சரவணா ஸ்டோர் ஓனர் மட்டுமல்ல அதுல துணி எடுப்பவர்களாலும் இந்த பலூனில் பறக்க முடியும்! சீப் விலையில் ஸ்பேஸ் டூர்!
வட ஜப்பானில் உள்ள சப்போரா (Sapporo) பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இவாயா ஜிகென் (Iwaya Giken). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே ஸ்பேஸ் டூர் அழைத்து செல்லும் பலூனை (Balloon Flight) வடிவமைத்திருக்கின்றது.
கடந்த செவ்வாய் கிழமை அன்று நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் வாயிலாக, வெகு விரைவில் இதனை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. பூமியை விண்வெளியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற அனுபவத்தை வழங்கவே இந்த பலூனை இவாயா ஜிகென் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இந்த பறக்கும் பலூனில் பயணிக்க அந்த பயணி கோடீஸ்வரராக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடுத்தர மக்களாலும் பறக்க முடியும்
அதாவது, நடுத்தர வகுப்பைச் சார்ந்த மக்களாலும் பறக்கும் பலூனில் சென்று பூமியை விண்வெளியில் இருந்து பார்த்து ரசிக்க முடியுமாம். இதேபோல், இது விண்வெளி பயணம் என்பதால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுமோ என எண்ண வேண்டாம். சாதாரண நபர்களாலும் இந்த பறக்கும் பலூனில் பயணிக்க முடியும். அதாவது, ஏரோபிளேன் மற்றும் ஹெலிகாப்டரில் பயணிப்பதைப் போல் மிகவும் சுலபமாக இந்த பறக்கும் பலூனிலும் பயணிக்க முடியும்.
ஸ்பெஷல் பயிற்சிலாம் இதுக்கு தேவையில்லை
ஆகையால், ராக்கெட்டில் பறப்பதற்கான கற்றல் அல்லது பயிற்சி இந்த பலூனில் பறக்கத் தேவைப்படாது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கெய்சுகே இவாயாவும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். மிக முக்கியமாக கோடீஸ்வரர்களைக் கருத்தில் கொண்டு இந்த பறக்கும் பலூனை தங்கள் நிறுவனம் உருவாக்கவில்லை என அவர் கூறி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

ஸ்மூத்தான டிராவல் அனுபவம்
மிக எளிமையான வடிவமைப்பு மற்றும் பலூனின் கச்சிதமான அமைப்பே குறைவான கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா அழைத்து செல்ல ஏதுவான தயாரிப்பாக பறக்கும் பலூனை மாற்றி இருக்கின்றது. அதேவேளையில், அதிக பாதுகாப்பான மற்றும் ஸ்மூத்தான விண்வெளி சுற்றுலா அனுபவத்தை இது வழங்கும் என்றும் இவாயா கூறி இருக்கின்றார். இந்த பறக்கும் பலூன் உருவாக்கம் பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே நடைபெற்று வருகின்றது.
கட்டணம் எவ்வளவு?
தற்போது அனைத்து பணிகளும் முடிவுறும் நிலையில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே அனைவருக்குமான பறக்கும் பலூனாக இது இருக்கும் என்கிற தகவலை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதன் கட்டண விபரங்களை இதுவரை நிறுவனம் அறிவிக்கவில்லை. விரைவில் அதுகுறித்த தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு பேர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் பறக்கும் பலூன் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

பூமியில் இருந்து 15 மைல்கள் (25 கிலோ மீட்டர்) பறக்கும் திறன் கொண்டது. இந்த உயரமே பூமியின் வட்டவடிவத்தை தெளிவாகப் பார்க்க போதுமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஜெட் விமானங்கள் பறப்பதை விட அதிக உயரமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பறக்கும் பலூன் உற்பத்தியை ஜப்பானைச் சேர்ந்த முன்னணி டிராவல் ஏஜென்சியான ஜேடிபி குழுமத்துடன் இணைந்தே இவாயா ஜிகென் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.
ஒரு யூனிட்டை தயாரிக்க இவ்ளோ செலவாகுமா?
இப்போதைய நிலவரப்படி ஓர் பறக்கும் பலூனை தயாரிக்க நிறுவனத்திற்கு சுமார் 24 மில்லியன் யென்கள் (ரூ. 1,47,32,126) வரை செலவாகுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை இன்னும் பலமடங்கு குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உற்பத்தி விரிவாக்கம் அடையும்போது அதற்கான செலவும் பலமடங்கு குறையும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் பலூன் ஹீலியம் வாயிலாக இயங்கும் திறன் கொண்டது.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
இந்த ஆண்டின் மைய பகுதி அல்லது இறுதியில் பறக்கும் பலூனின் முதல் பயணம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஒரு விமானி மற்றும் ஒரு பயணி உடன் அது பறக்க இருக்கின்றது. இரண்டு மணி நேரம் பறக்கும் நேரமாகவும், ஒரு மணி நேரம் விண்வெளியை ரசிக்கும் நேரமாகவும் இருக்கும். விண்வெளிக்கு சென்ற பின்னர் பூமியை சுற்றி பார்க்க ஏதுவாக கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
புக்கிங் தொடங்கியாச்சு
விண்வெளி பயணத்திற்கான விண்ணங்களை (முன்பதிவுகளை) ஏற்கனவே ஏற்க தொடங்கிவிட்டது இகாயா ஜிகென் நிறுவனம். முன் பதிவுகள் ஆகஸ்டு இறுதி வரை நடைபெறும். முதலில் ஐந்து பயணிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றார். இவர்களின் பெயர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது. அக்டோபரில் பயணிகளின் பெயர்கள் அறிவிக்கப்படலாம். பெயர்கள் அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு வாரத்திலேயே வானிலைக்கு ஏற்ப பறக்கும் பலூனின் முதல் விண்வெளி பயணம் ஆரம்பிக்கப்படும் என நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
