30ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி! இந்தியாவிற்கு இத்தனை கோடி லாபமா?

இஸ்ரோ வரும் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 6:30 மணிக்கு தனது பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் 6 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்துகிறது. இது என்ன என்ன செயற்கைக்கோள்கள்? இதனால் பலன்கள் என்ன? இந்தியாவிற்கு இதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்? என்ன இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது இந்தியாவிற்கான சாட்டிலைட்களை மட்டுமல்லாமல் கமர்சியல் ரீதியாக மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அந்த நாட்டிற்கான சாட்டிலைட்களையும் விண்ணில் ஏவி வருகிறது. கடைசியாக கடந்த 14ம் தேதி இஸ்ரோ தனக்கான சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

PSLV Launch

தற்போது சந்திரயான்-3 நிலவிற்கான தனது பயணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இஸ்ரோ அடுத்த ஏவுதலுக்கு தயாராகிவிட்டது. அதன்படி தனது பிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ வரும் 30 ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இது முக்கியமாக சிங்கப்பூர் நாட்டின் சேட்டிலைட் பொருத்தப்பட்டுள்ளது.

டிஎஸ்-எஸ்ஏஆர் என அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் இதில் பிரதான சாட்டிலைட்டாக கருதப்படுகிறது. இந்த சாட்டிலைட் மொத்தம் 360 கிலோ எடை கொண்டது. இந்த சாட்டிலைட்டை பூமியிலிருந்து சுமார் 535 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நியர் ஈக்கோட்டோரியல் ஆர்பிட் எனப்படும் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு எடுத்து செல்லும்.

PSLV Launch

இந்த டிஎஸ் - எஸ்ஏஆர் சாட்டிலைட் என்பது சிங்கப்பூர் அரசால் தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது. இந்த சாட்டிலைட்கள் சிங்கப்பூர் அரசு பயன்பாட்டிற்கான தகவல்களை சேகரிப்பதற்காக இந்தியாவின் இஸ்ரோ அமைப்பால் விண்ணில் செலுத்தப்படுகிறது. இரு நாட்டிற்கும் உள்ள ஒப்பந்தத்தின் பெயரில் இது நடந்துள்ளது.

இந்த சிங்கப்பூர் அரசுடன் சேர்ந்து தயாரிக்க தனியார் நிறுவனம் எஸ்டி இன்ஜினியரிங் இந்த நிறுவனமும் இந்த சேட்டிலைட் தனது மல்டி மாடல் மற்றும் அதிக ரெஸ்பான்சிவ் கொண்ட இமேஜினரிகளை உருவாக்கவும் ஜியோ ஸ்பாடிகள் சர்வீஸை வழங்கவும் தனது கமர்சியல் வாடிக்கையாளர்களுக்கு உதவும் இந்த சேட்டிலைட்டை பயன்படுத்த உள்ளது.

டிஎஸ் எஸ்ஏஆர் சாட்டிலைட்டில் எஸ்ஏஆர் என்பதற்கு விரிவாக்கம் சிந்தடிக் அப்பேச்சர் ரேடார் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த சேட்டிலைட் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரியில் உருவாக்கப்பட்டது. இந்த சாட்டிலைட் அனைத்து விதமான பருவநிலைகளிலும் மேகமூட்டமாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும், பகலாக இருந்தாலும், இரவாக இருந்தாலும் வேலை செய்யும் திறன் கொண்டது.

சுமார் ஒரு மீட்டர் தொலைவில் இந்த சேட்டிலைட் முழு போலரிமெட்ரி பற்றி இமேஜ்களை வழங்கும். இந்த பிரைமரி சாட்டிலைட்டிற்கு துணையாக 6 சேட்டிலைட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தனிச்சையாகவும் பிரைமரி சாட்டிலைட்களுடன் இணைந்தும் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு.

1. VELOXAM- டெமான்ஸ்ட்ரேஷன் மைக்ரோ சேட்டிலைட்
2. ARCADE: அட்மாஸ்பியரி கப்ளிங் அண்ட் டைனமிக் எக்ஸ்ப்ளோரர்- சோதனை சாட்டிலைட்
3. SCOOB II: இது ஒரு நானோ சேட்டிலைட் ஆகும். நோ ஸ்பேஸ் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
4. களாஸ்ஸியா-2: இதுவும் நானோ சேட்டிலைட் தான் இது லோயர் ஆர்பிட் பகுதியில் பூமியை சுற்றி வரும்.
5.ஓஆர்பி-12 எஸ்டிரைடர்: இது சர்வதேச கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்.

இந்த சாட்டிலைட் எல்லாம் பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த சி56 ராக்கெட் என்பது கோர் அலோன் மோடாக சி55 ராக்கெட்டை போல தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு ஸ்டேஜ்கள் உடன் முதல் ஸ்டேட்ஜ் சாலிட் ஸ்டேஜ் இரண்டாவது லிக்யூட், மூன்றாவது சாலிட் நாலாவது லிக்யூட் ஸ்டேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் விண்ணில் செலுத்தப்படவும் அனைத்து சேட்டிலைட்டுகளும் சிங்கப்பூருக்கு சொந்தமான சாட்டிலைட் தான் இதை இந்தியா ஒரு கமர்சியல் ஏவுதலாக மட்டுமே நடத்துகிறது. இந்த ஏவுதல் மூலம் இந்தியாவிற்கு ரூ 200 கோடி வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு தகவல்கள் ஏவுதலுக்கு பின்னர் வெளியிடப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய உச்சத்தை எட்டி வருகிறது. பல வளர்ந்த நாடுகள் கூட தற்போது விண்வெளி ஆய்வுக்காக இந்தியா போன்ற நாடு சார்ந்திருக்க வேண்டியது இருக்கிறது. குறிப்பாக இஸ்ரோவின் மீது மற்ற பல நாடுகள் அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். இது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான கௌரவமாகும்.

Article Published On: Tuesday, July 25, 2023, 12:12 [IST]
English summary
Isros pslv c56 is set to launch seven singaporean satellites
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+