புதியதோர் உலகு செய்ய வரும் ஐ-டேங்க் மூன்றுசக்கர ஸ்கூட்டர்!

Written By:

போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வதற்கு புதுமையான பல போக்குவரத்து சாதனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற புதிய மூன்று சக்கர ஸ்கூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மூன்று சக்கர ஸ்கூட்டர் மாடல்கள் புதிதல்ல என்றாலும், இந்த ஸ்கூட்டர் வழமையான மூன்று சக்கர ஸ்கூட்டர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழில்முனைவரான கார்த்திக் ராம் என்பவர்தான் இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார்.

 ஸ்டார்ட் அப் நிறுவனம்

ஸ்டார்ட் அப் நிறுவனம்

Doohan என்ற தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமாக இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

இந்த புதிய மூன்றுசக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு "தூஹன் இவி3 ஐ-டேங்க்" என்று பெயரிட்டிருக்கிறார்.

ஸ்டைலான மாடல்

ஸ்டைலான மாடல்

இது பார்ப்பதற்கு மிக ஸ்டைலான மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசத்தை விரும்புவர்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

பேலன்ஸ் வீல் சிஸ்டம்

பேலன்ஸ் வீல் சிஸ்டம்

முன்புறத்தில் இருசக்கரங்களுக்கும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் உள்ளன. முன்புற சக்கரங்கள் தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஐ-டேங்க் ஸ்கூட்டரில் கழற்றி மாட்டும் வசதி கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

சார்ஜ் திறன்

சார்ஜ் திறன்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 97 கிமீ தூரம் வரை பயணிக்கும். முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த ஸ்கூட்டர் 0- 48 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும், 15 டிகிரி மேடான சாலைகளில் கூட திக்கித் திணறாமல் ஏறும்.

 விலை மதிப்பு

விலை மதிப்பு

இந்த ஸ்கூட்டர் தயாரிப்பு விசேஷ நிதி திரட்டும் திட்டம் மூலமாக நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பங்குபெறுபவர்கள் 4,000 டாலர் செலுத்த முதலீடு செய்ய வேண்டும்.

வர்த்தக நோக்கம்

வர்த்தக நோக்கம்

ஆஃப்ரோடு, கரடு முரடான சாலைகளுக்கு இது ஏற்றதாக இருக்காது. அதேநேரத்தில், நகர்ப்புறத்திற்கு மிகச்சிறப்பானதாக இருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டர் வர்த்தக பயன்பாடுகள் மற்றும் காவல் துறை ரோந்து பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே, அதனை குறிவைத்தை வர்த்தகம் செய்ய இருக்கிறோம் என்று கார்த்திக் ராம் கூறியிருக்கிறார்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
iTank Three-Wheeled Scooter — The Future Of Urban Transportation?
Story first published: Saturday, August 20, 2016, 18:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark