட்டு செயற்கைகோள்களை கட்டண அடிப்படையில்தான் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதன்மூலம் இஸ்ரோவிற்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. ராக்கெட் தொழில்நுட்பம் மட்டுமின்றி செயற்கைகோள் தொழில்நுட்பத்திலும் இஸ்ரோவிற்கு நிகர் இஸ்ரோதான்.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட மங்கள்யான் மற்றும் பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன்-1 ஆகிய செயற்கைகோள்கள் இதனை பறைசாற்றுகின்றன. இதில், இஸ்ரோவிற்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது மங்கள்யான்தான்.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

மங்கள்யான் செயற்கைகோள் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் சுமார் 10 மாதங்கள் கழித்து, அதாவது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான்.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இதன்மூலம் ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் (Roscosmos), அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி (European Space Agency) ஆகியவற்றுக்கு பிறகு, செவ்வாய் கிரகத்தை தொட்ட உலகின் 4வது விண்வெளி ஆய்வு அமைப்பு என்ற பெருமையை இஸ்ரோ பெற்றது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

அத்துடன் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை தொட்ட உலகின் முதல் நாடு என்ற பெருமையையும் இதன்மூலம் இந்தியாவிற்கு தேடி தந்தது இஸ்ரோ. தற்போது சந்திராயன்-2 மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

தற்போது வரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணையவுள்ளது. ''ககன்யான்'' என்ற விண்கலத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளை இஸ்ரோ முடுக்கி விட்டுள்ளது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இந்த பணிகளுக்கு இடையேயும், வரும் கோடை காலத்தில், புதிய திட்டம் ஒன்றை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. செயற்கைகோள்களை தயாரிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் இஸ்ரோவின் இந்த புதிய திட்டம்.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

தேர்வு செய்யப்படும் 9ம் வகுப்பு மாணவர்கள் 100 பேருக்கு கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்க உள்ளது இஸ்ரோ. செயற்கைகோள்களை உருவாக்குவது தொடர்பாக அவர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்கப்படவுள்ளது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இது 2 வார கால பயிற்சியாகும். இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், பயிற்சியின்போது பள்ளி மாணவர்கள் உருவாக்கும் செயற்கைகோள்கள் சிறப்பாக இருந்தால், அவற்றை விண்ணில் ஏவவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அனைவரும், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ முகாம்களில், 2 வார காலம் தங்கியிருந்து பயிற்சி பெறுவார்கள். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும் அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா 3 பேர் வீதம் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கல்வி மற்றும் தனித்திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாணவர்கள் செய்யப்படவுள்ளனர்.

உலக நாடுகளை அதிர வைக்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் இதுதான்... எதிர்கால உலகம் இந்தியா கையில்...

இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், விஞ்ஞானியாக விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இந்தியாவின் எதிர்கால விண்வெளி துறையை வலுவாக கட்டமைப்பதற்காக இஸ்ரோ இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. தற்போது இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
ISRO To Train 100 School Students In Satellite Making. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X