சல்மான் கான் அளித்த பார்ட்டி... கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்... குடிபோதையில் இருந்தது யார்?

By Arun

பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடிய விடிய அளித்த பார்ட்டியில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் அசம்பாவித சம்பவத்தில் சிக்கி கொண்டார். இது தொடர்பான விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

சல்மான் கான்

பாலிவுட் சினிமா உலகின் உச்ச நட்சத்திரம் சல்மான் கான். கடந்த 1998ம் ஆண்டு மான் வேட்டையாடியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

ஜாமீன்

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் ஓரிரு தினங்களில் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

ரேஸ் 3

சல்மான் கான் தற்போது ரேஸ் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார். ரேஸ் திரைப்பட சீரியஸில் 3வது படமான ரேஸ் 3, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன் 15ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதன் டிரெய்லர் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

நட்சத்திர பட்டாளம்

ரெமோ டிசோசா இயக்கியுள்ள ரேஸ் 3 படத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் மட்டுமின்றி, கோலிவுட், டோலிவுட் ரசிகர்களும் கூட ரேஸ் 3 படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

பார்ட்டி

இதனிடையே மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள சல்மான் கான், ரேஸ் 3 படத்தில் தன்னுடன் இணைந்து நடித்தவர்களுக்கு ஒரு பார்ட்டி அளிக்க முடிவு செய்தார். இந்த சிறிய கெட் டூகெதர் பார்ட்டி மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அப்பார்ட்மென்டில் நடைபெற்றது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

சல்மான் கான் வழங்கிய இந்த பார்ட்டியில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு, அதிகாலையில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

ஆட்டோ ரிக்ஸா மீது மோதல்

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தனது காரில், வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் வழியில், விபத்தில் சிக்கி கொண்டார். அதாவது பந்த்ரா பகுதியில் உள்ள கார்டர் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ரிக்ஸா ஒன்றின் மீது ஜாக்குலின் பெர்ணாண்டஸின் கார் மோதி விட்டது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

யாருக்கும் காயம் இல்லை

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. என்றாலும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் காரின் ஹெட் லைட்டுகள் பலத்த சேதமடைந்து விட்டன. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரச்னையை சரி செய்துள்ளனர்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

குடிபோதையில் இருந்த டிரைவர்

இந்த விபத்து நடைபெற்றதை ஜாக்குலின் பெர்ணாண்டஸே உறுதி செய்துள்ளார். ஆட்டோ ரிக்ஸாவின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவதாகவும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார். எனினும் யாருக்கும் காயம் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

விடிய விடிய நடைபெற்ற பார்ட்டி

முன்னதாக நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் சல்மான் கானின் அப்பார்ட்மெண்டில் பார்ட்டி தொடங்கியுள்ளது. இதன்பின்னர் அதிகாலை 2.20 மணியளவில் சல்மான் கானின் அப்பார்ட்மெண்டில் இருந்து ஜாக்குலின் பெர்ணாண்டஸ் கிளம்பியுள்ளார். வரும் வழியில், அதாவது நேற்று அதிகாலை 2.45 மணியளவில் விபத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கீழே காணலாம்.

காரை ஓட்டியது யார்?

ஆனால் விபத்துக்குள்ளான காரை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ஓட்டி வரவில்லை என கூறப்படுகிறது. அவரது டிரைவர்தான் காரை ஓட்டி வந்துள்ளார். ஜாக்குலின் பெர்ணாண்டஸ் பின் சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

கவர்ச்சியில் கலக்கல்

அமிதாப்பச்சன் உள்ளிட்டோரின் நடிப்பில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான பேண்டஸி அட்வென்சர் படமான அலாவுதீன் மூலம் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் இந்தி சினிமா உலகில் அறிமுகமானார். இதன்பின் கவர்ச்சியில் கலக்க தொடங்கிய ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ஹவுஸ்புல், மர்டர், ஏ ஜென்டில் மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

தொலைக்காட்சி நிருபர்

இந்திய படங்களில் நடித்தாலும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். அவருக்கு 32 வயதாகிறது. கடந்த 2006ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். சிட்னி யுனிவர்சிட்டியில் மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ள ஜாக்குலின் பெர்ணாண்டஸ், இலங்கையில் தொலைக்காட்சி நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

அடிக்கடி காயம்

கடந்த சில மாதங்களுக்கு முன் ரேஸ் 3 படப்பிடிப்பு செட்டில் ஜாக்குலின் பெர்ணாண்டசுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு முறை ஸ்குவாஸ் விளையாடி கொண்டிருந்தபோது அவரது கண்களில் காயம் ஏற்பட்டது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

குடிபோதையில் கார் ஓட்டும் பிரபலங்கள்

இதனிடையே இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் குடிபோதையில் கார் ஓட்டுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி விபத்துக்களிலும் சிக்கி கொள்கின்றனர்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

சர்ச்சைகளின் நாயகன் சல்மான் கான்

இதற்கு முதல் உதாரணமாக சல்மான் கானையே குறிப்பிடலாம். கடந்த 2002ம் ஆண்டு மும்பையின் பந்த்ரா பகுதியில், குடிபோதையில் கார் ஓட்டிச்சென்று, பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த ஒருவரை கொன்றதாக சல்மான்கான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

5 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் கோர்ட் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. எனினும் இதை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்தார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

விடுதலை

சல்மான் கானின் மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சல்மான் கான் குடிபோதையில் இருந்ததை அரசு தரப்பு நிரூபிக்க தவறி விட்டதாக தெரிவித்தது. அத்துடன் இந்த வழக்கில் இருந்து சல்மான் கானை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. எனினும் இந்த வழக்கு காரணமாக அடிக்கடி நீதிமன்ற படிகளை ஏற வேண்டிய நெருக்க பாலிவுட் பாதுஷா சல்மான் கானுக்கு ஏற்பட்டது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

அருண் விஜய்

தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த அருண் விஜய், கடந்த 2016ம் ஆண்டில், குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். அவரது கார் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். எனினும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

ஜெய்

இதேபோல் நடிகர்களான ஜெய் மற்றும் அவரது நண்பர் பிரேம்ஜி ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு சென்னையில் காரில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த ஜெய் குடித்திருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த கார் விபத்தில் சிக்கியது. இதன் காரணமாக ஜெய்யும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

வெய்ன் ரூனி

இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல. உலகில் பல துறைகளை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வெய்ன் ரூனி இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்த சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

ஜார்ஜ் டபிள்யூ புஷ்...!

நம்புங்கள்...அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்தான் அது. ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சர்ச்சையில் அவர் சிக்கியது 1976ம் ஆண்டில். அதாவது அவருக்கு 30 வயதாக இருந்தபோது. இதன்பின் கைது, அபராதம், லைசென்ஸ் தற்காலிக ரத்து என பல்வேறு சட்ட சிக்கல்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

3 லட்சம் உயிர்களை பலி வாங்கிய விபத்துக்கள்

இந்தியாவில் கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதாவது சிம்லா போன்ற சிறு நகரங்களின் மக்கள் தொகையை காட்டிலும் இரு மடங்கு அதிகமான உயிரிழப்புகள் நிகழந்துள்ளன. உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பலி கொடுக்கும் தேசம் நமதுதான்.

சல்மான் கான் அளித்த பார்ட்டி...கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...குடிபோதையில் இருந்தது யார்?

குடிபோதையும், அதி வேகமும்

இந்த விபத்துக்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருப்பது குடிபோதையும், அதி வேகமும்தான். இந்திய சாலைகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால், , ஒரு நாளில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகி வருகின்றன. இந்த விபத்துக்களை எல்லாம் தவிர்ப்பது நமது கைகளில்தான் உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டோம், சாலை விதிகளை பின்பற்றுவோம்என உறுதிமொழி எடுத்து கொள்வது நமது கடமை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01. சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

02.இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு

03.புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இத படிங்க...!

Tamil
மேலும்... #விபத்து #accident
English summary
Jacqueline Fernandez has a car accident while returning from Salman Khan’s party. read in tamil
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more