மறைக்கப்பட்ட வரலாறு: ரைட் சகோதரர்களுக்கு முன்னரே விமானம் தயாரித்து பறந்து காட்டிய இந்தியர்..!!

Posted By: Staff

விமானத்தை கண்டுபிடித்தவர்கள் என்று போற்றப்படுபவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதர்கள். இவர்கள் 1903ஆம் ஆண்டு தாங்கள் உருவாக்கிய விமானத்தில் பறந்து உலகப் புகழ் அடைந்தனர்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

ஆனால் இவர்கள் ஆகாயத்தில் விமானத்தில் பறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே, விமானம் தயாரித்து அதில் பறந்து காட்டி அசத்தியிருக்கிறார் இந்தியர் ஒருவர்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

மும்பையைச் சேர்ந்த சிவ்கர் பாபுஜி தல்பேட் என்பவர் சமஸ்கிருதம் மற்றும் வேதங்கள் கற்றறிந்த ஒரு சிறந்த அறிஞர் ஆவார்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

இவர் வேதங்களில் உள்ள பறக்கும் இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு சுயமாகவே ஒரு விமானம் தயாரித்து அதில் பறந்தும் காட்டியுள்ளார். இதுவே மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பறக்கும் இயந்திரம் என்று கருதப்படுகிறது.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

ரைட் சகோதர்கள் ஆகாய விமானத்தில் பறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே சிவ்கர் பாபுஜி தல்பேட், தான் தயாரித்த விமானத்தில் 1895ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சொளபதி பகுதியில் பறந்து காட்டியுள்ளார்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்று அமேயா ஜாதவ் ஆகிய இருவரும் பண்டைய கால விமானப் போக்குவரத்து குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது இது தெரியவந்திருக்கிறது.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

இது தொடர்பான ஆய்வறிக்கையை இருவரும் 2015ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 102வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

சமஸ்கிருத அறிஞரான சிவ்கர் பாபுஜி தல்பேட் வேதங்களை கற்றறிந்தவர். அது குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர் ஆவார்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

இவர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறக்கும் இயந்திரங்கள், விமானங்கள் ஆகியவை குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கட்டமாக ஆராய்ந்துள்ளார்.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

மேலும், சப்தரிஷிகளுள் முக்கியமானவர்களான அகத்தியர் மற்றும் பரத்துவாசர் மாமுனிகள் குறிப்பிட்டுள்ளவற்றை ஆராய்ந்து பார்த்தே அதன்படி விமானத்தை தயாரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த வரலாற்றை ஆங்கிலேயர்கள் மறைத்துவிட்டனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 உலகில் முதன் முதலில் விமானம் தயாரித்தது இந்தியர்..??

ரைட் சகோதரர்களுக்கு முன்னதாகவே விமானம் தயாரித்து அதில் பறந்து காட்டியவர் என்று கருதப்படும் சிவ்கர் பாபுஜி தல்பேட்டின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு ஹவாய்சாடா என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about an indian who first flew in plane at 1895 before wright brothers invents a plane.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark