விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டிலேயே கை வைத்த ஐடி ஊழியர்.. திருட்டில் அந்த அரசியல்வாதிக்கு பங்கு உண்டா?

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மருமகனுக்கு சொந்தமான சொகுசு காரை ஐடி ஊழியர் ஒருவர் களவாடிச் சென்றிருக்கின்றார். இந்த திருட்டுக்கு பின்னால் பிரபல அரசியல்வாதி இருப்பதாக அவர் வாக்கமூலம் கொடுத்துள்ளார் இதுகுறித்த முழு விபரத்தைக் காணலாம்.

கூவி கூவி வியாபாரி வியாபாரம் செய்வதைப் போல, இளைய தளபதி நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின்போது அப்படத்திற்கு பேசி பேசி புரமோஷன் செய்வதர் தில் ராஜூ. இவர் வேறு யாரும் இல்லைங்க, அந்த படத்தின் தயாரிப்பாளரே அவர்தான்.

IT professional steals car

டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, விஜய் சாரோட பாடி லாங்குவேஜ் சீன்ஸ் வேணுமா அது இருக்கு, ஃபைனலி எமோசன் ஆல்ஸோ இருக்குனு" என்கிற பேச்சின் வாயிலாக தமிழர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் மனம் கவர்ந்த நபராகவும் அவர் மாறினார்.

இவருடைய மருமகனுக்கே ஐடி ஊழியர் ஒருவர் விபூதி அடிக்க பார்த்து தற்போது மிக பெரிய சிக்கலில் சிக்கி இருக்கின்றார். ஐடி, என்றாலே கை நிறைய சம்பளம், ஆடம்பர வாழ்க்கை என்பதே நம்மில் பலரின் நினைவிற்கு வரும். ஆனால், இந்த துறையிலும் பல்வேறு இன்னல்கள் உள்ளன.

Dil raju

பணி நீக்கம், இது எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். இதேபோல், பல நேரங்களில் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்களைத் தாங்கிய ஓர் துறையே ஐடி ஆகும். இருப்பினும், அவர்களின் ஜாலியான வாழ்க்கை முறையே பலரும் அறிந்ததாக இருக்கின்றது.

இந்த ஜாலியான வாழ்க்கை போதாது என்று கூடுதல் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதன் விளைாக ஓர் ஐடி ஊழியர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Dil raju son in law and his daughter

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரே ஆவார். இவரின் மருமகன் அர்சித் ரெட்டி. இவரிடம் விலை உயர்ந்த அரிய மற்றும் ஆடம்பர வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

அந்தவகையில், அவரிடத்தில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக போர்ஷே கேமேன் இருக்கின்றது. இந்த காரையே லாவகமாக திருடிச் சென்றிருக்கின்றார் ஐடி ஊழியரான மல்லேலா சாய்கிரண் என்பவர். போர்ஷே காரை நட்சத்திர விடுதி ஒன்றில் விட்டுவிட்டு உடற்பயிற்சிக்காக சென்றபோதே இந்த ஐடி ஊழியர் களவு செய்து சென்றிருக்கின்றார்.

இந்த காரின் மதிப்பு ரூ. 1.7 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எடுத்துச் சென்று தற்போது சிக்கலில் சிக்கி இருக்கின்றார். சம்பவத்தன்று என்ன ஆகியது?, அர்சித் ரெட்டி வழக்கம்போல் மதபூரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்திற்காக வந்திருக்கின்றார்.

தொடர்ந்து, தன்னுடைய காரை பார்க் செய்துவிட்டு உடற்பயிற்சிக்காக புறப்பட்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே உடற்பயிற்சியை முடித்துவிட்டு காரை நிறுத்திய இடத்திற்கு வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் இருந்து கார் காணாமல் போயிருக்கின்றது. இதைக் கண்டு அதிர்ந்துபோன அவர் உடனேயே உணவகத்தின் குவார்டுகளை அழைத்து புகார் தெரிவித்தார்.

மேலும், காவல்நிலையத்திலும் கார் காணாமல்போனது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து, காவல்துறை சிசிடிவி காட்சிகள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ள தொடங்கியது. உணவக சிசிடிவி கேமிரா மட்டுமின்றி சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராக்களையும் காவல்துறையினர் ஆய்விற்கு உட்படுத்தினர். அப்போது, மதபூர் மற்றும் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் அந்த கார் வலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, நகரத்தின் சில பகுதிகளில் அந்த கார் சிக்னல்களை மீறி சென்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே அனைத்து காவல்துறைக்கும் கார் காணாமல் போனது குறித்து அறிவிப்பு வழங்கப்பட்டு, சொகுசு காரில் ஜாலியாக சுற்றி திரிந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த ஐடி ஊழியர் கார் திருட்டில் ஈடுபடுவது முதல் முறை அல்ல என்றும், ஏற்கனவே அவர் வாகன திருட்டில் ஈடுபட்டு இருக்கின்றார் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இந்த ஐடி ஊழியர் கார்களை திருடுவதும் அதில் இருக்கும் எரிபொருள் தீரும் வரை ஓட்டிவிட்டு பின்னர் சாலையில் கைவிட்டு செல்வதுமாக இருந்து வந்திருக்கின்றார். அவ்வாறே ஆடம்பரமான பயணத்தை அனுபவிக்கும் விதமாக தில் ராஜூவின் மருமகனின் காரையும் அவர் களவு செய்திருக்கின்றார். இவர் தற்போது போலீஸ் காவலில் இருக்கின்றார்.

இவரிடம் விசாரிக்கையில் பல அசாதாரணமான தகவல்கள் வெளியாகியதாக காவல்துறை கூறி இருக்கின்றது. இந்த ஐடி ஊழியர் தான் அதிக செல்வாக்கு மிகுந்தவன் என்றும், தனக்கு பெரும் புள்ளிகள் மத்தியில் நட்பு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கின்றார். ஜியோ இன்ஃபோகாம் சேர்மேன் ஆகாஷ் அம்பானி, மாநில அமைச்சர், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோரை தனக்கு தெரியும் என்று அவர் கூறி உள்ளார்.

இதுமட்டுமில்லைங்க ஹைதரபாத் அமைச்சரான கேடி ராம ராவ் கூறியே, தான் தில் ராஜுவின் மருமகனின் சொகுசு காரை களவாடியதாகவும் அவர் கூறி இருக்கின்றார். இவரின் இந்த ஸ்டேட்மென்டுகளை வைத்து அவரின் பின்புலத்தை விசாரிக்கும் பணியில் ஹைதராபாத் காவல்துறை களமிறங்கியது. மிக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவர் ஓர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் மீது ஏற்கனவே பல குற்றவியல் வரலாறு இருப்பதையும் அவருடைய உறவினர்கள் சிலர் உறுதிப்படுத்தினர். மேலும், அழர் பிரைட் லைஃப் பவுன்டேஷனில் மனநல சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவருடைய நண்பர்கள் வட்டாரம் தெரிவித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக குற்றவாளிகள் தாங்கள் செய்த தவறில் இருந்து தப்பிக்க தங்களுக்கு இவரை, அவரை தெரியும் என்று கூறுவது உண்டு. இந்த பாணியையே மன நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நபர் பயன்படுத்தி இருக்கின்றார். காவலர்கள் இந்த நபரின்மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 18, 2023, 16:04 [IST]
English summary
It employee steals car of famous movie producer dil raju s son in law
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X