யாரு வேணாலும் எடுத்துக்கோங்கனு ரோல்ஸ் ராய்ஸ் காரை சாவியோடு விட்டு சென்ற இளைஞர்.. யாருமே சட்டகூட பண்ணல!

"5 நிமிஷத்துக்கு முன்னாடிதாங்க நிறுத்திவிட்டு போனேன் திரும்பி வந்து பார்க்கும்போது வண்டிய காணோம். அதுக்குள்ள யாரோ திருடிட்டு போய்ட்டாங்க" இப்படி பட்ட வாகன திருட்டு சம்பவங்கள் பல நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. தற்போதும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த திருட்டு நிகழ்வுகளை தடுக்க முடியாமல் காவல்துறையும் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.

செக்யூரிட்டி சிசிடிவி (CCTV) கேமிராக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கூட இப்போதெல்லாம் வாகன திருட்டுகள் அதிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இணையத்தையே அதிர வைக்கின்ற வகையில் ஓர் வாகன திருட்டு நிகழ்வு குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டு இருக்கின்றது.

Vlogger leaves key on rolls royce car not stolen in dubai

அந்த வீடியோவில், மர்ம நபர் ஒருவர் மிகவும் அசால்டாக பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை, லாவாகமாக களவு செய்து செய்யும் காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றதன. அந்த பைக் சைடு லாக் போட்டு இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், அந்த லாக்கை அசால்டாக உடைத்துவிட்டு எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் அவர் பைக்கை களவாடிச் சென்றது பார்ப்போரை அதிர வைக்கும் வகையில் அமைந்தது.

இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கும் அதே இணையத்திலேயே மற்றுமொரு வீடியோவும் தற்போது இணைய வாசிகள் மத்தியில் வைரலாகிக் கொண்டு உள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சாவி உடன் அப்படியே விட்டு சென்ற போதிலும் அதனை யாரும் திருடிச் செல்லவில்லை.

Rolls royce car key

இந்த வீடியோவே இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. இத்தனைக்கும் அவர் காரின் சாவியை காரின் பான்னெட்டின் மேற்புறத்திலேயே வைத்து விட்டு சென்றார், இருப்பினும், ஒருவர்கூட அந்த காரை சட்டைச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. சில மணி நேரங்கள் விட்டு செல்லப்பட்ட நிலையிலும், கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலும், சாவி வைக்கப்பட்ட இடத்திலும் அப்படியே இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சம்பவம் அரபு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயிலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக நாடுகள் பல வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால் தவித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் இப்படி ஒரு பாதுகாப்பா தூபாயில் என நம்மில் பலரை இந்த நிகழ்வு வாயைப பிளக்கச் செய்திருக்கின்றது.

ஆடம்பரமான ஷாப்பிங் மால்கள், அல்ட்ரா மாடர்ன் பில்டிங் மற்றும் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் மக்கள் என பலவற்றிற்கு பெயர்போன நகரமாக துபாய் இருக்கின்றது. இந்த விஷயங்களுக்கு மட்டுமில்லைங்க பாதுகாப்பிற்கும் இந்த நகரம் இனி பெயர்போனதுதான். ஆமாங்க, மக்களுக்கு மட்டுமல்ல வாகனங்களின் பாதுகாப்பிற்கும் இந்த நகரம் உகந்த நாடாக மாறி இருக்கின்றது.

இதற்கு சான்றாகவே இந்த சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. இளைஞர் தனியே விட்டு சென்ற ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 6.95 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த இந்தியாவில் விற்கப்படும் அந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விலை உயர்ந்த காரே சாலையோரத்தில் சாவி உடன் இருந்த நிலையிலும் யாரும் அக்காரை திருடிச் செல்லாமல் இருந்திருக்கின்றனர். ஒரு சிலர் அதை பார்த்தும் பார்க்காமல் அப்படியே சென்றதுதான் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கின்றது. வீடியோவில் இடம் பெற்றிருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி ஆகும்.

உலக பணக்காரர்கள் பலரின் பிரியமான சொகுசு காராக இது இருக்கின்றது. மிகவும் அழகான மற்றும் ஆடம்பரமான உட்பகுதியை இந்த கார் கொண்டிருக்கும். இந்த கார் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மற்றுமொரு பதிப்பில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது பிளாக் பேட்ஜ் ஆகும்.

இதன் விலை ரூ. 8.2 கோடி ஆகும். இத்தகைய மிக அதிகபட்ச விலையிலேயே இந்த கார் உலக சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த காரை தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வசதியையும் ரோல்ஸ் ராய்ஸ் வழங்குகின்றது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் அந்த காரின் விலை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என கூறப்படுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி-யில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 600 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும். திரன் கொண்டது. இதன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் இந்த திறனை விட அதிக பவரை வெளியேற்றும். 29 பிஎஸ் மற்றும் 50 என்எம் டார்க்கையே அது வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் பலவற்றில் வாகன திருட்டு மிக மிக அதிக அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், துபாயில் குற்றச் சம்பவங்களின் பலமடங்கு குறைவாக பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இந்த சம்பவம் மிகவும் ஸ்ட்ராங்காக நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 14, 2023, 18:24 [IST]
English summary
It is surprising that no one stole the rolls royce that was left with the keys
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+